ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நிறங்களின் தொகுப்பு | 7th Science : Term 3 Unit 1 : Light
நிறங்களின் தொகுப்பு
நிறங்களின் தொகுப்பு என்பது, இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும். அவ்வகையில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும். இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
• ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை சமமான விகிதத்தில் கலக்கும்போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும்.
• மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
• முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில்ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.
இணையச் செயல்பாடு
ஒளியியல்
படிநிலைகள்
படி 1: URL அல்லது Q.R.Code ஐ பயன்படுத்தி செயல்பாடு பக்கத்தை திறக்கவும்
படி 2: டார்ச் விளக்கை தேர்வு செய்க. ஒளி அலைகள் எவ்வாறு ஆடியில் பட்டு எதிரொளிக்கிறதுஎன்பதைக் காண்க. டார்ச்சை வெவ்வேறு கோணங்களில் மாற்றுக. படுகோணமும், எதிரொளிப்புகோணமும் சம்மாக இருப்பதைக் காணலாம்
படி 3: பின்னர் முப்பட்டகத்தை தேர்வு செய்க. செய்து எவ்வாறு முப்பட்டகமான ஒளி அலையின்பாதையை மாற்றுகிறது என்பதை அறியலாம்.
ஒளியியல் URL:
https://simpop.org/reflection/reflection.htm
*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
*தேவையெனில் 'Adobe Flash'ஐ அனுமதிக்கவும்.