இனச்செல் உருவாக்கம் - மனித இனப்பெருக்கம் - அண்ட செல்லின் அமைப்பு | 12th Zoology : Chapter 2 : Human Reproduction
அண்ட செல்லின் அமைப்பு (Structure of ovum)
மனித அண்ட செல்லானது நுண்ணிய , ஓடற்ற, கரு உணவு அற்ற தன்மையுடைய செல் ஆகும். (படம் 2.8(ஆ)) இதன் சைட்டோபிளாசம் ‘ஊபிளாசம்’ (Ooplasm) என்று அழைக்கப்படும். இதனுள் காணப்படும் பெரிய உட்கருவிற்கு ‘வளர்ச்சிப்பை’ (Germinal Vesicle) என்று பெயர். அண்ட செல் மூன்று உறைகளைக் கொண்டது. மெல்லிய ஒளி ஊடுருவும் 'விட்டலின் சவ்வு' (Vitelline membrance) உட்புறத்திலும் தடித்த ‘சோனா பெலூசிடா’ (Zona pellucida) அடுக்கு நடுப்பதியிலும் மற்றும் நுண்பை செல்களால் சூழப்பட்ட தடித்த ‘கரோனா ரேடியேட்டா’ (Corona radiata) உறை வெளிப்புறத்திலும் அமைந்துள்ளன. விட்டலின் சவ்வுக்கும் சோனா பெலூசிடாவுக்கும் இடையில் ஒரு குறுகிய ‘விட்டலின் புற இடைவெளி’ (Perivitelline space) காணப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
பிறக்கும் போது உங்களுக்குத் இலட்சக்கணக்கான அண்ட செல்களை அண்டகத்தில் கொண்டு பிறக்கும் பெண்ணின் உடலிலிருந்து மாதவிடாய் நிறைவு வரை வெறும் 300 முதல் 400 அண்ட செல்கள் மட்டுமே விடுவிக்கப்படுகிறது. அதே சமயம் ஆண்கள் தங்களது வாழ்நாளில் 500 பில்லியனுக்கு அதிகமான விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர்.