Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 4 : Naankam Tamil

   Posted On :  22.07.2022 02:06 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 4 : நான்காம் தமிழ் : திறன் அறிவோம்பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே! - யாரிடம் யார் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்

) இறைவனிடம் குலசேகராழ்வார்

) மருத்துவரிடம் நோயாளி

) நோயாளியிடம் மருத்துவர்

[விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்]

 

2. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

[விடை: அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.]

 

3. பரிபாடல் அடியில்விசும்பும் இசையும்என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்

ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்

ஈ) வானத்தையும் பேரொலியையும்

[விடை: வானத்தையும் பேரொலியையும்]

 

4. குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் அகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே. -

) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

) இடவழுவமைதி - மரபு வழுவமைதி

) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

) கால வழுவமைதி, இட வழுவமைதி

[விடை () பால்வழுவமைதி, திணை வழுவமைதி]

 

5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

) துலா

) சீலா

) குலா

) இலா

[விடை: இலா]

 

குறுவினா

 

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

1. இயந்திர மனிதன் (Robo)

2. திறன் பேசி (Smart Phone)

 

2. வருகின்ற கோடை விடுமுறையில் 'காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் - இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

விடை :

இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது உறுதித்தன்மையே ஆகும். "ஆரல்வாய் மொழிக்குச் செல்ல இருக்கிறேன்” என்று கூறாமல் "செல்கிறேன்" என்று உறுதித்தன்மையைக் கூறுவதால் இது கால வழுவமைதியாகும்.

 

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர், நோயாளியின் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிக்கும் தன்மையால், அப்புண் ஆறிவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது என்ற செய்தியை விளக்குகிறது. பெருமாள் திருமொழி.

 

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக?

ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியனவாகும்.

 

5. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான் புதியவர்களைப் பார்த்து கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்றுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

விடை :

"சீசர் எப்போதும் என்சொல்பேச்சைக்கேட்கும். : புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது”.

 

சிறுவினா

 

1. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

முன்னுரை:

மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் இன்றைய தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பயன்களையும் ரோபோவின் செயல்பாடுகள் பற்றியும் எதிர்கால வெளிப்பாடுகள் பற்றியும் பின்வருமாறு காணலாம்.

செயற்கை நுண்ணறிவு :

எந்த ஒரு புதிய தொழில் நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை. புதிய தொழில் நுட்பத்தினால் எரி பொருள் மிச்சப்படும். பயண நேரம் குறையும், ஊர்திகளை செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும். கல்வித்துறையிலும் இத்தொழில் நுட்பம் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

வயதானவர்களுக்கு உதவி செய்யும், உற்ற தோழனாகவும் எதிர்காலத்தில் ரோபாவின் செயல்பாடுகள் இருக்கும். விடுதிகள், வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியனவற்றில் மனிதன் அளிக்கும் சேவையை ரோபாக்கள் செய்யும். பயண ஏற்பாடு செய்யவும், தண்ணீர் கொண்டு வந்து தருவதும், குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவதும் என பல செயல்பாடுகளைச் செய்யும் நிலை வரும்.

ரோபாவின் செயல்பாடுகள் :

எதை நாம் செய்ய விரும்புகிறமோ அதை செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தலாம். வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வரும். ரோபாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்கலாம். மனிதர்கள் செய்ய இயலாத அலுப்புத் தட்டக் கூடிய, கடினமான செயல்களையும் செய்ய முடியும். இவையெல்லாம் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலச் செயல்பாடுகளாகும்.

முடிவுரை:

செயற்கை நுண்ணறிவின் மூலம் பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதே போன்று எதிர்காலத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும் என்பதில் வியப்பொன்றும்மில்லை.

 

2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன் வைத்து எழுதுக.

• இன்றைய அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளில் நன்மை, தீமை இரண்டும் இருக்கும். நாம் அதற்கேற்ப தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

• கல்வியறிவு இருந்தால் மட்டும் போதாது, மின்னணுக் கல்வியறிவும் மின்னணுச் சந்தைப் படுத்தலையும் அறிந்திருக்க வேண்டும். எதிர் காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழில் புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.

• மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் உடல் நலத்தைப் பேணவும், கொடிய நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து மருத்துவம் செய்யும் பட்டறிவுமிக்க மருத்துவரைப் போலப் பரிந்துரை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எனவே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் சில தீமை இருந்தாலும் மனிதனை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவுகின்றன.

 

3. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்துகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில் நுட்பம்என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில் நுட்பம்

எதிர்காலத் தொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடுகள் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. உயிரினங்களில் மனிதனை உணர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலுக்கு தொழில் நுட்பம் மிகவும் துணை செய்கிறது. திறன் பேசிகளில் இயங்கும் மென்பொருள்கள், கண்ணுக்குத் தெரியாத மனிதனைப் போல் நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

செயல்பாடுகள்

• நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும்.

நாம் கட்டளையிடும் செயலைச் செய்யும்.

• நாம் கேட்பதை உடனே உலாவியில் தேடும்.

• நாம் விரும்பும் கவிதையை இணையத்தில் தேடித்தரும்.

• எந்தக் கடையில் என்ன விற்கப்படுகிறது என்று சொல்லும்

• நாம் படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியிலிடும்.

நாம் எடுத்த போட்டோக்களைப் பற்றி பட்டியலிடும்.

• எதிர் காலத்தில் நம்முடைய நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரைக் காட்டிலும் உதவும் மென்பொருள் நம்மைக் நன்கு அறிந்திருக்கும்.

 

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது - தந்தை என்னிடம் "இலட்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார் இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டு, (அவனை அவிழ்த்து விட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம்" நீயும் இவனும்) விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

1. நேற்று பெய்த மழை தொட்டியை நிறைத்திருந்தது

நிறைந்தது - கால வழுவமைதி - (விரைவு)

2 வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்ற மாடு கத்தியது.

குட்டி - மரபு வழுவமைதி (சிறப்பு)

3. இலட்சுமி கூப்பிடுகிறாள் போய் பார்.

இலட்சுமி - மாட்டைக் குறிக்கிறது (திணை வழுவமைதி) (உயார்வு) 4.

4. இதோ சென்றுவிட்டேன்.

சென்று விட்டேன் - கால வழுவமைதி - (விரைவு)

5. என்னடா துள்ளி விளையாட வேண்டுமா?

என்னடா? - மாட்டைக் குறிக்கிறது திணை வழுவமைதி (மகிழ்ச்சி) 6.

6. அவனை அவிழ்த்து விட்டேன்.

அவனை - பசு மாட்டைக் குறிக்கிறது திணை வழுவமைதி (உயர்வு)

7. இலட்சுமி தொட்டியிலிருந்து நீரைக் குடித்தாள்.

இலட்சுமி - பசுவைக் குறிக்கிறது.

நீரைக் குடித்தாள் - திணை வழுவமைதி (உயர்வு)

 

நெடுவினா

 

1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

முன்னுரை:

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல் :

எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.

இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.

போக்குவரத்து நெரிசல் இருக்காது.

பயண நேரம் குறையும்.

எரிபொருள் மிச்சப்படும்.

மனிதர்களிடம் போட்டி :

மென்பொருள்கள், கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

கல்வித்துறை :

கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள் :

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.

நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்.

வேலை வாய்ப்புகளில் மாற்றம் :

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை :

எதிர்காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

தோழனாய் இயந்திர மனிதன் :

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல் :

செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.

மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள் :

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

 

2. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்……

கோடிக்கணக்கான விண்மீன்கள் விண்வெளியில் கண் சிமிட்டுகின்றன. இவற்றை உற்றுப் பார்த்த தமிழன் 27 விண்மீன்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு துல்லியமாக கணக்கிட்டுள்ளான். ஒவ்வொரு நாளும் 27 விண்மீன்களின் பக்கத்தில் நிலவு மாறி மாறித் தோன்றும். இந்த 27 விண்மீன்களையும் 12ஆகப் பிரித்தனர் தமிழர். அவ்வாறு பிரித்ததற்குக் காரணம் ஒவ்வொரு மாதமும் இந்த விண்மீன் வட்டங்களின் வழியாகத்தான் கதிரவன் செல்லும் பாதை அமைகிறது.

இந்த 12 வட்டங்களையே பிற்காலத்தில் ராசி என்ற பெயரில் மாற்றி விட்டனர்.

"விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப" என்று பரிபாடல் கூறுகிறது. இப்பாடலில் கார்த்திகை முதலாக 27 விண்மீன்கள் செல்லும் பாதை "சூரிய வீதி தெரு" என்ற எளிய கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது. "நில வழி" எனப்படும் ஊழிக்காலம் தோன்றிய பின்னரும் பல காலங்கள் அவ்வாறே மாற்றமின்றிக் கிடந்தது.

முழு உலகம் தோன்றிய முறையானது நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனல் பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின் பரிணாமத் தோற்ற வரலாறு கூறுகிறது என்று பரிபாடலில் இடம் பெற்ற

"கருவளர் வானத்திசையில் தோன்றி

உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

உந்துவளி கிளர்ந்த ஊழி ஊழ் உழியும்''

என்ற வரிகள் விளக்குகின்றது.

பழந்தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் சிந்தனை உடையவர்கள் இயற்கையை விளக்கும் கற்பனைத் திறன் வாய்ந்தவர்கள் என்பதை இதன் மூலம் அறிலாம்.

 

3. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.

முன்னுரை :

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாகும் இருந்தாலும் வெற்றிக்கான வழி நம்பிக்கைகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் வலியுறுதியதோடு அதன்படி வாழ்ந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

பேரண்ட பெருவெடிப்பு

பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளை கணிதவியல் அடிப்படையில் எடுத்துக் கூறப்பட்டது. இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னனியில் இருந்தார் என்பதை மறுக்கப்பட்டது. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றல் தான் கடவுள் என்றும் கூற வேண்டியுள்ளது.

பால்வீதி - விண்வெளி

வானத்தில் ஒரு கருத்துளை காணப்பட்டது.ஸ்டீபன் ஹாக்கிற்கு அருகில் சென்று அதன் விபரத்தைக் கேட்டான். இது ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகளை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒரு சில நாள்கள் கழித்து கதிர் வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்து மறைந்து விடும் என்று கூறினார். நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன அவற்றுள் ஒன்றுதான் ஞாயிறு. விண்மீனின் ஆயுட்கால முடிவில் ஈர்ப்புவிசையால் சுருங்கத் தொடங்கும். சுருங்கச் சுருங்க ஈர்ப்பு விசை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று கூறினார்.

கதிர் வீச்சு

கருத்துளை என்பது ஒரு படைப்பின் ஆற்றல் கருத்துளையினுள் செல்லக்கூடிய எந்த ஒன்றும் வெளியில் வரவே முடியாது. கருத்துளையின் ஈர்ப்பு பகுதியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. கருத்துளை கருப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நேரில் பார்த்த போது தான் அறிந்து கொண்டேன். அண்ட வெளியில் காணப்படும் கருத்துளை படைப்பின் ஆற்றலே என்பதை நான் உணர்ந்தேன்.

முடிவுரை:

நாங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புதுமையான அனுபவமும் இருந்தது. எங்களுக்குத் தெரியாத நிகழ்வுகளை நன்கு பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டோம் மன மகிழ்வோடு பூமிக்கும் வந்து சேர்ந்தோம். எங்களை வரவேற்றனர். பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தனர். இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும்.

 

 

Tags : Chapter 4 | 10th Tamil இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 4 : Naankam Tamil : Questions and Answers Chapter 4 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 4 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : நான்காம் தமிழ்