Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மக்களுக்கான விஞ்ஞானி, நினைவில் கொள்க

மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மக்களுக்கான விஞ்ஞானி, நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 2 : Electricity

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்

மக்களுக்கான விஞ்ஞானி, நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : நினைவில் கொள்க


நினைவில் கொள்க

மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும்.

அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்று ஆலைகள், அணு மின் நிலையங்கள் போன்ற பல மின் மூலங்கள் உள்ளன.

வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் எனப்படும்.

தொடர்ச்சியாக நீண்டகாலம் மின்னோட்டத்தை அளிப்பதன் அடிப்படையில், மின்கலன்கள் இரு வகைப்படும்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலன் முதன்மை மின்கலன் எனப்படும்.

பல முறை மின்னேற்றம் செய்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய மின்கலன்கள் துணை மின்கலன்கள் எனப்படும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களை இணைத்து உருவாக்கப்படும் அடுக்கு மின்கல அடுக்கு எனப்படும்.

மின்சுற்று என்பது மின்கலத்தின் எதிர்முனைக்கு நேர்முனையிலிருந்து மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்.

மின்கலன், சாவி, மின்விளக்கு மற்றும் இணைப்புக்கம்பி போன்றவற்றின் தொகுப்பு எளிய மின்சுற்று எனப்படும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் மின்சுற்று, தொடரிணைப்பு மின்சுற்று எனப்படும்.

இரண்டு அல்லது மேற்பட்ட மின் விளக்குகள் பக்கஇணைப்பில் இணைக்கப்படும் மின் சுற்று பக்க இணைப்பு மின்சுற்று எனப்படும்

மின்சாதனங்களை குறியீடுகளால் குறிப்பதன் மூலம் பெரிய மின் சுற்றுப்படங்களை மிக எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின்கடத்திகள் எனப்படும்.

தன் வழியே மின்னூட்டங்களைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் மின்கடத்தாப் பொருள்கள் எனப்படும்.


இணையச்செயல்பாடு

மின்சாரம்

எளிய மின் சுற்றுகளைக் கொண்டு விளையாடிப் பார்ப்போமா!


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி எளிய மின்சுற்று பக்கத்திற்குச் செல்க.

படி 2 : செயல்பாட்டின் வலப்பக்கத்தில் சில மின்கம்பிகளும், இடப்பக்கத்தில் மின்கலங்களும், சுவிட்ச் மற்றும் மின் விளக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி 3: சுட்டியின் உதவியுடன் மின்கம்பிகளை இழுத்து, மின்கலத்தில் சரியாகப் பொருத்த வேண்டும். அவ்வாறு சரியாகப் பொருத்திவிட்டால், சுவிட்சை அழுத்தியதும் மின்விளக்கு ஒளிரும்.

படி 4:  இரண்டாவது உரலியைப் பயன்படுத்தி, தொடர்மற்றும் பக்க மின்சுற்றுகளைக் கொண்டு செயல்பாட்டைத் தொடர்க.


உரலி

Simple Circuit's

http://www.physics-chemistry-interactive-flash-animation.com/electricity.. electromagnetism_interactive/simple_circuit.htm

Series and parallel circuits

http://www.physics-chemistry-interactive-flash- animation.com/electricity_electromagnetism_interactive/ components_circuits_association-series_parallel.htm

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

Tags : Electricity | Term 2 Unit 2 | 6th Science மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 2 : Electricity : Scientist for the People, Points to remember Electricity | Term 2 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : மக்களுக்கான விஞ்ஞானி, நினைவில் கொள்க - மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்