அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பொது மற்றும் தனியார் துறைகள் | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
அலகு -
2
பொது மற்றும்
தனியார் துறைகள்
கற்றலின்
நோக்கங்கள்
>பொதுத்துறையின் வரலாற்றை அறிதல்
>சமூக - பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு குறியீடுகள் பற்றி அறிதல்
>பொதுத்துறையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
>பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வேறுபாட்டை உணர்தல்
>தனியார் துறைகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்
அறிமுகம்
இந்தியா
சுதந்திரம் அடைந்த பொழுது அடிப்படையில் ஒரு வேளாண்மை பொருளாதார நாடாகவும் பலவீனமான
தொழில் துறையை கொண்ட நாடாகவும் இருந்தது. நாட்டில் அதிக அளவில் வறுமை, கல்வியறிவின்மை
வேலையின்மை நிலவியது. இந்தியா மிகவும் மோசமான பொருளாதார மற்றும் சமுதாய அடிப்படை பிரச்சனைகளை
எதிர்கொண்டு இருந்தது. இதன் காரணமாக நாட்டை முன்னேற்றுவதில் அரசு ஒரு விரிவான பங்கினை
வகிக்க வேண்டிய நிலையில் இருந்தது. எனவே இந்திய பொருளாதாரமானது சமதர்ம அடிப்படையில்
இருக்க வேண்டும் என்று இந்தியா கருதியது. தனியார் துறை மற்றும் பொதுத்துறை கை கோர்ப்பதனால்
ஒரு நிலையான அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்றும் நாடு கருதியது. இந்தியாவில்
கலப்புப் பொருளாதார முறையை பின்பற்றி தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
கலப்புப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவையாகும்.பொது மற்றும்
தனியார் துறை
சிறிய
அல்லது பெரிய, தொழில்துறை அல்லது வர்த்தகம், தனியாருக்குச் சொந்தமான அல்லது அரசாங்கத்திற்குச்
சொந்தமான அனைத்து வகையான வணிக அமைப்புகளும் நம் நாட்டில் உள்ளன. இந்த நிறுவனங்கள் நமது
அன்றாட பொருளாதார வாழ்வில் பங்கு கொள்வதால், இவை இந்திய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக
திகழ்கிறது. இந்திய பொருளாதாரம் தனியாருக்கு சொந்தமான மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான
வணிக நிறுவனங்களைக் கொண்டிருப்பதால், இது ஒரு கலப்பு பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்திய அரசியல் பொருத்தமான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து கலப்புப் பொருளாதாரத்தைச்
செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரத்தை இரு துறைகளாக அதாவது தனியார் துறை
மற்றும் பொதுத்துறை என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
சமூகத்தின்
அனைத்துப் பிரிவுகளின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார்
துறைகளுக்கான பணிகள் ஒதுக்கப்படுகின்றன. பொதுத்துறை தொழில்கள் அதன் அரசாங்கத்தின் உரிமையின்
கீழ் உள்ளன, அதே நேரத்தில் தனியார் துறை தொழில்கள் தனியார் நபர்களின் உரிமையின் கீழ்
உள்ளன. பொதுத்துறை ஒரு பொருளாதாரத்தின் முழு வளர்ச்சியைச் செயல்படுத்துகிறது. பொதுத்துறை
சேவை நோக்கத்திலும், தனியார் துறை இலாப நோக்கத்திலும் செயல்படுகிறது.