Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

பாடச் சுருக்கம்

நேருவும் பட்டேலும் எடுத்த முயற்சிகளையும் மீறி எழுந்த சட்ட ஒழுங்குப் பிரச்சனை மற்றும் சொந்த நாட்டிலேயே அகதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தும் பிரச்சினைகள் இயன்ற அளவுக்குத் தீர்க்கப்பட்டன.

பாடச் சுருக்கம்

• இந்திய துணைக்கண்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிவினை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் முன்னொரு போதும் இல்லாத அளவில் வகுப்புவாத வன்முறை வெடித்து, கடினமாக உழைத்துப் பெற்ற சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

• நேருவும் பட்டேலும் எடுத்த முயற்சிகளையும் மீறி எழுந்த சட்ட ஒழுங்குப் பிரச்சனை மற்றும் சொந்த நாட்டிலேயே அகதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தும் பிரச்சினைகள் இயன்ற அளவுக்குத் தீர்க்கப்பட்டன.

• அரசமைப்பை உருவாக்குவது, இந்திய அரசுடன் சுதேச அரசுகளையும் ஒருங்கிணைப்பது, சில பலமான மற்றும் அறிவியல் காரணங்களின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைத்தல், நாட்டிற்கான ஒரு நீண்டகால வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவது போன்ற சவால்கள் சிறப்பாக கையாளப்பட்டன. பல சிக்கல்கள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் திருப்திபடுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.

• பல சுதேசஅரசுகள் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்ட போதிலும், அத்துமீறிய திருவாங்கூர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் போன்றவை கடுமையான நடவடிக்கைகள் மூலம் இணைக்கப்பட்டன.

• அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை இந்தியா உருவாக்கியது. போரைத் தடுக்கவும் உலக சமாதானத்தை வளர்ப்பதற்கும் இந்தியா அணிசேராமை என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.

Tags : Reconstruction of Post-colonial India | History காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு.
12th History : Chapter 8 : Reconstruction of Post-colonial India : Summary Reconstruction of Post-colonial India | History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு : பாடச் சுருக்கம் - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 8 : காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு