Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | வேலைவாய்ப்பின் வகைகள்: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், ஒழுங்கமைக்கப்படாத துறைகள்

இந்திய பொருளாதாரம் - வேலைவாய்ப்பின் வகைகள்: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், ஒழுங்கமைக்கப்படாத துறைகள் | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

   Posted On :  11.09.2023 09:26 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பின் வகைகள்: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், ஒழுங்கமைக்கப்படாத துறைகள்

பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ஒழுங்கமைக்கப்பட்டத் துறை எனப்படும்.

வேலைவாய்ப்பின் வகைகள்

 

ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள்

பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ஒழுங்கமைக்கப்பட்டத் துறை எனப்படும். இந்தியாவில் வங்கிகள், ரயில்வே , காப்பீடு உற்பத்தித் தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள் ஒழுங்கமைக்கப்பட்டத் துறைகள் என்று கூறலாம். இந்தத் துறைகள், சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி செயல்படுகிறது இந்த ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் இருப்பவரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் நல்ல ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவை வழங்கப்படும்.


 

ஒழுங்கமைக்கப்படாத துறைகள்

அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறைகள் என்பது வீட்டு உபயோகப் பொருள்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம். இதற்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. இவற்றில் வேலை செய்வோருக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது பெரும்பாலும் அவர்களுக்குக் ஊதியத்துடன் விடுப்பு விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு போன்றவை இருக்காது. வேலை உத்தரவாதம் கிடையாது. வேலையில்லாத போது அவர்கள் தொழில் கூடங்களிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். தெருக்களில் விற்பனை செய்வோர், பழுதுகள் சரி பார்ப்போர், சிறிய அளவிலான தொழில் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏராளமான எண்ணிக்கையிலான மக்களை இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது.

அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் வேலைவாய்ப்பு வரையறைகள் நிலையானதாக, ஒழுங்குபடுத்தப்பட்டதாக இல்லை . தொழிலாளர்களுக்குச் சிறப்பு ஆதாயங்களோ வேலை நிரந்தரமோ கிடையாது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவை அல்ல.

 

பொது மக்கள் துறையும் தனியார் துறையும்

சொத்துகளின் உரிமையாளரையும், சேவைகள் அளிப்பதற்குப் பொறுப்பானவரையும் அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளின் - அடிப்படையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.


பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கான வேறுபாடுகள் 


பொதுத்துறை

1. சேவை நோக்கம் கொண்டது

2. சொத்துக்கள் அரசாங்கத்துக்கு சொந்தம்

3. ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது.

தனியார் துறை

1. இலாப நோக்கம் கொண்டது

2. சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்

3. ஊதியம் உரிமையாளரால்  வழங்கப்படுகின்றன.

Tags : Indian Economics இந்திய பொருளாதாரம்.
9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu : Types of Employment: Organised and Unorganised Sectors Indian Economics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : வேலைவாய்ப்பின் வகைகள்: ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், ஒழுங்கமைக்கப்படாத துறைகள் - இந்திய பொருளாதாரம் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு