Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | சுருள்வில்லின் செங்குத்து அலைவுகள் - நேர்போக்கு சீரிசை அலையியற்றி (LHO)
   Posted On :  22.10.2022 05:35 pm

11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்

சுருள்வில்லின் செங்குத்து அலைவுகள் - நேர்போக்கு சீரிசை அலையியற்றி (LHO)

படம் 10.15 -ல் காட்டியுள்ளவாறு, நிறையற்ற விசை மாறிலி அல்லது சுருள்வில் மாறிலி k (spring constant) கொண்ட சுருள்வில்லானது கூரையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.

சுருள்வில்லின் செங்குத்து அலைவுகள்


படம் 10.15 -ல் காட்டியுள்ளவாறு, நிறையற்ற விசை மாறிலி அல்லது சுருள்வில் மாறிலி k (spring constant) கொண்ட சுருள்வில்லானது கூரையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். நிறை m இணைக்கப்படுவதற்கு முன்பு சுருள்வில்லின் நீளம் L என்க. சுருள்வில்லின் மற்றொரு முனையில் நிறை m இணைக்கப்படும் போது சுருள்வில்லானது l நீளத்திற்கு விரிவடைகிறது. சுருள்வில்லின் நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை F1 என்க 

நிறை m -ல் செயல்படும் ஈர்ப்பு விசையானது செங்குத்தாக கீழ்நோக்கி செயல்படும். இந்த அமைப்பிற்கு தனித்த பொருளின் விசைப்படம் நாம் வரைய முடியும். இது படம் 10.15 ல் காட்டப்பட்டுள்ளது. அமைப்பானது சமநிலையில் உள்ள போது,


ஆனால் சுருள்வில் l இடப்பெயர்ச்சிக்கு நீட்சியடைந்துள்ளது. எனவே


சமன்பாடு (10.28) ஐ சமன்பாடு (10.27) -ல் பிரதியிட நாம் பெறுவது


மிகச்சிறிய அளவிலான புறவிசையை நிறைமீது நாம் செலுத்தினால், அந்த நிறை மேலும், கீழ்நோக்கிய திசையில் இடப்பெயர்ச்சி y-க்கு நீள்கிறது, பிறகு அது மேலும், கீழும் அலைவுறுகிறது. இப்பொழுது சுருள்வில்லின் நீட்சி (y + l) (சுருள்வில்லின் மொத்த நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை.


d2y/dt2, என்ற முடுக்கத்துடன் இயங்கும் நிறைக்கு தனித்த விசைப்படம் வரைந்தால், நாம் பெறுவது


நீட்சியின் காரணமாக நிறை மீது செயல்படும் மொத்த விசை


ஈர்ப்புவிசையானது மீள்விசைக்கு எதிராக அமையும், சமன்பாடு (10.29) ஐ சமன்பாடு (10.32), இல் பிரதியிட, நாம் பெறுவது

= −ky  kl + kl = −ky

நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த


இச்சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டின் வடிவமாகும். எனவே



சமன்பாடு (10.29) பயன்படுத்தி, அலைவுநேரத்தை வேறு வடிவில் எழுதினால்


இச்சமன்பாட்டிலிருந்து புவிஈர்ப்பு முடுக்கம் g மதிப்பை பெறலாம்


எடுத்துக்காட்டு 10.8

சுருள்வில் தராசு 0.25m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5ms-2 ஈர்ப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசையை கணக்கிடுக.

தீர்வு 

சமன்பாடு (10.29) பயன்படுத்தி, முதலில் சுருள்வில் தராசின் விறைப்பு மாறிலியை நாம் கணக்கிடலாம்.


அலைவுகளின் அலைவுநேரம்

இங்கு M -ன்பது பொருளின் நிறையாகும். M என்பது தெரியாத நிறையாதலால்

சமன்பாட்டை மாற்றி அமைக்க நாம் பெறுவது


பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பு விசை 

W = Mg = 7.3 × 11.5 = 83.95 N ≈ 84 N

11th Physics : UNIT 10 : Oscillations : Vertical oscillations of a spring - Linear Simple Harmonic Oscillator (LHO) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள் : சுருள்வில்லின் செங்குத்து அலைவுகள் - நேர்போக்கு சீரிசை அலையியற்றி (LHO) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 10 : அலைவுகள்