அரசியல் கொள்கைகள் - கலைச்சொற்கள்(Glossary) : அரசியல் கொள்கைகள் - பகுதி II | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II
கலைச்சொற்கள்: Glossary
அமைப்பெதிர்வாதம் - எவ்வித அதிகாரமும் இல்லாமல் உறுப்பினர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் இயங்கும் அமைப்பு
பெண்ணியம் - பெண்களின் சக்தி ஏற்றத்தையும், பாலின சமத்துவத்தையும் ஆதரிக்கும் கொள்கை.
ஆணாதிக்க முறை - குடும்பம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மதம், பிற தளங்களில் பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் முறை.
பின் காலனி ஆதிக்கம் - காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின் நாடுகள் இருக்கும் நிலை (எடுத்துக்காட்டு 1947க்கு பிறகு இந்தியா)
காலனி ஆதிக்கம் - ஐரோப்பிய நாடுகள் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி சுரண்டிய முறை.
விஷாகா வழிமுறைகள் - உச்ச நீதிமன்றம் பணி இடங்களில் பாலின தொந்தரவுகளில் இருந்து பெண்களை காப்பாற்றுவதற்காக தனது தீர்ப்பில் வழங்கிய வழிமுறைகள்.
பாலினச் சமத்துவம் - ஆண் பெண் இடையிலான பாலினச் சமத்துவம்
பொது நலம் - மக்களின் பொதுவான நலன் அல்லது விருப்பம்
தனியான நபர் அல்ல - மனிதர்கள் தனியான நபர்கள் அல்ல. மற்ற மனிதர்களுடன் இணைந்து வாழ்கிறார்கள். ஆகவே சமூகத்தில் இருந்து தொடர்பு இல்லாமல் அவர்கள் வாழ்வதில்லை.
அமைந்துள்ள நபர் - மனிதர்கள் சமூகத்தில் வேர் ஊன்றி அமர்ந்து, அமைந்து இருக்கிறார்கள்.
குறைப்பு வாதம் - இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காரணியாக குறைத்து விளக்கும்வாதம்.
பிரபஞ்ச வாதம் - ஒரு குறிப்பிட்ட காரணி பிரபஞ்சம் முழுவதற்கும் பொருந்தும் என்ற கொள்கை.
தனிப்பட்ட வாதம் - ஒவ்வொரு மதமும், மொழியும், இனமும் தனித்துவமானது, முக்கியமானது என்னும் வாதம்.
தகர்ப்பமைப்பு (கட்டுடைத்தல்) முறை - உட்புற மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை புரிந்து கொள்ளுதல். ஒரு குறிப்பிட்ட எழுத்துப் படைப்பை படிக்கும் போது மேலோட்டமான பொருளை விட்டுவிட்டு உட்புற, மறைந்து இருக்கும் பொருளை புரிந்து கொள்வது.
அடையாள அரசியல் - குறிப்பிட்ட நலிவடைந்த சமூக குழுக்கள் ஆதிக்க முறைக்கு எதிராக தங்களது சாதி, இனம், பாலினம் அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள்.
மனித முன்னிறுத்துதல் - மற்ற உயிரினங்களை விட மனித இனம் முதன்மையான மற்றும் உயர்ந்தது என்ற அணுகுமுறை. மனிதனின் வாழ்விற்கும், இன்பத்திற்கும் தான் மற்ற உயிரினங்கள் இவ்வுலகில் உள்ளன.
உயிர் முதன்மைச் சமத்துவம் - இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் சமம், மற்ற உயிரினங்களை விட மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவன் கிடையாது.
தலைமுறைகள் இடையிலான நீதி - புவியை நாம் வருங்கால சந்ததியிடம் இருந்து கடன் வாங்கி உள்ளோம். இயற்கையை அழிக்காமல் மீண்டும் நாம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைக்க வேண்டும்.
நிலையான முன்னேற்றம் - இயற்கைச் செல்வங்களை நாம் பயன்படுத்தும் போது வருங்கால தேவைகளையும் நமது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நிலைத்த, நீடிய முன்னேற்றத்தை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்.
ஆழச் சூழலியல் - முன்னேற்றம் என்ற பெயரில் சுற்றுச் சூழலை பாதிக்கும் நமது நடவடிக்கைகளை ஆழமாக உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.
சிப்கோ இயக்கம் - இந்தி மொழியில் சிப்கோ என்றால் கட்டிப்பிடி என்பது பொருளாகும். மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து அவற்றை வெட்டப்படுவதில் இருந்து காப்பாற்றிய இயக்கம்.
அப்பிக்கோ இயக்கம் - கன்னட மொழியில் அப்பிக்கோ என்றால் கட்டிப்பிடி என்பது பொருள் ஆகும். கர்நாடக மாநிலத்தில் மரங்களை கட்டிப்பிடித்து காப்பாற்றிய இயக்கமே அப்பிக்கோ இயக்கம் ஆகும்.