காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages

   Posted On :  17.08.2023 07:43 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. ------------------------- சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

அ) மனித

ஆ) விலங்கு

இ) காடு

ஈ) இயற்கை

[விடை: அ) மனித]

 

2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

அ) தர்மாம்பாள்

ஆ) முத்துலட்சுமி அம்மையார்

இ) மூவலூர் ராமாமிர்தம்

ஈ) பண்டித ரமாபாய்

[விடை:  ஆ) முத்துலட்சுமி அம்மையார்]

 

3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு

அ) 1827

ஆ) 1828

இ) 1829

ஈ) 1830

[விடை:  இ) 1829]

 

4. B.M. மலபாரி என்பவர் ஒரு

அ) ஆசிரியர்

ஆ) மருத்துவர்

இ) வழக்கறிஞர்

ஈ) பத்திரிகையாளர்

[விடை: ஈ) பத்திரிகையாளர்]

 

5. பின்வருவனவற்றில் எவை எது சீர்திருத்த இயக்கம் (ங்கள்)?

அ) பிரம்ம சமாஜம்

ஆ) பிரார்த்தனை சமாஜம்

இ) ஆரிய சமாஜம்

ஈ) மேற்கண்ட அனைத்தும்

[விடை: ஈ) மேற்கண்ட அனைத்தும்]

 

6. பெதுன் பள்ளி ------------------- இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது. அ) 1848

ஆ) 1849

இ) 1850

ஈ) 1851

[விடை:  ஆ) 1849]

 

7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

அ) வுட்ஸ்

ஆ) வெல்பி

இ) ஹண்டர்

ஈ) முட்டிமன்

[விடை:  இ) ஹண்டர்]

 

8. சாரதா குழந்தை திருமணமசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ---------------- என நிர்ணயித்தது.

அ) 11

ஆ) 12

இ) 13

ஈ) 14

[விடை: ஈ) 14]

 

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. பெண் சங்கம் 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.

2. சிவகங்கையை சேர்ந்த வேலு நாச்சியார் என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்.

3. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் கோபால கிருஷ்ண கேராகலே

4. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆவார்.

5. கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர் விவேகவர்தினி ஆகும்.

 

III பொருத்துக

1 பிரம்மஞான சபை - இத்தாலிய பயணி

2 சாரதா சதன் - சமூக தீமை

3 வுட்ஸ் கல்வி அறிக்கை - அன்னிபெசன்ட்

4 நிக்கோலோ கோண்டி- பண்டித ரமாபாய்

5 வரதட்சணை – 1854

 

விடைகள்

1 பிரம்மஞான சபை - அன்னிபெசன்ட்

2 சாரதா சதன் - பண்டித ரமாபாய்

3 வுட்ஸ் கல்வி அறிக்கை - 1854

4 நிக்கோலோ கோண்டி - இத்தாலிய பயணி

5 வரதட்சணை – சமூக தீமை

 

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

 

1. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்  விடை : சரி

2. தேவதாசி முறை ஒரு சமூக தீமை. விடை : சரி

3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய். விடை : சரி

4. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடுஎன்பது பெண்களின் சமூக - அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது. விடை: தவறு

5. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது. விடை: தவறு

 

V சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

 

1. சரியான இணையை கண்டுபிடி.

அ மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் D.K. கார்வே

ஆ நீதிபதி ரானடே- ஆரிய சமாஜம்

இ விதவை மறுமணச் சட்டம்   - 1855

ஈ ராணி லட்சுமிபாய் – டெல்லி

விடை: அ மகளிர் பல்கலைக்கழகம் - பேராசிரியர் D.K. கார்வே

 

2. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.

அ) குழந்தை திருமணம்

ஆ) சதி

இ) தேவதாசி முறை

ஈ) விதவை மறுமணம்

விடை: ஈ) விதவை மறுமணம்

 

3. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.

i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமி பாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம் (ங்கள்) சரியானவை?

அ) I மட்டும்

ஆ) ii மட்டும்

இ) i மற்றும் ii

ஈ) இரண்டுமில்லை

விடை: இ) i மற்றும் ii

 

4. கூற்று: ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.

காரணம்: இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.

ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.

இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடை: இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

 

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

 

1. பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் பெயரினைக் குறிப்பிடுக.

 

> ராஜா ராம் மோகன்ராய்

> தயானந்த சரஸ்வதி

> கேசவ சந்திரசென்

> ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

> பண்டித ரமாபாய்

> டாக்டர் முத்துலட்சுமி

> ஜோதிராவ் பூலே

> பெரியார் ஈ.வெ.ரா.

> டாக்டர் தர்மாம்பாள்

 

2. சமூக தீமைகளில் சிலவற்றைப் பட்டியலிடுக.

> பெண் சிசுக் கொலை

> பெண் சிசு கருக்கொலை

> குழந்தைத் திருமணம்

> சதி

> தேவதாசி முறை

 

3. இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்கள் யாவர்?

> ரசியா சுல்தானா

> ராணி துர்காவதி

> சாந்த் பீவி

> நூர்ஜஹான்

> ஜஹனாரா

> ஜீஜா பாய்

> மீராபாய்

 

4. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களைக் குறிப்பிடுக.

> வேலு நாச்சியார்

> பேகம் ஹஸ்ரத் மஹால்

> ஜான்சிராணி லட்சுமி பாய்

 

5. 'சதி' பற்றி ஒரு குறிப்பு வரைக

> இந்திய சமூகத்தில் நிலவிய சமூக தீமைகளில் ஒன்று சதி என்பதாகும்.

> குறிப்பாக இப்பழக்கம் ராஜபுத்திரர்களிடையே காணப்பட்டது.

> இதன் பொருள் கணவனின் சிதையில் தானாக முன்வந்து விதவைகள் எரித்துக் கொள்ளுதல் ஆகும்.

> ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்து கொண்டனர். ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால் சிதையில் அமர்ந்தனர்.

 

VII விரிவான விடையளி

 

1. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்.

> இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் முக்கியப் பங்கினை வகித்தனர்.

> தொடக்ககால காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கியம் பங்காற்றினர்.

> சிவகங்கையின் வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார்.

> 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சி ராணி, லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்திப் போராடினர்.

> விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல் நாட்டு பொருட்களைப் புறக்கணித்தனர்.

> ஊர்வலங்களில் கலந்து கொள்வது, சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்குச் சென்றனர்.

> விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

 

2. சமூக தீமைகளை ஒழிப்பதில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை விளக்குக.

> ராஜாராம் மோகன்ராய்:- ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ஆவார்.

> இவர் சாதிகளுக்கு அப்பால் சதி எதிர்ப்புப் போராளியானார்.

> அவருடைய கடுமையான முயற்சியின் காரணமாக 1829இல் சதி எனும் உடன் கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

> இவர் குழந்தைத் திருமணம் மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவற்றை எதிர்த்தார்.

> விதவைகள் மறுமணம், பெண் கல்வி மற்றும் பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார்.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் :

> ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஒழிக்கவும், விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கவும் பலதார மணத்தை ஒழிப்பதற்காகவும் வங்காளத்தில் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார்.

> இவரது தீவிர முயற்சியின் விளைவாக 1856இல் இந்து விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது.

கந்து கூரி வீரேசலிங்கம் :

> கந்து கூரி வீரேசலிங்கம் மகளிர் விடுதலைக்காகப் போராடிய போராளி ஆவார்.

> அவர் 1874இல் தனது முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார்.

> விதவைகள் மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றிற்காகப் போராடினார்.

எம்.ஜி. ரானடே :

> எம்.ஜி. ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம் மற்றும் பெண்கல்வி ஆகியவற்றை ஊக்குவித்தார்.

> இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

> இவர் தொடங்கிய இந்திய தேசிய சமூக மாநாடு சமூக சீர்திருத்தத்தின் சிறந்த நிறுவனமாக உருவானது.

பி.எம். மலபாரி :

> பி.எம். மலபாரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.

> துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

கோபால கிருஷ்ண கோகலே :

> இவர் இந்திய ஊழியர் சங்கத்தைத் தொடங்கினார்.

> அது தொடக்கக்கல்வி, பெண் கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

பெரியார். ஈ.வெ.ரா. :

> பெரியார் பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.

> குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

பெண் சீர்திருத்தவாதிகள் :

பண்டித ரமாபாய், ருக்மா பாய், தாராபாய் ஷிண்டே, அன்னி பெசன்ட், தர்மாம்பாள், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காகப் பெருந் தொண்டாற்றிய பெண்மணிகளாவர்.

 

3. சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக விடையளிக்கவும்.

> பெண்கள் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

> இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.

> தியாகம், சேவை மற்றும் பகுதிதறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.

> சதி மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை சட்ட விரோதமாக்கப்பட்டது.

> விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்

> திருமணம், தத்து எடுத்தல், வாரிசு நியமனம் போன்றவற்றில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியில் மற்றும் தொழில் நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்கின்றனர்.

> பெண் விடுதலை மற்றும் பெண் மேலாண்மை ஆகியவை நடைமுறை சாத்தியமாகியுள்ளது.

 

VIII செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

1. பெண்களின் வளர்ச்சியில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு குறித்து தகவல் தொகுப்பைத் தயாரிக்கவும். (ஏதேனும் ஒரு சீர்திருத்தவாதியைத் தேர்வு செய்து அவர் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கவும்)

2. குழு விவாதம்: விடுதலை இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு.

Tags : Status of Women in India through the ages | Chapter 8 | History | 8th Social Science காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages : Questions with Answers Status of Women in India through the ages | Chapter 8 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை : வினா விடை - காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை