Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | பாடச்சுருக்கம் - இயற்பியல் : அலைவுகள்
   Posted On :  22.10.2022 06:24 pm

11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்

பாடச்சுருக்கம் - இயற்பியல் : அலைவுகள்

இயற்பியல் : அலைவுகள் - பாடச்சுருக்கம் - இயற்பியல் : அலைவுகள்

பாடச்சுருக்கம்


• ஒரு பொருள் அல்லது துகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு புள்ளியை ஆதாரமாகக் கொண்டு முன்னும் பின்னும் திரும்ப திரும்ப இயக்கமடைந்தால் அவ்வியக்கம் அலை இயக்கம் அல்லது அதிர்வியக்கம் எனப்படும். 


• தனிச்சீரிசை இயக்கத்திற்கு ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அல்லது முடுக்கமானது நிலையான புள்ளியிலிருந்து அது அடைந்த இடப்பெயர்ச்சிக்கு நேர்தகவிலும் எப்பொழுதும் அந்நிலைப்புள்ளியை நோக்கியதாக அமையும்.

 விசை Fx = − k x


• இங்கு k என்பது விசை மாறிலி, அதன் மதிப்பு ஓரலகு நீளத்தில் சுருள்வில் உணரும் விசைக்குச் சமம்.


• சீரிசை இயக்கத்திலுள்ளதுகள் ஒன்றின் இடப்பெயர்ச்சி, y = A sin ωt


• சீரிசை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் திசைவேகம் v = A ω cos ωt = ω√[A2-y2]


• day - சீரிசை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் முடுக்கம், a = 


• துகள் ஒன்று ஒரு அலைவை முழுமையாக நிகழ்த்த எடுத்துக் கொள்ளும் காலம் அலைவு நேரம் என வரையறுக்கப்படுகிறது. இதனை T எனக் குறிப்பிடலாம். அலைவுநேரம் T = 2π/ω.


• ஒரு துகளால் ஓரலகு காலத்தில் ஏற்படுத்தும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். இது f என குறிக்கப்படுகிறது. இதன் அலகு S-1 அல்லது ஹெர்ட்ஸ் கணிதமுறைப்படி அதிர்வெண்ணானது அலைவுக்காலத்துடன் f =1/T எனும் தொடர்பை பெற்றுள்ளது.


• கோணச்சீரிசை இயக்கத்தின் அதிர்வெண்


n சுருள்வில் தொடர் இணைப்பில் உள்ள போது சுருள் மாறிலியின் தொகுபயன்



• n சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ளபோது சுருள் மாறிலிகளின் தொகுபயன் 



• U வடிவக் குழாயில் உள்ள திரவம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்


• ஆற்றல் மாறா அமைப்பு ஒன்றில் ஒரு பரிமாணத்தில் விசையின் புலமானது நிலையாற்றலில் இருந்து எண்ணியல் முறையில் எனப் பெறப்படுகிறது.


• தனிச்சீரிசை இயக்கத்தில் உள்ள துகள் ஒன்றின் நிலை ஆற்றல்             


• தனிச்சீரிசை இயக்கத்தில் உள்ள துகள் ஒன்றின் இயக்க ஆற்றல்  


• சீரிசை இயக்கத்தில் உள்ள துகள் ஒன்றின் மொத்த ஆற்றல்


• அலைவுகளின் வகைகள் - கட்டற்ற அலைவுகள், தடையுறு அலைவுகள், நிலைநிறுத்தப்பட்ட அலைவுகள் மற்றும் திணிப்பு அதிர்வுகள்


• ஒத்ததிர்வு என்பது திணிப்பு அதிர்வுகளின் சிறப்பு வகையாகும்.


11th Physics : UNIT 10 : Oscillations : Summary - Physics: Oscillations in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள் : பாடச்சுருக்கம் - இயற்பியல் : அலைவுகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்