புரட்சிகளின் காலம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 11 : The Age of Revolutions
பாடச் சுருக்கம்
• இங்கிலாந்தின் தாங்கிக்கொள்ள முடியாத அடக்குமுறை
சார்ந்த வரிவிதிப்புப்படி நடவடிக்கைகளும், காலனி மக்களின் எதிர்ப்பும் இவை எவ்வாறு
அமெரிக்க விடுதலைப் போர் வெடிப்பதற்கு இட்டுச்சென்றது என்பதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
• விடுதலைப் போரின் போக்கும் அதன் விளைவுகளும்
இப்புரட்சியின் முக்கியத்துவமும் மதிப்பிடப்பட்டுள்ளன.
• தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்டதும் அது
வெளியிட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைப் பிரகடனமும் விவரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு
அரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படல், முடியாட்சி ஒழிப்பு , ஜேக்கோபியர்களின் ஆதிக்கத்திலிருந்த
தேசியப் பேரவை மேற்கொண்ட பணிகள் ஆகியன விரித்துரைக்கப்பட்டுள்ளன.
• பிரான்சின் கட்டுப்பாட்டிலிருந்த செயின்ட்
டோமிங்கோவில் ஏற்பட்ட புரட்சி, அதனைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா,
கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில் ஆகியனவற்றில் நடந்த புரட்சிகள் சிறப்பு கவனத்துடன் விளக்கப்பட்டுள்ளன.
• இங்கிலாந்தில் நடைபெற்ற தொழிற்புரட்சியின்
இன்றியமையாக் கூறுகளும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள், ஜவுளி, இரும்பு ஆலைத் தொழில்களில்
நீராவியின் பயன்பாட்டால் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்கள், போக்குவரத்து, செய்திப்
பரிமாற்றம் ஆகியவற்றில் நடந்த மாற்றங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன.
• மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியிலும்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் நடைபெற்ற இரண்டாவது தொழிற்புரட்சி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
• தொழிற்புரட்சியின் தாக்கமும், அணி திரட்டப்பட்ட
தொழிலாளர் இயக்கங்களின் மீது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட்ட அரசு
வன்முறை ஆகியன தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன.