Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  21.07.2022 11:52 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5 : மணற்கேணி : திறன் அறிவோம்பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்னும் சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?

) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது.

) காப்பியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

() பக்தி இலக்கியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

() சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

[விடை: சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது]

 

2. அருந்துணை என்பதனைப் பிரித்தால் ....................

() அருமை + துணை

() அரு + துணை

() அருமை + இணை

() அரு + இணை

[விடை: அருமை + துணை]

 

3. "இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப் போக்கர் கேட்டது

----------------------- வினா.

"அதோ, அங்கே நிற்கும்." என்று மற்றொருவர் கூறியது ----------- விடை.

) ஐயவினா, வினா எதிர் வினாதல்

) அறிவினா, மறைவிடை

) அறியா வினா, சுட்டு விடை

) கொளல் வினா, இனமொழி விடை

[விடை: அறியா வினா, சுட்டு விடை]

 

4. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை"

- என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

() தமிழ்

() அறிவியல்

() கல்வி

() இலக்கியம்

[விடை: கல்வி]

 

5. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ---------- இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ----------

() அமைச்சர், மன்னன்

() அமைச்சர், இறைவன்

() இறைவன், மன்னன்

() மன்னன், இறைவன்.

[விடை : மன்னன், இறைவன்]

 

குறுவினா


1. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

• கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர் குலேசபாண்டியன்)

• காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர் இடைக்காடனார்.)

 

2. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

• அருளைப் பெருக்கிட கல்வி கற்போம்!

• அறிவைச் சீராக்கிட கல்வி கற்போம்!

• மயக்கம் அகன்றிட கல்வி கற்போம்!

• அறிவு தெளிந்திட கல்வி கற்போம்!

• உயிருக்குத் துணையாக வரும் கல்வியைக் கற்போம்!

• வாழ்வியில் இன்பம் சேர்க்கும் கல்வியைக் கற்பிப்போம்!

• கல்வி ஆவிக்கு அருந்துணை நமக்கு பெருந்துணை!

 

3. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்

த்' - 'ந்'

அமர்பகுதி

த்சந்தி

‘த்’-‘ந்’ - ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.

 

4. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது.?

இதோ...... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

விடை:

() மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

அறியா வினா.

() இதோ .............. இருக்கிறதே!

சுட்டு விடை

() சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?

ஐய வினா.

 

சிறுவினா


1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.

• பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கினான்.

• கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான்.

• மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கிய, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார்

இதை அறிந்த மன்னர் தன் பிழையைப் பொருத்தளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

 

2. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்றார் ஒளவையார். அதனால் தான் இளமை கல்விக்கு உரியது. "இளமையில் கல்" என்று கட்டளை இடுகிறார். கல்வி கற்பது இளமைப் பருவம். நாம் இந்த வயதில் பள்ளிக்குச் செல்லாமல், வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைகள் பூர்த்தியாகும், நாளை நம் தேவை பூர்த்தியாகுமா?

இளமைப் பருவம் பசுமரத்தாணி போலப் பதிய வைத்திடும் பருவம். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பதற்கேற்ப இளமையே கற்பதற்குரிய பருவம் ஆகும். முன்னால் குடியரசுத் தலைவர் கலாம் அவர்கள் காலையிலும் மாலையிலும் வேலைக்குச் சென்றும் இடைப்பட்ட நேரத்தில் பள்ளி சென்று கற்றதனால் பார்போற்றும் உத்தமராக வாழ்ந்தார். இவரைப் போல நீ நன்றாக உழைத்தும், உன்னுடைய உழைப்பினால் வாழ்ந்தும், நேர்மையுடன் வாழவேண்டும். அதே போல கல்வியிலும் கவனத்தைச் செலுத்தி வருங்கால வாழ்க்கையை எளிதாக்க நீயும் என்னுடன் பள்ளிக்கு வா! என அழைத்துச் செல்வேன்.

 

3. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது, விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. .நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்கத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பர். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

1. மொழிபெயர்ப்பு என்பது யாது?

2. .நா. அவையில் பார்வையாளர், மற்றவர் பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்வார்?

3. ‘Headphone' என்பதன் தமிழாக்கம் என்ன?

4. .நா. அவையில் மொழிபெயர்ப்பாளர்களின் பணி யாது?

5. .நா. அவையில் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்விடத்தில் இருப்பார்?

6. எந்த அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழியில் புரிந்து கொள்ள எங்கு வசதி செய்யப்பட்டுள்ளது?

 

4. “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்"

- இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

சுட்டல்

இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

இலக்கணம்

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப்போல் நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது ஆற்று நீர்ப் பொருள்கோள் ஆகும்.

பொருள்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையை உருவாக்கி விடும்.

விளக்கம்

முயற்சி செல்வத்தைத் தரும், முயற்சி செய்யாமை வறுமையைத்தரும் இவ்வாறு தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருப்பதால், இது ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆகும்.

 

நெடுவினா


1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

குலேசன் கல்வியறிவு உடையவன். இதைக் கேள்விப்பட்ட இடைக்காடனார் வேப்ப மாலை அணிந்த குலேசனின் அவைக்குச் சென்று தான் இயற்றிய கவிதையை வாசித்தளித்தான்.

வேப்பம்பூ மாலை அணிந்த குலேச் பாண்டியன் தமிழறியும் பெருமையுடையவன். புலவருக்கு நிதி வழங்குபவன். இவர் முன் சுவையுடைய கவிதையைப் பாடினார் இடைக்காடனார். ஆனால், பாண்டிய மன்னன் சிறிது கூட தலை அசைக்காமல் புலவரின் புலமையை அவமதித்தான்.

இடைக்காடனார், பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவமாகிய பார்வதி தேவியையும், பொருளின் வடிவமான உன்னையும் அவமதித்தான் என்று கோபத்துடன் இறைவனிடம் கூறினார்.

இடைக்காடனார் கோவிலை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதும் நண்பர் கபிலருக்கும் மனம் மகிழ்வு உண்டாகும் என நினைத்தார். இறைவனும் கோவிலை விடுத்து வடக்கே வைகை ஆற்றின் தென்பக்கம் கோவில் கொண்டார்.

இறைவனிடம் குலேச் பாண்டியன் என்படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதோ? முறையவர் ஒழுக்கம் குறையானதோ? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் வழியில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார்.

உடனே இறைவனும்வயல் சூழ்ந்த கடம்ப வனத்தைவிட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்'. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை' என்றார். இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்' என்றார். இறைவனின் சொல் கேட்ட பாண்டியன் பரம்பொருளே! இச்சிறியவனின் குற்றம் பொறுப்பது பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.

மன்னன் தன் மாளிகையை ஒப்பனை செய்து புலவர்கள் சூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தினான். தான் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அமுதம் போன்ற சொல்லால் எங்களின் கோபம் தணிந்துவிட்டது என்றனர்.

 

2. கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம். அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

முன்னுரை:

வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள்; சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். பலரின் பயணங்களுக்கு வழி வகுக்கிறார்கள்; கல்வி அறிவற்ற இச்சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் விளக்கினை ஏற்றிய மேரியின் வாழ்க்கையோடு என் கருத்தையும் இங்கு விளக்க உள்ளேன்.

மேரியின் குடும்பமும் இளமையும் :

மேரி, தந்தை சாம், தாய் பாட்ஸி, பாட்டி, பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பமாகும். காலை முதல் மாலை வரை கடுமையாக உழைக்கும் குடும்பம் ஆகும். இக்குடும்பம் கல்வி கற்காததனால் இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதே உண்மை . தன் குடும்பத்தில் இவள் மட்டும் வித்தியாசமானவள் தான். இளமையில் இவளின் சுறுசுறுப்பு பாராட்டுதலுக்குரியது. அம்மா அழைத்தாலும் சரி, அவளின் விருப்பமான பருத்தியின் முதல் பூவைப் பார்க்க வேண்டும் என்றாலும் சரி தான் முதலில் செய்ய வேண்டும் என் எண்ணத்தைக் கொண்டவள்.

அவமானமும், ஏக்கமும் :

மேரி தன் அம்மாவுடன் வெள்ளை முதலாளிகள் ஒருவரின் வீட்டிற்குச் சென்றாள். அந்த வீட்டின் பெண், வில்சன். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு வியப்புற்றுடன் அவள் கண்கள் அருகில், மேஜையில் உள்ள புத்தகத்தின் மீது சென்றது. அதில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்கின்றபோது வில்சனின் இளைய மகள் புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி உன்னால் பார்க்க முடியாது என்று கூறினாள். இந்த வார்த்தை மேரி மனதைக்கிழித்தது. உடனே வீட்டை விட்டு வெளியேறினாள்.

"கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதை உணர்ந்தாள். அன்று முதல் அவள் மனம் ஒன்றைத் தீர்மானித்தது. அது என்னவென்றால், "நான் படிக்கவேண்டும்என்ற ஒற்றை வரி அவள் மனதை அசைபோட வைத்தது. மன ஆசையை பெற்றோரிடம் கூற , சரியான பதில் இல்லாமல் ஏக்கம் அடைந்தாள். ஆனால், மேரி முழுமையான நம்பிக்கையுடன் இருக்கிறாள்.

மேரியின் மீது இரக்கம் :

இவ்வுலகில் தான் மட்டும் நலமாக இருந்தால் போதாது? அனைவரும் (உலகில் உள்ள) நலமாக வாழ்வதே நாம் மகிழ்வுடன் வாழ வழியாகும். இதைத்தான் வள்ளுவரும்

"தாம் இன்புறுவது உலகுகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

என்று கூறியுள்ளார். இக்குறளின் தன்மைக்கு ஏற்ப மேரியின் மீது மிஸ் வில்சன் இரக்கம் கொண்டாள். மேரி தன் வயலில் வேலைபார்த்து விட்டு திரும்பும் போது எதிரே அறிமுகம் இல்லாத பெண் நிற்பதைக் கண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர். தன்னைப் பற்றிக் கூறி, உன்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஆசை. எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக மேயெஸ்வில்லிக்கு வரவேண்டும் என்று கூறினாள்.

மேரியின் கனவும், மகிழ்வும் :

மேரி தன் வீட்டில் மேசை மீது பல காலமாக இருந்த பைபிளை எடுத்து, இதை நான் படித்துவிடுவேன். என்று கனவு காணத் தொடங்கினாள். அப்பா மேரிக்குத் தேவையானவற்றை வாங்கித்தந்தார். தன்னைச்சுற்றி மகிழ்வில் எங்களுக்குச் சொல்லித்தா என அனைவரும் கூறினார். நம் சமுதாயத்திற்கு கிடைக்காத தன் குடும்பத்திற்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

மேரியின் படிப்பும் பட்டமும் :

அன்றாடம் புதிய புதிய நூல்களைக் கற்றாள். படிப்படியாக வளர்ந்தாள். தன் இனமும் வளர புதிய கல்வியைக் கற்று சிறந்த பெண்ணாக மாறினாள். மேரி, "தோல்வியே வெற்றிக்கு முதல்படி" என்பதை உணர்ந்து, தனக்கு நடந்த அவமானத்தை எண்ணி படித்ததினால் மேன்மை பெற முடிந்தது. அந்த சிறுமியின் செயல், எனக்கு விருது பெற பாடமாக அமைந்தது. தனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்ற பட்டம் ஒரு அனுபவத்தால் பெற்ற பட்டமாகும்.

மேற்படிப்பும் பயணமும் :

படிப்படியாக கல்வியில் உயர்ந்த மேரிக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேரியிடம் வில்சன் அவர்கள் அடுத்து நீ என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டு கொண்டே தன் தோளில் மேரியை சாய்த்து பரிவாகக் கேட்டாள். நான் மேலும் படிக்க வேண்டும் அதுவே என் விருப்பம் என்றார். ஆனால், மேலும் படிக்க வழியின்றி அலைகடலில் அகப்பட்ட கப்பலைப் போல நான் இருக்கிறேன் என்றாள். மீண்டும்

பருத்திக் காட்டில் பணியைத் தொடங்கினாள். அப்போது வில்சன் அங்கு வந்து ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு இன குழந்தையின் நகரத்தை நோக்கிச் செல் என்றாள்.

மேரி மேல் படிப்பிற்குச் செல்ல, தொடர் வண்டி நிலையம் சென்றாள், ஆனால், ஊரே அவரை வழியனுப்ப வந்தது. ‘குட்பை மேரி' குட்பை என கூறி வெற்றி உண்டாகட்டும் என வாழ்த்தி அனுப்பினார்கள்.

முடிவுரை :

வாழ்வில் படிப்பறிவற்ற நிலையிலிருந்து தன் முயற்சியாலும் பலருடைய முயற்சியாலும் வாழ்வில் உயர்ந்து சமுதாயத்தின் இருளைப் போக்கத் தோன்றிய மேரி ஜேன்னின் வாழ்வியல் நிகழ்வை சேர்ந்து வாழ்வோம்! வளமான உலகைப் படைப்போம்

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதை உணர்வோம்.

 

3. தமிழின் இலக்கியவளம் - கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிள வளங்கள் - அறிவியல் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு "செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

முன்னுரை:

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" நம் தமிழ் குடி. நம் தமிழ்மொழியில் இல்லாத சொல் வளம், கருத்து வளம் வேறு எந்த மொழியிலும் இல்லை. உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட சூழலில் கூட மொழி பொயர்ப்புத்துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழி பெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பதைப் பற்றிக் காண்போம்.

தமிழின் இலக்கிய வளம் :

• பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியம் போன்ற நூல்கள் தமிழின் பெருமையை பறை சாற்றுகின்றன. பக்தி இலக்கியங்கள் பக்தி மணம் பரப்புகின்றன. அற இலக்கியங்கள் நீதி நெறியை வழிகாட்டுகிறது. புராணங்கள் தமிழுக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.

• தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியில் உள்ள நூல்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும்.

கல்விமொழி :

மொழி பெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்று, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க முடியும். மாற்று மொழியினருக்கும் தமிழ்மொழியைக் கற்கும் ஆவலையும் தமிழ்மொழி கொடுக்கின்றது.

பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளம்:

பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்களை மொழி பெயர்ப்பின் மூலம் தெளிவாக அறியலாம். சான்றாக ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு நோபால் பரிசு கிடைத்தது.

அறிவியல் கருத்துகள்:

அறிவியலின் சிந்தனைக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்களைத் தேவாரமும் திருவாசகமும் காண முடிகிறது. மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. கலீலியோ கூற்றை கபிலர் கூறியிருப்பது ஒரு வியப்பாகவும் உள்ளது. நீர் சுழற்சி பற்றி வள்ளுவர் கூறியுள்ளதையும் நாம் உணர முடிகிறது.

பிறதுறைக் கருத்துகள் :

மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ்மொழியிலேயே பிற துறையின் கருத்துகளை அறியமுடிகிறது. திரைப்படம் வானொலி, தொலைக்காட்சி, விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்புப்பணி சிறந்து விளங்குகிறது. இதற்குச் சான்றாக வேற்றுமொழியில் உள்ள திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தவுடன் அவற்றில் உணர்த்தும் கருத்தும் கதையும் எளிதில் மக்களைச் சென்றடைகின்றன.

தமிழுக்குச் செழுமை :

மொழி பெயர்ப்பின் மூலம் எல்லாத்துறைகளிலும் புதுமையான கலைச்சொற்களைப் பெற்று தமிழ்மொழி செழுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இன்று எல்லாத் துறை சம்பந்தமான நூல்களையும் தமிழ் மொழியிலே கற்கலாம் என்பது பெருமைக்குறியது.

முடிவுரை :

"பிறமொழிச் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவு நனவானது மட்டுமல்லாமல் தமிழுக்கு மேலும் செழுமையும், வளமையும் உடையதாக விளங்குகிறது தமிழ்.


Tags : Chapter 5 | 10th Tamil இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Questions and Answers Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி