கணக்கு 7.10
ஒரு தானியங்கி மோட்டார் வாகன இயந்திரத்தில், பெட்ரோல் 816° C வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது. சூழலின் வெப்பநிலை 21°C ஆக இருக்கும்போது இயந்திரத்தின் அதிகபட்ச திறனை கணக்கிடுக.
தீர்வு
இயக்குதிறன் சதவீதம் [ (Th – Tc) / Th ] × 100
இங்கு
Th = 816 + 273 = 1089 K;
Tc = 21 + 273 = 294 K
இயக்குதிறன் சதவீதம் = [ (1089 – 294) / 1089 ] × 100
இயக்குதிறன் சதவீதம் = 73%
கணக்கு 7.6
C (s) + O2 (g) → CO2 (g) இவ்வினையின் திட்ட என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. CO2 (g), C (s), O2 (g) ஆகியவற்றின் திட்ட என்ட்ரோபி மதிப்புகள் முறையே 213.6, 5.740, மற்றும் 205 JK-1.
C (g) + O2 (g) → CO2 (g)
ΔS0r = ΣS0வினைவிளைப்பொருட்கள் – ΣS0வினைபடுப்பொருட்கள்
ΔS0r = {S0CO2} – {S0C + S0O2}
ΔS0r = 213.6 - [5.74 + 205]
ΔS0r = 213.6 - [210.74]
ΔS0r = 2.86 JK-1
கணக்கு 7.7
0°C வெப்பநிலையில் 1 மோல் பனிக்கட்டி, நீராக உருகும்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. பனிக்கட்டியின் மோலார் உருகுதல் வெப்பமதிப்பு 6008 J mol-1.
தீர்வு
ΔHஉருகுதல் = 6008 J mol-1
Tf = 0° C = 273 K