இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru
இயல் 3 : கூட்டாஞ்சோறு : திறன்
அறிவோம்
பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.
1. பின்வருவனற்றுள் முறையான தொடர்.
(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கும் இடமுண்டு
(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு)
[விடை: தமிழர் பண்பாட்டில் வாழை
இலைக்குத் தனித்த இடமுண்டு]
2. ”சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் ”பாக்கம்” என்பது சிற்றூர்.
அ) புத்தூர்
ஆ) மூதூர்
இ) பேரூர்
ஈ) சிற்றூர்.
[விடை: சிற்றூர்.]
3. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தல் காரணமாக அமைவது
-
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
[விடை : வேற்றுமை உருபு]
4. காசிக் காண்டம் என்பது -----------------------------------
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும்
நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
[விடை : காசி நகரத்தின் பொருமையைப் பாடும் நூல்]
5. “விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள்
தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து
விருந்தளித்தான் என்கிறது புறநானூறு". இச்செய்தி உணர்த்தும்
விருந்து போற்றிய நிலை -
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
[விடை : இன்மையிலும் விருந்து]
குறுவினா
1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும்
முகமன் சொற்களை எழுதுக.
• வாருங்கள் வாருங்கள்
• உங்கள் பயணம் இனிமையாக இருந்ததா?
• உட்காருங்கள்
• அங்கு எல்லோரும் நலமாக உள்ளார்களா?
• தண்ணீர் குடியுங்கள்
2. "தானியம் ஏதும் இல்லாத நிலையில்
விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள்
தலைவி" என்பது இலக்கியத் செய்தி. விருந்தோம்பலுக்குச்
செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
• "வெறுங்கை முழம்
போடுமா" என்ற பழமொழியைக் கூறியவர்கள் நம் முன்னோர்கள்.
எனவே, விருந்தோம்பலுக்கு செல்வம் மிகவும் இன்றியமையாததாகும்.
• "மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு" என்ற பழமொழியும் முன்னோர்கள் கூறி வைத்தனர்.
விருந்தினரை உபசரிக்க வேண்டும். என்ற மனநிலை இருந்தால்
மட்டுமே வறுமையிலும் விதைக்காக வைத்திருந்த தானியத்தைக் குற்றி உணவளிக்க முடியும்.
3. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு
காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்
தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு
அடுக்குத் தொடராகும்?
சிரித்து சிரித்துப் பேசினாாள் என்று உவகை மகிழ்சியின் காரணமாக அடுக்குத்
தொடராகும்
4. "இறடிப் பொம்மல் பெறுகுவீர்"
தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
கூத்தரே! தினைச் சோற்றைப் பெறுவீர்கள்.
5. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய
தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
கவிஞர், சென்றார், யார்
? (பெயர், வினை, வினா பயனிலைகள்)
சிறுவினா
1. "கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஒய்ந்துறங்கு! - இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள
தொடர் வகைகளை எழுதுக.
கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
காலையில் நீரியெழும்பு - 5ஆம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்
மாமழை பெய்கையில் - உரிச்சொல் தொடர்
மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு - வினைமுற்று தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத் தொடர்
2. முல்லை நிலத்திலிருந்தும் மருத
நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
முல்லை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் :
தினை, வரகு, சாமை, முதிரை, பால், நெய்
மருத நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்:
• செந்நெல்லரசி
• வெண்ணெல்லரிசி
• தினைச் சோறு
3. • புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு
வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
• திருவிழாக் காலங்களில் ஊருக்கு
வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய
மாற்றங்கள் குறித்து கருத்துகளை எழுதுக.
• திருமணம், வளைகாப்பு,
புதுமனை புகுவிழா, காதணி விழா போன்றவற்றை இல்ல
விழாக்களாகவே கொண்டாடினர் தமிழர். ஆனால் தற்போது வீட்டில் நடைபெறும்
சிறுவிழாக்கள் கூட திருமண மண்டபங்கள், உணவங்களுக்கும் இடம் பெயர்ந்து
விட்டன.
• கால மாற்றத்தால் விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. இன்று வீட்டிற்கு முன்பு திண்ணை வைத்துக் கட்டுவதும்
இல்லை. அறிமுகம் இல்லாத புதியவர்களை விருந்தினராக ஏற்பதும் இல்லை.
காரணம் மனித நேயம் இல்லை. தன் வீடு தன் மனைவி,
தன் பிள்ளை என்ற சுயநலமே காரணமாகும்.
• பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது
முதல் உபசரித்து வழியனுப்புகிற வரையிலும் திருமண ஏற்பாடு செய்திருக்கக் கூடிய தனியொருவராக
செய்யும் நிலைக்கு மாறிவிட்டது. ஒரு வாழை இலை
சாப்பாட்டிற்கு இவ்வளவு கட்டணம் என்று இருக்கக் கூடிய கால கட்டம் தற்போது உள்ளது.
விருந்து அருகிப் போனதற்கு சுயநலமும், குறுகிய
மனப்பான்மையும் நகர்புறம் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததும் காரணமாக அமைகின்றன.
4. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்டுத்துதலை
கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
ஆற்றுப்படுத்துதல் :
ஆற்றுப்படுத்துதல் என்பது ஒரு கூத்தன் வள்ளலைப் பாடி பரிசு பெற்றுவரும்
போது வள்ளலை நாடி எதிர் வரும் கூத்தனை அழைத்து யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம்
பெற்று வருகின்றோம்.
நீயும் அவ்வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக எனக் கூறுதல்.
பயணம் மேற்கொள்ளல்:
பகலில் இளைப்பாறி செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல் ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு
அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்கள்,
அசையும் மூங்கில்களின் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில்
உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்கு உள்ளவர்களிடம் பகைமை பொறாமல்
போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று
சொல்லுங்கள்.
இனிய சொல்லில் பேசி உணவு அளித்தல் :
நீங்கள் உரிமையுடன் நன்னன் ஊரார் வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்கள் உங்களுக்கு உறவினர்கள் போலப் பழகி இனிய சொற்களைப்
பேசி நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாக அளிப்பர் மேற்கண்டவாறு
ஒரு கூத்தன் வழி தேடி வரும் கூத்தனுக்கு ஆற்றுப்படுத்தினான்.
நெடுவினா
1. ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப்
புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களையும் நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது.
அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
அன்றைய ஆற்றுப்படுத்துதல் :
• வாழ்க்கையத் தேடி வருபவர்களை பரிசு பெற்று வரும் புலவர்களோ, கலைஞர்களோ பரிசு பெற வழிக்காட்டி ஆற்றுப்படுத்தினர்கள்.
• பாடி பரிசு பெறச் செல்லும் புலவர்களும் கலைஞர்களும் பகலில் இளைப்பறிச்
செல்லுங்கள் என்றும் இரவில் சேர்ந்து தங்குங்கள்.
• எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு
அணிந்து கொள்ளுங்கள். அசோக மரங்கள் இருக்கும் பாதையில் செல்லுங்கள்.
ஒரு சிற்றூரை அடையும் இந்தப் பாதை. அங்கு நாங்கள்
நன்னனின் கூத்தர் என்று சொல்லுங்கள்.
• உரிமையுடன் அச்சிற்றூரில் உள்ள வீட்டிற்குள் நுழையுங்கள். உறவினர்களைப் போல இனிமையாகப் பேசுவார்கள். நமக்குத் தேவையான உணவைத் தருவார்கள். மகிழ்ச்சியுடன்
உண்ணுங்கள் என்று ஆற்றுப்படுத்தி வழி அனுப்பினார்கள்.
இன்றைய வழிக்காட்டும் நிலை:
• வழிகாட்டல் நிலை பல உள்ளன. அவைகளில்
கல்வி ஆளுமை வளர தேர்வில், திருமணத்தில் தனிநபர் பிரச்சினைக்கு
ஓய்வு நேரத்தைப் பயனள்ளவையாக அமைய வழிகாட்டல் எனப்பல துறைகள் இன்று இருந்து வருகின்றன.
• கல்வி வழிக்காட்டுதலில் நம் திறன்களுக்கு ஏற்ற வகையில் கல்வி கிடைக்கும்
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திறமையாகக்
கற்று, நமக்குத் தேவையான படிப்பபைத் தேர்ந்தெடுக்கவும் துணை புரிகிறது.
• புதிய படிப்புகளை அறியவும், இதற்குத்
தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரிகிறது.
• தொழில் தேர்வில் வழிகாட்டுதலானது வெவ்வேறு பணிகளைப்
பெறவும், அப்பணிகளைப் பெற கல்வித்தகுதி, பயிற்சிகள் பணியின் வளர்ச்சி நிலைகள் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது.
• தனி நபர் வழிகாட்டுதலுக்குத் தேவையான மனவெழுச்சி சமநிலையும், மன நலமும் அமைய வேண்டும் வீண் கவலைகள், சிந்தனைகள், போராட்டங்கள் அனைத்தையும் தவிர்ப்பதற்கு
வழிகாட்டுதலாக அமைகிறது. ஆற்றுப்படுத்துதலின் பழைய காலப் பண்பு
இன்று வழிக்காட்டலாக ஒரு சேவைத் துறையாக வளர்ந்துள்ளது. நிலம்
வாங்கவும், திருமணம் பேசி முடிப்பது, வாகனங்கள்
விற்க வாங்க, வீடுகள் விற்க வாங்க, ஒத்திகை,
வாடகை போன்ற வழிகாட்டல் முறை இன்று செழித்து வளர்ந்து வருகின்றது.
2. அன்னமய்யா என்னும் பெயருக்கும்
அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி
கொண்டு விவரிக்க.
முன்னுரை :
கோபல்லபுரத்து கிராமத்து வெள்ளந்தியான மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல்
மனதிற்கு பசுமரத்தாணி போல" எப்பவும் பசுமையாக
இருக்கும் இவர்களது எளிமையான உணவு களைப்பை மறக்கடிக்கச்செய்யும். பகிர்ந்து கொடுக்கும் நேயப்பண்பு ஆகியவற்றைப் பற்றி இக்கதையில் பின்வருமாறு
ஆசிரியர் கி. ராஜ நாராயணன் தெளிவாகக் கூறுகிறார்.
புளியமரத்தடியில் வாலிபன்
புளியமரத்தடியில் அழுக்கும் ஆடையும் தாடியுடன் சாமியாரைப் போன்று ஒரு
வாலிபன் சாய்ந்திருந்ந்தான். அன்னமய்யா அருகில்
சென்று பார்த்த பிறகு தான் பசியால் வாடிப்போய் அந்த வாலிபன் முகத்தில் தெரிந்த கண்களின்
தீட்சண்யம் கவனிக்கக் கூடியதாய் இருந்தது.
வாலிபன் தண்ணீரை கேட்டல்
அன்னமய்யாவைப் பார்த்து ஒரு நேரப் புன்னகையும் அந்த வாலிபன், குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? எனக் கேட்டான் அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீர் அருகில் உள்ளவர்களிடம் இருக்கும்
வாங்கிவரவா? ஏனக் கேட்டான் பக்கத்தில் இருந்த ஒரு வேப்பமரத்தின்
அடியில் கறுப்புக் கலயத்தில் கரிய மண் தரையில் பாதி புதைக்கப்பட்டு கலயங்களின் வாய்
தேங்காய் பருமன் உள்ள கற்களால் மூடப்பட்டியிருந்தது. அன்னம்ய்யா
ஒரு கலயத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்
ஜீவ ஊற்று பொங்குதல் :
கலயத்தின் மூடியாய் இருந்த சிரட்டையில் காணத்துவையிலும் ஊறுகாயும் இருந்தன
மற்றொரு சிரட்டையில் மோர்மிளகாயும் இருந்தது. ஒரு சிரட்டையில் கஞ்சியின் நீத்துப்பாகத்தை
ஊற்றிக் கொடுத்தான். வாலிபனும் மடக்கு மடக்காய் குடிக்கும் பொழுது அவனிடத்தில் ஜீவ
பொங்கி நிறைந்து வந்தது.
தாய்மை உணர்வு :
நீத்துக் தந்த தண்ணீரை குடிக்க வாலிபன் வேப்பமர நிழலைச் சொர்க்கமாய்
நினைத்து துாங்கினார். வாலிபகுக்கு ஏற்பட்ட
நிறைவை விட அன்னமய்யாவிற்கு தாய்மை உணர்வு மேலிட்டது. மார்பில்
பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப்
போலவே வாலிபனை பிரியத்தோடு பார்த்தான் அன்னமய்யா.
முடிவுரை
"மனமிருந்தால் மார்க்கம் உண்டு"
மனித நேயமே உயர்வான பண்பு''
தாய்மை உள்ளம் கொண்ட அன்னமய்யாவிடன் மயக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் ''உன் பெயர் என்ன? என்று
கேட்டான். அதற்கு தன் பெயரைக் கூறினேன்" எனக்கு இன்று இடும்
அன்னம் தான்" என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று
மனதிற்குள் நினைத்துக் கொண்டு உன் பொருளுக்கு ஏற்ப அன்னமிட்டு மனித நேயம் காத்து வாழ்வாயாக
என வாழ்த்தினான்.
3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு
நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
நீண்ட நாட்களாக எங்கள் வீட்டிற்கு வராத என் தாய்மாமா சென்னையிலிருந்து
வருகை புரிந்தார். அவரை வாங்க!
வாங்க மாமா நலமாக உள்ளீர்களா, அங்கு அத்தை மற்றும்
வீட்டில் உள்ள அனைவரும் நலமாக உள்ளார்களா? உட்காருங்க மாமா தண்ணீர்
கொண்டு வருகிறேன் என்றேன்.
வீட்டிற்கு வந்த மாமாவுக்கு அறுசுவை உணவையும் தயார் செய்து சாப்பிட
வருமாறு அழைத்தேன். நம் தமிழர் தலைவாழை
இலையில் விருந்தினருக்கு உணவுபரிமாறுவது மரபாகும். அதன் படி என்
மாமாவிற்கு உணவு பரிமாறினேன்.
"வாழை இலையின் கறிவகைகள் - சூழ வைத்துக்” என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி வாழையிலையை
விரித்து, இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு, சிறிய வகை உணவு
வைத்தேன் வலது ஓரத்தில் காய்கறி கீரை, கூட்டு, பெரிய உணவு வகையும் நடுவே சோறுவைத்தேன்.
மாமா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சுவையாக இருக்கிறதா மாமா என்று
கேட்டேன்.
அவர் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகையை போதும் என்று சொல்கிற வரை மீண்டும்
மீண்டும் வைத்தேன்.
மாமா சாப்பிட்டு எழுந்தவுடன் கைகழுவதற்கு ஒரு சொம்பில் தண்ணீரைக் கொண்டு
வந்து கொடுத்தேன். பின்பு ஒரு தட்டில்
வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு கொடுத்தேன். அதை அவர் மகிழ்வுடன் உண்டார். பின்பு மாலையில் சூடான
இட்டிலியுடன் சட்டினி சாம்பார் விருந்து வைத்தேன். மறு நாள் காலையில்
சூடான தேநீர் பருகக் கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து ரவை கேசரி,
தக்காளிச்சோறும், சப்பாத்திக் குருமாவும் தயார்
செய்து நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவருடன் சேர்ந்து வட்டமாக உட்கார்ந்து
சாப்பிட்டு மகிழ்ந்தோம்.
கற்பவை கற்றபின்...
1. படங்கள் உணர்த்தும் குறளின்
கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
2. கதைக்குப் பொருத்தமான குறளைத்
தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
"சின்னச்சாமி... யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க..... யாராய்
இருக்கும்...." மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
"தெரியலப்பா ..."
"இறங்கி யாருன்னு பாரு...."
வாட்டசாட்டமாய், கண்ணாடியும்
அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்..
"ஐயா..நீங்க..."
"வெளியூருப்பா.. வண்டி நின்னு போச்சு....!"
"அப்படியா... வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு
வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது..."
அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும்
பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில இருந்தோம்.. சிறிது
தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு... நாங்க வீட்டுக்குப்
போயிட்டோம்.
இரவுல தூங்கப் போறப்ப... அப்பா சொன்னார். தம்பி.... அந்த
சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு... வேற
யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில.. கட்டுப் போட்டுக்கிட்டு
இருந்தாங்க... பாவம் படிச்சவரா இருக்காரு... சூழ்நிலை புரியாம... வரமாட்டேன்னு
சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே...
அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆ) பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்.
குறுவினா
1. ‘நச்சப்படாதவன்’ செல்வம் -
இத்தொடரில் வண்ணம் இட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன். ஆகையில், எவராலும்
விரும்பப்படாதவர்.
2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இக்குறளில்
வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் - இன்னிசை அளபெடை
3. பொருளுக்கேற்ற
அடியைப் பொருத்துக.
உயிரைவிடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் : உயிரினும் ஓம்பப் படும்
ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது : நடு ஊருள் நச்சு மரம்
பழுத்தற்று
ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
4. எய்துவர்
எய்தாப் பழி - இக்குறளடிக்குப்
பொருந்தும் வாய்பாடு எது?
(அ) கூவிளம் - தேமா - மலர்
(ஆ) கூவிளம் - புளிமா - நாள்
(இ) தேமா - புளிமா - காசு
(ஈ) புளிமா - தேமா - பிறப்பு
[விடை: கூவிளம் - தேமா – மலர்]
சிறுவினா
1. வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு''
- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி சுட்டல் :
இக்குறளில் உவமையணி இடம் பெற்றுள்ளது.
இலக்கணம்
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் (பொருள்) ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் உவம உருபு வெளிப்பட்டு வருவது
உவமையணி எனப்படும்.
விளக்கம் :
வழிப்பறி செய்பவன் வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி
செய்வான். அதுபோல, ஓர் அரசன் தன் ஆட்சி
அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு அதிகமான வரியை விதிக்கின்றான்.
பொருத்தம்
உவமை - வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்தல் உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக்
கொண்டு மன்னன் வரி விதித்தல் உவம உருபு - போல்
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து, உவம உருபு வெளிப்பட்டு வந்துள்ளதால் இது உவமையணியாகும்.
2. கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
இதைப் பார்த்து என் நெஞ்சும் பதறுதடி
இரக்கம் இல்லா மனிதர்கள்
உண்மை அறியாத மனிதர்கள்
தங்களுக்கும் இந்நிலை வரும் என அறியாமல்
முகநூலில் போட அலைகிறதே!
மனிதநேயம் செத்துப் போச்சே
திருக்குறள் பற்றிய கவிதை
உரை (றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்
- அறிவுமதி