Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 5 : Manarkeni

   Posted On :  22.07.2022 12:22 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான் புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

- பாரதியார்

It gave Valluva the Great

For all the world to have:

And the fame rose sky high

Of our Tamil - Land

It made a necklace of gems.,

Named "The Lay of the Anklet"

Which grips enraptured hearts

In our Tamil - Land.

- The voice of Bharati

 

மொழி பெயர்ப்பு

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.


யாழிசை

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப்பார்த்தேன்

பேத்தி

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

- பாரதிதாசன்

It's like new lute music

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand-daughter

Learning by rote the verses

Of a didactic compilation.

- Translated by Kavignar Desini

lute music - யாழிசை

chamber - அறை

to look up - எட்டிப்பார்த்தல்

grand-daughter - பேத்தி

rote - நெட்டுரு

didactic compilation - நீதி நூல் திரட்டு

 

அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.


சொன்ன அம்மா

அம்மா சொல்லாதே!

அரசர் தந்தார்

அரசரால் தரப்பட்டது

பார்த்த துளிர்

துளிரே பார்!

வந்து நின்றது

குழந்தையோடு வந்தான்

 

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

.கா. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

1. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

குளிர்ந்த நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

2. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தரும்.

3. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

ஒழுக்கத்துடன் அறிவின் ஊற்றாகிய கல்வியே ஒருவர்க்கு உயர்வு தரும்.

4. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.

படைப்பாற்றல் மிக்க குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.

 

மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகககத்தில் பழத்த கதை கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்.

நூல் தலைப்பு : நல்லவண்ணம் வாழலாம்

மதிப்புரை :

அமைதியும், ஆழ்ந்த சிந்தனையும், தெளிந்த ஞானமும், இனிய பேச்சும் ஒருங்கே நிறைந்தவர் திரு. சுகிசிவம். இவருடைய அறிவார்ந்த கருத்துக் கருவூலமே இவ்வரிய நூலாகும்.

கட்டுரைவடிவில் உள்ள இந்நூல் மனித குலத்திடம் அவர் கொண்டுள்ள ஈடுபாடுகள், அம்மனிதகுலம் உயர்வடைய அவர் காட்டுகின்ற வழிகள் முதலியவற்றை நாம் புரிந்துகொள்கிறோம்.

நல்ல தொடக்கம் ஒரு செயலின் வெற்றியாக அமையும். புலனைந்தும் வெல்வதே வீரம். தன்னம்பிக்கை முன்னேற்றம் தரும். படிப்பு நடைமுறைக்கு வர வேண்டும். அன்புதான் பக்தியின் இலக்கணம் உள்ளத்து அனையதே உயர்வு. அவரவர் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவரே காரணம்.

உறுதியான உடலும், உயர்வான உள்ளமும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம். நம்மை நாமே எண்ணிப்பார்க்கும் சுய விமரிசனம் வெற்றியை ஈட்டித்தரும். ஆசையே துன்பத்திற்குக் காரணம். பணம் தேவையேயாயினும் அதனை அறவழியில் ஈட்டவேண்டும். விதிக்கொள்கையை வலியுறுத்துவதே அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகவே. ஒவ்வொரு நாளும் பயனள்ளதாக நாம் செயல்பட வேண்டும்.

"பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க" என்பது முதுமொழி. இந்நூலில் உள்ள பதினாறு கட்டுரைகளையும் படித்து அதன்படி ஒழுகினால் நாம் பெருவாழ்வு வாழலாம் என்பது உறுதி.

மிக ஆழமான கருத்தை விளக்க வாழ்க்கையில் நாம் காணும் எளிய நிகழ்ச்சிகளைக் சுட்டிக்காட்டி உள்ளம் கவர்கிறார்.

"டாக்டருக்கே இருமல் ................ அம்மா கையால்

ஒரு தம்ளர் கஷாயம் சாப்பிடும் பிரபல

டாக்டர்கள் போல......

கட்டுரைகள் முழுவதும் கருத்தும் நயமும் பின்னிப்பிணைந்த தொடர்கள் இழையோடுகின்றன. சான்றுகள் சில.

"அழகாய் இருக்க ஆசைப்படு; அழகை

இழந்தாவது அடுத்தவர்க்குப் பயன்படு"

"வீரம் என்பது ஆயுதங்களில் இல்லை

மனிதனின் மனத்தில் இருக்கிறது''

ஆழம் குறைவாக இருந்தாலும் கலங்கிய நீருள் கிடக்கும் பொருள்களை காணமுடியாது. ஆனால், தெளிந்த பளிங்கு போன்ற நீர் நிலையில் ஆழம் அதிகமாயினும் நீரின் தெளிந்த தன்மையால் அதில் கிடக்கும் பொருள்கள் அனைத்தும் நன்றாகத் தெரியும். கிடக்கும் பொருள்கள் அனைத்தும் நன்றாகத் தெரியும். அதைப்போல், இக்கட்டுரைகள் தம் உட்பொருளைத் தெளிவுற வெளிப்படுத்துகின்ற மணிநீர்க் குளங்களாகும்.

உலக மக்களின் உள்ளங்களில் உழவாரப் பணி செய்யும் சுகி. சிவம் அவர்களின் தொண்டு வாழ்க. வாழ்க!

 

படிவத்தை நிரப்புக.

நூலக உறுப்பினர் படிவம்


------------------------- மாவட்ட நூலக ஆணைக்குழு

திருவில்லிப்புத்தூர்

மைய/கிளை ஊர்ப்புற நூலகம்

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண்                       உறுப்பினர் எண்

பெயர்: __________________

தந்தை பெயர் : __________________

பிறந்த தேதி : __________________

வயது : __________________                    

படிப்பு : __________________

தொலைபேசி எண் : __________________

முகவரி: __________________

(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

நான் __________________ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து இத்துடன் காப்புத்தொகை ரூ. _______, சந்தா தொகை ரூ. __________ ஆக மொத்தம் ரூ. _______________ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலகநடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

 

இடம் :

நாள் :

திரு/திருமதி/செல்வி /செல்வன் _______________ அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

பிணைப்பாளர் கையொப்பம்

 

அலுவலக முத்திரை

(பதவி மற்றும் அலுவலகம்)

(மாநில/மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய /பேரூராட்சி உறுப்பினர்கள் )

 

நூலக உறுப்பினர் படிவம்

விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய/கிளை ஊர்ப்புற நூலகம் திருவில்லிப்புத்தூர்

அட்டை எண் – 1409 உறுப்பினர் எண் 6876

பெயர் : இரா. அழகுவேல்.

தந்தை பெயர்  : இரா. இராமசாமி.

பிறந்த தேதி : 09.02.1986

வயது : 33

படிப்பு : எம்.

தொலைபேசி எண் : 9842150010

முகவரி : 6/96 முதல் தெரு, அண்ணா நகர்,

திருவில்லிப்புத்தூர், விருதுநகர் - 626125.

நான் திருவில்லிபுத்தூர் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய் இத்துடன் காப்புத்தொகை ரூ.1000, சந்தா தொகை ரூ.200 ஆக மொத்தம் ரூ.1200 ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம் : திருவில்லிபுத்தூர்

நாள் : 14.04.20xx

தங்கள் உண்மையுள்ள

(இரா. அழகுவேல்)

திரு/திருமதி/செல்வி/செல்வன் இரா. அழகுவேல் அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

பிணைப்பாளர் கையொப்பம்

பா. கண்ணப்பன்

அலுவலக முத்திரை

(பதவி மற்றும் அலுவலகம்)

(மாநில/மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்)

 

மொழியோடு விளையாடு

புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.

தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன். நான் யார்?

- காகம்

 

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ------ யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ------- நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்).

2. காட்டு விலங்குகளைச்............... தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ............. திருந்த உதவகிறது. (சுட்டல், சுடுதல்)

3. காற்றின் மெல்லிய .............. பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான .............. பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4. பசுமையான .............. ஐக் .............. கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில் .............. கூடாது .............. இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடை :

1. புதையல் - புதைத்தல்.

2. சுடுதல் - சுட்டல்

3. தொடுதல்தொடுத்தல்

4. காட்சிகாணுதல்

5. நடித்தல் - நடிப்பு.

 

அகராதியில் காண்க.

மன்றல் - திருமணம், நெடுந்தெரு

அடிச்சுவடு - காலடிக்குறி

அகராதி - அகர வரிசைப் படுத்தி பொருள் காணும் நூல்.

தூவல் - நீர்த்துளி

மருள் - மயக்கம், வியப்பு.

 

செயல் திட்டம்

"பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்" - குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துக.

 

காட்சியைக் கவிதையாக்குக.


"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

மாசில்லா வாழ்வை வாழ்வோம்

வனமே நம் உயிர்வளி

காட்டை அழிக்கும் கயவர்களை

கனிவுடன் எடுத்துக்கூறி

காலமெல்லாம் நலமாய் வாழ

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.''

 

நிற்க அதற்கு தக...


பள்ளியில் நான்

நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பேன்

உடன்பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன்.

மரம் வளர்ப்பேன்

பெரியோரை மதித்து நடப்பேன்

வீட்டில் நான்

வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன்.

உடன் பிறப்புகளுடன் நட்புறவு கொள்வேன்.

தோட்டம் அமைப்பேன்.

பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்.

 

கலைச்சொல் அறிவோம்

Emblem - சின்னம்

Thesis - ஆய்வேடு

Intellectual - அறிவாளர்

Symbolism - குறியீட்டியல்

 

அறிவை விரிவு செய்

சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன்

குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்

ஆசிரியரின் டைரி - தமிழில் எம்.பி. அகிலா


 

இணையத்தில் காண்க.

http://www.tamilvu.org/ta/courses-

degree-p202-p2021-html-p202162-28161

http://www.tamilhindu.com/2009/10/

gu_pope_and_thiruvasagam/

http://www.tamilsurangam.in/

literatures/pathinen_keezhkanakku/

thirikadugam.html


Tags : Chapter 5 | 10th Tamil இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 5 : Manarkeni : Tamil Language Exercise - Questions and Answers Chapter 5 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : மணற்கேணி