சுற்றளவு மற்றும் பரப்பளவு | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 3 : Perimeter and Area
பாடச் சுருக்கம்
• ஒரு மூடிய வடிவத்தின் எல்லையின் நீளம் அவ்வடிவத்தின் சுற்றளவு எனப்படும்.
• செவ்வகத்தின் சுற்றளவு, P = 2 × (l + b) அலகுகள்.
• சதுரத்தின் சுற்றளவு, P = 4 × S அலகுகள்.
• முக்கோணத்தின் சுற்றளவு, P = (a + b + c) அலகுகள்.
• சமபக்கமுடைய ஓர் ஒழுங்கு வடிவத்தின்,
சுற்றளவு = பக்கங்களின் எண்ணிக்கை × ஒரு பக்கத்தின் அளவு.
• ஒரு மூடிய வடிவத்தால் அடைபடும் பகுதி அதனுடைய பரப்பளவு ஆகும்.
• செவ்வகத்தின் பரப்பளவு, A = நீளம் × அகலம் = l × b சதுர அலகுகள்.
• சதுரத்தின் பரப்பளவு, A = பக்கம் × பக்கம் = S × S சதுர அலகுகள்.
• செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு, A = ½ (b × h) சதுர அலகுகள்.
• ஒரு கூட்டு வடிவத்தின் சுற்றளவு ஆனது அவ்வடிவத்தின் அனைத்து வெளிப் பக்கங்களின் நீளங்களின் கூடுதலுக்குச் சமம்.
• ஒரு கூட்டு வடிவத்தின் பரப்பளவு ஆனது அதை உருவாக்கிய ஒழுங்கு / எளிய வடிவங்களின் பரப்பளவுகளின் கூட்டுத்தொகை ஆகும்.
இணையச் செயல்பாடு
சுற்றளவு மற்றும் பரப்பளவு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1:
கீழ்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் சுற்றளவு மற்றும் பரப்பளவு என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். சதுரங்களாக எண்ணுதல் என்ற தலைப்பில் பணித்தாள் இடம் பெற்றிருக்கும்.
படி 2.
'New Problem' என்பதைச் சொடுக்கிச் சதுரங்களை எண்ணி கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவினை காண்க. தகுந்த பெட்டிகளை சொடுக்கி தங்கள் விடையை சரிபார்க்கவும்.
செயல்பாட்டிற்கான உரலி:
சுற்றளவு மற்றும் பரப்பளவு: https://ggbm.at/dxv8xvhr அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.