Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | ஒளியின் எதிரொளிப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள்

ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - ஒளியின் எதிரொளிப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள் | 7th Science : Term 3 Unit 1 : Light

   Posted On :  22.05.2022 10:46 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்

ஒளியின் எதிரொளிப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள்

எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். படத்தில் PO என்பது படுகதிர் ஆகும்.

ஒளியின் எதிரொளிப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள்


படுகதிர்: எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். படத்தில் PO என்பது படுகதிர் ஆகும்.

எதிரொளிப்புக் கதிர்: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக்கதிர் எனப்படும். படத்தில் OQ என்பது எதிரொளிப்புக்கதிர் ஆகும். 

படுபுள்ளி: எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில் படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி படுபுள்ளி எனப்படும். படத்தில் 'O' என்பது படுபுள்ளி ஆகும்.

குத்துக்கோடு: படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும். படத்தில் ON என்பது குத்துக்கோடு ஆகும்.

படுகோணம்: படுகதிர் ‘PO’ -ற்கும் குத்துக்கோடு ON - ற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் ஆகும். படுகோணம் 'i'' எனக் குறிப்பிடப்படுகிறது. 

எதிரொளிப்புக்கோணம்: எதிரொளிப்புக்கதிர் OQ -ற்கும், குத்துக்கோடு ON -ற்கும் இடையே உள்ள கோணம் எதிரொளிப்புக்கோணம் ஆகும். எதிரொளிப்புக்கோணம் ‘r’ எனக் குறிப்பிடப்படுகிறது


Tags : Light | Term 3 Unit 1 | 7th Science ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 1 : Light : Terms used in reflection of light Light | Term 3 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல் : ஒளியின் எதிரொளிப்பில் பயன்படுத்தப்படும் வரையறைகள் - ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்