Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 3 : Kutaanchoru

   Posted On :  21.07.2022 05:08 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க

சர்க்கரைப் பொங்கல்

இளஞ்சிவப்பாக வறுத்த, பாதி உடைத்த பருப்பும் பச்சை அரிசியும் பானையில் கொப்புளமிட்டுக் கொதிக்க, மென் துணியில் வடிகட்டிய வெல்லக் கரைசல் நார்ப்பாகு பதத்தில் வெந்த பொங்கலுடன் கலக்கின்றது. உலர்ந்த திராட்சைகள் பசு நெய்யில் தங்கமென ஊதி உருண்டு வர, பிறை போன்ற முந்திரிப் பருப்புகள் அதனுள் சேர்த்து மின்னுகின்றன. காற்றெங்கும் பால் கலந்த இனிப்பின் வாசம். இனி, இடித்த ஏலக்காய் தூவ, எல்லாமும் பொங்கலுடன் இணைந்து குழைய, இந்தச் சர்க்கரைப் பொங்கலின் தித்திப்பு திகட்டாது. நறுக்கிய ஈர வாழையிலையில் ஒரு அகப்பை சுடும் பொங்கலிட, அது விழுந்தெழுப்பும் மணம், அறுவடையின் மகிழ்வு அது! சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை (திருக்குறள்1031). 

 

மொழிபெயர்க்க.

Respected Ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam Literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamil who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very is old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

மரியாதைக்குரிய என் சகோதர சகோதரிகளே என்னுடைய பெயர் இளங்கோவன் . நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழர் நாகரித்தைப் பற்றிய ஒரு சில வார்த்தைகள் உங்கள் முன் பேச விழைகிறேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழரின் நாகரிகமும் பண்பாடும் சிறந்து விளங்கியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மொழிக்கும் இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர் தமிழர்களின் நாகரிகம் இந்தியா, ஸ்ரீலங்கம் இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது நம் நாகரிகம் பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம்நம் கலாச்சராத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இனிய நன்றி.

 

பழமொழிகளை நிறைவு செய்க.

1. உப்பில்லாப் ------------------------.

2. ஒரு பானை ------------------------.  

3. உப்பிட்டவரை ------------------------.

4. விருந்தும் ------------------------.

5. அளவுக்கு ------------------------.

விடை :

1. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3. உப்பிட்டவரை உள்ளவும் நினை

4. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்

5. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

 

பத்தியைப் படித்து கருத்தைச் சுருக்கி எழுதுக.

பழைய சோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து காய்ந்து குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும்; விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்த்து கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு - அது கிராமத்து உன்னதம்.

"மைக்கடல் முத்துக்கு ஈடாய்மிக்க நெல்முத்து“ ....... முக்கூடற்பள்ளு"

கண்ணன், பிரசாந்தி சேகரம் -அடிசில் 2017

விடை :

அறுவடை செய்த நெல்லை நீராவியில் அவித்து காயவைத்து குத்தி எடுத்த புழுங்கல் அரிசியை சோறாக்கி அதனை உச்சி வெயிலுக்கு ஏற்ற உணவாக இரவு நேரத்தில் நீரில் ஊறவைத்து கிடைத்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய் உப்பு நாரத்தங்காய் மற்றும் சுண்ட வைத்தகுழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

 

கதையாக்குக.

"மனித வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம். புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக ..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.''

ஒரு நாளையில் நான் காலையில் ஒரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது ஒரு புதரில் வயதானவர் பசியால் வாடி வதங்கிக் கிடந்தார். உடனே அருகில் சென்று அவரை விசாரித்தேன். தனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நல்ல பணியில் உள்ளனர். இருந்தும் என்னைக் கவனிக்கவில்லை என்று கூறினார்.

அவரை அழைத்துச் சென்று ஓர் இடத்தில் அமரச் செய்து விட்டு வயதானவர்க்குத் தேவையான உணவைக் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவ்வுணவினைச் சிறிது சிறிதாகச் சாப்பிட்டார். பின் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து முதியவர் காப்பகத்தில் சேர்த்து விட்டேன். அவருக்கு ஒவ்வொருமாதமும் தேவையான பொருள்களைக் கொடுத்து இன்றும் உதவி செய்து வருகிறேன். அந்த முதியவர் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தென்பட்டது.

 

கடிதம் எழுதுக.

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்,

திரு - இரா.ஆறுமுகம்,

60, சுண்ணாம்புக்காரத் தெரு,

அண்ணா நகர்,

திருவண்ணாமலை.

பெறுநர்,

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,

திருவண்ணாமலை.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : தரமற்ற உணவை கூடுதல் விலைக்கு விற்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.

வணக்கம். நான் சென்ற வாரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அணிதா உணவகத்திற்கு மதிய உணவு உண்ணச் சென்றேன். முட்டைப் பிரியாணி ரூ.100 என தகவல் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நானும் சாப்பிட்டு விட்டு உணவுத் தொகையை காசாளரிடம் செலுத்தும் போது முட்டைப்பிரியாணி ரூ.125 எனக் கூறினார். நான் எதிர்ப்புத் தெரிவித்து சண்டையிட்ட பின் உரிய தொகையை வாங்கிக் கொண்டார்.

மேலும், உணவு உண்ட சில மணி நேரத்திலேயே வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டது. பின் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.

எனவே, உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும், விற்ற உணவு விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இடம் : திருவண்ணாமலை,

29.03.2020.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

இரா.ஆறுமுகம்,

உறைமேல் முகவரி

பெறுநர் :

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,

திருவண்ணாமலை

 

நயம் பாராட்டுக.

"கத்து கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்''

- காளமேகப் புலவர்.

திரண்ட கருத்து

கடல் சூழ்ந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு இருக்கும் காத்தான் சாத்திரத்தில் பொழுது இறங்கும் போது தான் அரிசி வரும். அதனைத் தீட்டி உலையில் போடும்போது ஊரே அடங்கிப் போயிருக்கும். ஓர் அகப்பைச் சோறு இலையில் போடும் போது விடிவெள்ளி முளைத்து விடும்.

தொடைநயம்

செய்யுளில் எதுகை மோனை, முரண், இயைபு ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடையாகும்.

மோனை நயம் :

செய்யுளில் சீர் தோறும் முதல் எழுத்து ஒன்றி வந்துள்ளதால் மோனை நயம் இடம் பெற்றுள்ளது.

.கா : த்துக்கடல் - காத்தான்

த்தமிக்கும் - ரிசி வரும்

லையிலிட - டங்கும்

எதுகை நயம் : செய்யுளில் அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளதால் எதுகை நயம் இடம் பெற்றுள்ளது.

(.கா)

கத்துக்கடல்த்திரத்தில் - அடி எதுகை

அத்தமிக்கும்குத்தி - அடி எதுகை 

த்து கடல்லையிலிட - அடி எதுகை

த்தமிக்கும் - லையிலிட - அடி எதுகை

அணிநயம் :

செய்யுளில் பொருள் இருபொருள்பட வந்துள்ளதால் இரட்டுற மொழிதல் அணி இடம் பெற்றுள்ளது. இச் செய்யுள் "நேரிசை வெண்பா " வகையைச் சார்ந்தாகும்.

தலைப்பு : இச்செய்யுளுக்கு ஏற்ற தலைப்பு "சத்திரம்”

 

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

கு - (பறவையிடம் இருப்பது)

குருதி - (சிவப்பு நிறத்தில் இருக்கும்

வாள் - (மன்னனிடம் இருப்பது)

க்கா - (தங்கைக்கு மூத்தவள்)

தி - (அறிவின் மறுபெயர்)

படகு - (நீரில் செல்வது)

 

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

சிலைசீலை : சிலையைத் திரைச்சீலையால் மூடியவை. 

தொடு - தோடு : மதி பூக்களைத் தொடுத்து அணித்து கொண்டு, தோடுவையும் அணிந்து கொண்டாள்

மடு - மாடு : மடுவில் மாடுகள் தண்ணீர் குடித்தன

மலை - மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினோம்.

வளிவாளி : வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியால் பெருமழை பெய்தவுடன் வாளியில் தண்ணீர் பிடித்தேன்.

விடுவீடு : மணி விடுதலை பெற்று வீடு திரும்பினேன்

 

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

ஊண் - உணவு, இரை

ஊன் - மாமிசம், உடல்

திணை - ஒழுக்கம்

தினை - தானிய வகை

அண்ணம் - மேல்வாய், உள்நாக்கு

அன்னம் - பறவை, அரிசி (சோறு)

வெல்லம் கருப்பஞ்சாற்றின் கட்டி

வெள்ளம் நீர்ப்பெருக்கு

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


கிராமத்தின் வறுமை - ஒரு

நாட்டின் வறுமை

பகுத்துண்டு வாழும் பண்பு

அனைத்து உயிர்களுக்கும் உண்டு

வறுமையிலும் மனித நேயம்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

மனித நேயத்துடனும் அன்புடனும்

வாழ்வோம் என்றும்

 

செயல் திட்டம்

உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வு தொடர்களையும் திரட்டி அகர வரிசைப்படுத்தி வகுப்பறையில் காட்சிப்படுத்துக:

• அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு

• ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

• கொட்டிய பாலை நினைத்து குமுறி அழாதே 

• உப்பில்லா பண்டம் குப்பயிைலே

• நொறுங்கத் தின்றால் நூறு வயது

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது

• பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

• பழகப் பழகப் பாலும் புளிக்கும் 

• மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

• வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் திணை அறுப்பான்

 

கலைச்சொல் அறிவோம்

செவ்விலக்கியம் - Classical literature

காப்பிய இலக்கியம் - Epic literature

பக்தி இலக்கியம் - Devotional literature

பண்டைய இலக்கியம் - Ancient literature

வட்டார இலக்கியம் - Regional literature

நாட்டுப்புற இலக்கியம் - Folk literature

நவீன இலக்கியம் - Modern literature

 

நிற்க அதற்குத் தக...

"தம்பி உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?" - "கேரட்"

"பிடிச்ச பழம்?'' - "ஆப்பிள்”

பிடிச்ச காலை உணவு?" - "நுடுல்ஸ்"

"மத்தியானத்துக்கு" - "ப்ரைடு ரைஸ்"

“ராத்திரி...?'' – “பீட்ஸா அல்லது பாஸ்தா"

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. "சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்" என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும். கத்திரிக்காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்ஆம் காணாமல் போய்விடும் உங்கள் குழந்தைகள், "ஆடு மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!

மருத்துவர் கு. சிவராமனின் இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

இயற்கையோடு இயைந்த உணவுப் பழக்கத்தை நாம் கைவிட்டதால் அனைத்துவகை நோயும் நம்மை ஆள்கின்றன. எள்ளுருண்டை, கடலை உருண்டை, பதநீர், தானிய வகை உணவுகளை கைவிட்டதால் பலவித நோய்கட்கு ஆடபட்டுள்ளோம். ஆகையால், இவற்றைக் கைவிடாமல் நாம் பயன்படுத்தி வந்தால் நலமாக வாழலாம். தற்போது உண்ணும் இட்டிலி, சாம்பார் சட்டினி எல்லாம் இனி காணமால் போய்விடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது . இது மட்டுமில்லாமல் பிற்காலத்தில் உள்ள சந்ததியினர் இதையுமா உண்பார்கள் என்று வியப்புடன் கேட்பார்கள் தமிழர்களாகிய நாம் பாரம்பரிய உணவுளை உண்டு வாழ்வில் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நலமாய் வாழ்வோம்.

 

அறிவை விரிவு செய்.

திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்

சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்

ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்


 

இணையத்தில் காண்க.

http://www.muthukamalam.com/

essay/literature/p113.html

http://panpattumaiyaminnithazh.

blogspot.com/2017/03/blog-post_72.html?m=1

http://www.tamilvu.org/courses/ 

degree/c011/c0113/ html/c0113603.htm



Tags : Chapter 3 | 10th Tamil இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 3 : Kutaanchoru : Tamil Language Exercise - Questions and Answers Chapter 3 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு