நுண்ணுயிரிகள் | அலகு 16 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மனிதனுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான சமமான மற்றும் சமமற்ற உறவு நிலைகள், பயன்கள் | 8th Science : Chapter 16 : Microorganisms
மனிதனுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான சமமான
மற்றும் சமமற்ற உறவு நிலைகள், பயன்கள்
நமது குடலில் வாழும் ஆயிரக்கணக்கான பாக்டீரியா, பூஞ்சை மற்றும்
பிற நுண்ணுயிரிகள் உடலின் ஆரோக்கியத்தில் அத்தியாவசியப் பங்கு வகிக்கின்றன. இவை நச்சு
முறிப்பானாகவும், ஒரு சில வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசியமான அமினோ அமிலங்களைத் தயாரிக்கவும்,
நோய்க் கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்கும் தடுப்பானாகவும் செயல்படுகின்றன. நுண்ணுயிர்
பாக்டீரியங்கள் மனிதனின் குடலில் காணப்படுகின்றன. இவை நமது ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும்
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். உடலானது அதனுடைய அதிகபட்ச செயல்பாட்டிற்குத்
தேவையான முக்கியமான சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதற்கு குடல் உதவுகிறது. உடல் நலம் சார்ந்த
சில வேறுபட்ட அம்சங்களுக்கும் இவை காரணமாக உள்ளன.