Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

பாடச் சுருக்கம்

காந்தியடிகளின் அரசியல் நுழைவு, புதிய உயிர்த்துடிப்பை ஏற்படுத்துவதுடன், சம்பரான் மற்றும் கேதாவில் நடந்த விவசாய இயக்கங்கள், அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் சத்தியாகிரகத்தைச் சோதித்துப் பார்த்தது ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க அடிப்படையை அமைத்தது.

பாடச் சுருக்கம்

• காந்தியடிகளின் அரசியல் நுழைவு, புதிய உயிர்த்துடிப்பை ஏற்படுத்துவதுடன், சம்பரான் மற்றும் கேதாவில் நடந்த விவசாய இயக்கங்கள், அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் சத்தியாகிரகத்தைச் சோதித்துப் பார்த்தது ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க அடிப்படையை அமைத்தது.

• 1919இல் இந்திய கவுன்சில் சட்டத்தின் கீழ் மாகாணங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இரட்டை ஆட்சியின் குறைபாடுகள், பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள் தேசிய நீரோட்டத்தில் தேசிய அரசியலுக்கு ஏற்படுத்திய சவால்கள் காங்கிரசை இக்காலகட்டத்தில் பாதித்தது.

• கிலாபத், ரௌலட் சட்டம் ஆகிய கருத்துகள் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு காந்தியடிகள் விடுத்த அழைப்பு, அதற்கு பதிலடியாக ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு வித்திட்ட பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவிக்க காங்கிரஸைத் தூண்டியது.

• சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெற்றது, சட்டப்பேரவைகளில் போராட்டங்களைத் தொடர்ந்த, குறுகிய காலமே செயல்பாட்டில் இருந்த சுயராஜ்ய கட்சியின் தோற்றம். •சைமன் குழுவையும் முதல் வட்ட மேசை மாநாட்டையும் புறக்கணித்த காங்கிரஸ் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டின் முடிவுகள் பலன்களைத் தராததால் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

• காந்தியடிகளின் தண்டி யாத்திரை, தமிழ்நாட்டின் வேதாரண்யம் நோக்கிய இராஜாஜியின் உப்புச் சத்தியாகிரக யாத்திரை ஆகியன மக்களைத் தேச நலனுக்காக ஒன்று திரட்டப் பெரிதும் உதவின.

• ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக உருவெடுத்த அம்பேத்கர், தனித்தொகுதிகளுக்கான அவரது ஆதரவு, பிரிட்டிஷார் அளித்த வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததும், காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : Summary Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : பாடச் சுருக்கம் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்