Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | சிதைந்த வாழிடங்களின் மீள் உருவாக்கம்

உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு - சிதைந்த வாழிடங்களின் மீள் உருவாக்கம் | 12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation

   Posted On :  24.03.2022 09:33 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு

சிதைந்த வாழிடங்களின் மீள் உருவாக்கம்

சுற்றுச்சூழல் வளர்ச்சியின் வழியாக - உயிரியப்பல்வகைத்தன்மை பாதுகாப்பு குறித்த ஓர் இந்திய தனிநபர் ஆய்வு.

சிதைந்த வாழிடங்களின் மீள் உருவாக்கம்

சுற்றுச்சூழல் வளர்ச்சியின் வழியாக - உயிரியப்பல்வகைத்தன்மை பாதுகாப்பு குறித்த ஓர் இந்திய தனிநபர் ஆய்வு. இந்தியாவில் உள்ள வனவியல் ஆராய்ச்சிக் கல்வி மற்றும் விரிவாக்க திட்டம் (FREEP) (உலக வங்கியின் முயற்சி) மூலம் 'சூழல் மேம்பாடு’ எனும் செயல்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி உயிரியப் பல்வகைத்தன்மை பாதுகாப்பில் உள்ளூர் மூலப்பொருட்களும் பட்டியலில் இணைக்கப்பட்டன. இச்செயல்திட்டத்தின் படி, பாதுகாக்கப்பட்ட இயற்கை வாழிடங்களை (வனங்களை) சார்ந்து இருப்பவர்களுக்கு மாற்று வளங்கள் மற்றும் வருமானத்திற்கான ஆதாரங்கள் ஆகியவை உருவாக்கப்படுகின்றன.

நன்னீர், வன உயிரிகள், உணவு மற்றும் காலநிலை ஆகியன "இருந்தால் நல்லது" எனப்படுபவை அல்ல. அவற்றைப் பெற்றிருப்பது அவசியம் எனப்படுபவையாகும். இவை அனைத்தும் மனித குலம் உயிர் பிழைத்திருப்பதற்கு இன்றியமையாதவை நாம் ஒன்றிணைந்தால் நம் கோளத்திலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும் - நம்மையும் சேர்த்து.


தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் (KMTR - Kalkad mundathurai Tiger Reserve) மாதிரி சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டத்தை FREEP மேற்கொள்கிறது. இந்த காப்பகத்தில் தனித்துவமான மற்றும் பல்வகைப்பட்ட தாவர இனங்களான முள் காடுகள் மற்றும் உலர்தேக்கு முதல் வெப்ப மண்டல பசுமைமாறா காடுகளும் பல்வேறு வகையான பறவைகள் புலி, சிறுத்தை மற்றும் யானை உள்ளிட்ட பல பாலூட்டிகளும் வாழ்கின்றன. தமிழகத்தின் கடைசி புலிகள் புகலிடமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலித்திட்டத்தின் கீழ்வரும் 50 இடங்களில் ஒன்றாகும். புலிகளின் வாழிடத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச உதவியையும் இக்காப்பகம் பெற்று வருகிறது.

நூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் தற்போது இந்த திட்டத்தில் பங்கேற்று வருகின்றன. தனிவிவசாயிகள் மற்றும் சமூகங்கள் ஒருங்கினைத்தும் விறகுக்கான மரங்கள் மற்றும் கால்நடை தீவனங்கள் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். சில கிராமங்களில் வீட்டு எரிபொருள் தேவைக்கு சாண எரிவாயு கலன்கள் நிறுவப்பட்டுள்ளது. அழுத்தம் சார் சமைப்பான்கள் மற்றும் திறன்மிகு விறகு அடுப்புகள் ஆகியவற்றை (புகையில்லா சூளைகள்) பயன்படுத்தி எரிபொருளை சேமிக்கின்றனர். பால்பண்ணை, கோழி வளர்ப்பு, தையல், தென்னை ஓலை பின்னுதல் மற்றும் தேநீர் விடுதிகள், உலர் பொருள் அங்காடிகள் போன்ற பல்வேறு மாற்று வருவாய் வாய்ப்புகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் “சுற்று சூழல் மேம்பாட்டு" திட்டத்தை உள்ளூர் மக்களின் பங்களிப்பு மூலம் பல்வகைத்தன்மையை பாதுகாக்கலாம் என்பதற்கான முன் மாதிரியாக விரைவில் பார்க்கப்படும்.


Tags : Biodiversity and its conservation உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு.
12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation : Restoration of Degraded Habitat Biodiversity and its conservation in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : சிதைந்த வாழிடங்களின் மீள் உருவாக்கம் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 12 : உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு