பொது மற்றும் தனியார் துறைகள் | அலகு 2 | பொருளியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Economics : Chapter 2 : Public and Private Sectors
மதிப்பீடு
I சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. இந்தியாவில் பொதுத் துறைகளின் தோற்றத்திற்குக்
காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ---------------- ஆம் ஆண்டு கொண்டு
வரப்பட்டது.
அ)
1957
ஆ)
1958
இ)
1966
ஈ)
1956
[விடை: ஈ) 1956]
2. கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
அ) முதலாளித்துவம்
ஆ) சமதர்மம்
இ) அ
மற்றும் ஆ சரி
ஈ) அ
மற்றும் ஆ தவறு
[விடை: இ) அ மற்றும் ஆ சரி]
3. --------------------- நிறுவனச் சட்டம்
மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
அ) தனியார்
துறை
ஆ) கூட்டு
துறை
இ) பொதுத்துறை
ஈ) இவற்றில்
எதுவுமில்லை
[விடை: ஆ) கூட்டு துறை]
4. பொதுத்துறை ---------------------- உடையது.
அ) இலாப
நோக்கம்
ஆ) சேவை
நோக்கம்
இ) ஊக
வணிக நோக்கம்
ஈ) இவற்றில்
எதுவுமில்லை
[விடை: ஆ) சேவை நோக்கம்]
II கோடிட்ட
இடங்களை நிரப்புக
1. தனியார் துறை மற்றும் பொதுத் துறை ஆகியவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின்
பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. தனியார்
துறை லாப
நோக்கத்தில் செயல்படுகிறது.
3. சமூக பொருளாதார
மேம்பாடு என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின்
செயல்முறையாகும்.
4. தனியார்
துறையின் முக்கிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்பது புதுமை மற்றும் நவீனமயமாதல்
ஆகும்.
5. குடிமக்கள்
மத்தியில் சமூக
பொருளாதார மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதி
பூண்டுள்ளது.
III பொருத்துக
1. மதியுரையகக்
குழு- முதன்மை துறை
2. வேளாண்மை
- மொத்த உள்நாட்டு உற்பத்தி
3. தொழில்கள்
- நிதி ஆயோக்
4.
GDP - இரண்டாம் துறை
விடைகள்
1. மதியுரையகக் குழு - நிதி ஆயோக்
2. வேளாண்மை - முதன்மை துறை
3. தொழில்கள் - இரண்டாம் துறை
4. GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி
IV பொருத்தமற்றவைக்
கூறுக
1. சமூகப்
பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை
.
அ) கருப்புப்
பணம்
ஆ) ஆயுட்காலம்
இ) மொத்த
உள்நாட்டு உற்பத்தி (GDP)
ஈ) வேலைவாய்ப்பு
விடை: அ) கருப்புப் பணம்
V பின்வருவனவற்றுள்
எது சரியான விடை
1 i)
அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை - A என குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார்
துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளைத்
தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை - B என குறிப்பிடப்படுகின்றன.
III)
தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை .
அ) அனைத்தும்
சரி
ஆ) I
மற்றும் iii சரி
இ) I
மற்றும் ii சரி
ஈ) இவற்றில்
எதுவும் இல்லை
விடை: இ) I மற்றும் ii சரி
VI பின்வரும்
வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்
1. பொதுத் துறைகள் குறித்து சிறு குறிப்பு
எழுதுக?
> அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும்.
> நிறுவனங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் என அனைத்தும்
மத்திய அல்லது மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக இருக்கும். அரசாங்கமே அதை நடத்தும்.
கட்டுப்படுத்தும்.
2. சமுதாய தேவை என்றால் என்ன?
> அஞ்சல் சேவைகள்
> இரயில்வே சேவைகள்
> பாதுகாப்பு
> கல்வி
> சுகாதார வசதி
> வேலை வாய்ப்பு
3. பொதுத்துறையின் நோக்கங்களை எழுதுக?
> உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதன் மூலம்
விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
> வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்.
> வருமானம் மற்றும் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்.
> வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். >
> சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
> சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
> ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கு மாற்றீடை துரிதப்படுத்துதல்.
4. பொதுத் துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?
> அரசுத் துறையால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
> கூட்டுத்துறை நிறுவனங்கள்
> பொதுக்கழகம்
5. சமூக - பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில
குறியீடுகளின் பெயர்களைக் கூறுக.
>
மொத்த உள்நாட்டு உற்பத்தி
>
ஆயுட்காலம்
>
கல்வியறிவு
>
வேலைவாய்ப்பின் அளவு
6. தனியார் துறை குறித்துச் சிறு குறிப்பு
எழுதுக?
> தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு
மற்றும் நிர்வகிக்கப்படும் தேசிய பொருளாதாரத்தின் ஒரு பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.
> தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும்.
> தனியார் துறையின் பங்களிப்பு பொதுத் துறையின் பங்களிப்பை விட அதிகமாக
உள்ளது.
7. தனியார்துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை
கூறுக.
> இன்போசிஸ் நிறுவனம்
> ஆதித்யா பிர்லா நிறுவனம்
> டாட்டா குழும் நிறுவனங்கள்
VII விரிவான விடை தருக
1. பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக.
அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும்
நிறுவனங்கள்:
> ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும்
பொதுவானதாகும்.
> எடுத்துக்காட்டு: தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை, இந்தியாவிலுள்ள
நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவை.
> கூட்டுத் துறை நிறுவனங்கள்
:
இது ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம்
ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
> எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை
டேங்கிங் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர்
நிறுவனம். .
> பொதுக் கழகம்: பொதுக்கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால்
பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்.
> எடுத்துக்காட்டு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC), ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி,
மின்சார வாரியம்.
2. பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக.
> இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில்துறை தளத்தைக்
கொண்ட வேளாண்மை நாடாகும்.
> தொழில் வளர்ச்சி இல்லை.
> தேசிய ஒருமித்த கருத்து பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாதலுக்கு
ஆதரவாக இருந்தது.
> 1948இல் முதல் தொழில் துறைக் கொள்கை கொண்டுவரப்பட்டது.
> 1950இல் திட்டக்குழு அமைக்கப்பட்டது.
> 1951ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் நோக்கம்
தொழிற்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதே ஆகும்.
> பிரதமர் நேரு கலப்புப் பொருளாதாரம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையைக்
கொண்டுவந்தார்.
> அவர் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு,
அடிப்படை கனரக தொழிற்சாலைகளை நிறுவுவது என நம்பினார்.
> அதன்படி இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
> இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படும்
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நேருவின் பார்வையை முன்னெடுத்துச் சென்றார்.
> இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா. பி.சி. மஹலானோபிஸ் அதன் உருவாக்கத்திற்குக்
கருவியாக இருந்தார்.
> 1991ஆம் ஆண்டின் தொழில்துறைக் கொள்கை தனியார் துறைக்கு அதிக சுதந்திரம்
அளித்தது.
> இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
.
> இதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் நுழைந்தன.
> இவ்வாறு, இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார்
துறை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
3. சமூக - பொருளாதார மேம்பாட்டினை அளவிடும்
குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக.
மொத்த உள்நாட்டு
உற்பத்தி:
> மொத்த உள்நாட்டு உற்பத்தி சமூக - பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில்
துணைபுரிகிறது.
> பொதுத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
> அது அரசின் நிதியையும் பொதுச் செலவுகளையும் அதிகரிக்கிறது.
ஆயுட்காலம்:
பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை
வழங்குகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
கல்வியறிவு:
> சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.
> அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) இந்திய அரசின் திட்டமாகும்.
இது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
> கல்வியின் தரத்தின் அளவை அதிகப்படுத்த இடைநிலைக் கல்வித்திட்டம்
(RMSA), திறன் வகுப்பு (Smart Class) மற்றும் மின்ன ணு-கற்றல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பு:
> அதிக எண்ணிக்கையில் மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.
இதனால் நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
> இதனால் அரசு “திறன் நகரம்" (Smart City) திட்டத்தைத் தொடங்கியது.
> வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக மின்சார வரிச்சலுகை போன்ற பல
சலுகைகள் மூலமாக தனியார் துறைகளை தொழில்களைத் தொடங்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
வீடு, சுத்தமான
குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்
வழங்கப்படுகிறது. இதனால் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கப்படுகிறது. .
> இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.
4. பொதுத் துறையின் முக்கியத்துவம் யாது?
பொதுத்துறை மற்றும்
மூலதன உருவாக்கம்:
திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு
மிக முக்கியமானதாக விளங்குகிறது.
பொருளாதார மேம்பாடு:
பொருளாதார வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தது. சிறு தொழில்களுக்கு
மூலப்பொருட்களை வழங்க இரும்பு மற்றும் எஃகு, கப்பல் போக்குவரத்து, சுரங்கம் போன்ற கனரக
மற்றும் அடிப்படை தொழில்கள் தேவைப்படுகின்றன.
சமச்சீரான வட்டார
வளர்ச்சி:
பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில்
அமைத்துள்ளன. இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தது. இந்த வசதிகளை வளர்ச்சியடையச்
செய்வதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளன.
வேலைவாய்ப்பு உருவாக்கம்:
பொதுத்துறை நிறுவனங்கள் இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. இதனால்
மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதி ஊக்குவிப்பு
மற்றும் அந்நிய செலாவணி வருவாய்:
சில பொது நிறுவனங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த அதிக பங்களிப்பு செய்துள்ளன.
மாநில வர்த்தக நிறுவனம் (STC), தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக நிறுவனம் (MMTC) போன்றவை
ஏற்றுமதி மேம்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
நலிவடைந்த தொழில்களுக்கு
பாதுகாப்பு:
நலிவடைந்த பிரிவு மூடப்படுவதைத் தடுக்கவும், பலர் வேலையில்லாமல் இருப்பதைத்
தடுப்பதற்காகவும் நலிவடைந்த தொழிற்சாலைகளின் பொறுப்பை பொதுத்துறை ஏற்றுக்கொண்டு அத்தொழிற்சாலைகள்
மூடப்படுவதைத் தடுக்கிறது.
இறக்குமதி மாற்று:
சில பொதுத்துறை நிறுவனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை
உற்பத்தி செய்வதற்காகவும், அந்நியச் செலாவணியை
சேமிப்பதற்காகவும் தொடங்கப்பட்டன.
5. பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள
வேறுபாடுகளை எழுதுக?
6. தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக?
> தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை
உருவாக்குவதாகும். இலாப நோக்கத்திற்காக உற்பத்தியில் புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கும்,
உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களைத் தூண்டுகிறது.
> உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
> இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் விரிவுப்படுத்துதல்.
> மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு
குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல். சமூக வணிக மற்றும் கூட்டுறவு, உள்ளூர்
பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை
ஊக்குவித்தல்.
> சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMME) வழங்குவதன் மூலம்
அளிப்பு மற்றும் தேவை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளைக் கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை
ஈர்த்தல்.
VIII செயல்பாடு
வாழ்நாள்
ஆயுட்காலம் - நீண்ட மற்றும் ஆரோக்கியமானவாழ்க்கையை நடத்துவதற்கான திறன்.
IX வாழ்க்கைத்
திறன்கள்
1. ஆசிரியரும்
மாணவர்களும் சமூக - பொருளாதார மேம்பாடு மற்றும் அந்த வட்டாரத்தில் தொழில்துறை வளர்ச்சி
மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.