Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | Kp மற்றும் Kc ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

Kp மற்றும் Kc ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு

வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகிய அனைத்தும் நல்லியல்பு வாயு நிலைமையில் உள்ள பின்வரும் பொதுவான வினை ஒன்றை நாம் கருதுவோம்.

Kp மற்றும் Kc ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு:

வினைபடு பொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகிய அனைத்தும் நல்லியல்பு வாயு நிலைமையில் உள்ள பின்வரும் பொதுவான வினை ஒன்றை நாம் கருதுவோம்.

xA + yB lC + mD


சமநிலை மாறிலி Kc ன் மதிப்பு

Kc = [C]l [D]m / [A]x [B]y   (1)


மற்றும் Kp ன் மதிப்பு

Kp = PlC × PmD / PxA × Py(2)


நல்லியல்பு வாயுச் சமன்பாட்டின் படி

PV = nRT 

or

P = (n / V) RT


எனவே,

பகுதி அழுத்தம் (P) = மோலார் செறிவு × (RT)

மேற்கண்டுள்ளதன் அடிப்படையில் வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளைப் பொருள்களின் பகுதி அழுத்தங்களை பின்வருமாறு எழுதலாம்.

PxA = [A]x (RT) x

PyB = [B]y (RT)y

PlC = [C]l (RT) l

PmD = [C]m (RT)m

சமன்பாடு (2)ல் பிரதியிட


சமன்பாடு (1) மற்றும் (4) ஒப்பிடும்போது,

Kp = Kc (RT)∆ng    (5)

இங்கு,

∆ng என்பது வாயு நிலைமையில் உள்ள வினைவிளைப்பொருள்களின் மோல்களின் மொத்த எண்ணிக்கைக்கும், வினைபடுபொருள்களின் மோல்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையேயான வேறுபாடாகும்.

எனவே, பின்வரும் தொடர்புகளை நாம் பெறலாம்.

∆ ng = 0 எனும்போது,

Kp = Kc (RT)0 = Kc

உதாரணம்:

H2(g) + I2(g) 2HI (g)

N2 (g) + O2 (g) 2NO (g)

∆ng ஆனது நேர்குறி மதிப்பை பெறும் போது

Kp = Kc (RT)+ve

Kp > Kc

2NH3 (g) N2 (g) + 3H2 (g)

PCI5 (g) PCl3 (g) + Cl2 (g) 

∆ng ஆனது எதிர்குறி மதிப்பை பெறும் போது

Kp = Kc (RT)-ve

Kp < Kc

எடுத்துக்காட்டு:

2H2 (g) + O2 (g) 2H2O (g)

2SO2 (g) + O2 (g) 2SO3 (g)

அட்டவணை 8.1 சில மீளும்வினைகளில், சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பு.

11th Chemistry : UNIT 8 : Physical and Chemical Equilibrium : Relation between Kp and Kc in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை : Kp மற்றும் Kc ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை