Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement

   Posted On :  08.07.2022 10:25 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

பாடச் சுருக்கம்

வங்கப் பிரிவினையால் ஏற்பட்ட சுதேசி இயக்கங்கள் காலனிய எதிர்ப்பியக்க வரலாற்றில் முக்கியத் திருப்புமுனைகள் ஆகும்.

பாடச் சுருக்கம்

• வங்கப் பிரிவினையால் ஏற்பட்ட சுதேசி இயக்கங்கள் காலனிய எதிர்ப்பியக்க வரலாற்றில் முக்கியத் திருப்புமுனைகள் ஆகும்.

• அரசியல் பரப்புரைகளுக்குப் புதிய செய்முறைகளை வடிவமைத்ததோடு இவ்வியக்கம் சுதந்திரப்போராட்டத்தில் காந்தியடிகளின் காலப்பகுதி உட்பட ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பைத் தக்க வைப்பதற்கான ஊக்கத்தையும் கொடுத்தது.

• சுதேசி இயக்கத்தின் போது ஆங்கிலத்தில் உரையாற்றுவது மாற்றத்திற்கு உள்ளாகி சுதேச மொழிகளில் (வட்டார மொழிகளில்) சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது செய்திப் பரிமாற்றத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

• சுதேசி இயக்கம் வன்முறையின் மீது நாட்டம் கொண்ட இளைஞர்கள் உருவாவதற்கும் வழி கோலியது.

• வரலாறு, இலக்கியம், நாட்டுப்பற்று, தேசியம் தொடர்பாக பிராந்திய மொழிகளில் உருவான கவிதைகள் ஆகியவை மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதில் சுதேசி இயக்கச் சூழல் செழிப்பான பங்களிப்பைச் செய்தது.

• தேசியவாதிகளின் மீது ஆங்கிலேயர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதால் தீவிர தேசியவாதிகள் தங்கள் கொள்கை முழக்கங்களை பரந்துபட்ட பொருளாதாரக் குறைபாடுகளோடும் பெருவாரியான பொதுமக்களோடும் இணைப்பதில் தோல்வியடைந்தனர்.

• இந்துக்களைத் திரட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட மதமும் மதக்குறியீடுகளும் முஸ்லிம்களை அந்நியப்படுத்தின.

 

Tags : Rise of Extremism and Swadeshi Movement | History தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு.
12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement : Summary Rise of Extremism and Swadeshi Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் : பாடச் சுருக்கம் - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்