Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | வேலைவாய்ப்பு அமைப்பு

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் - வேலைவாய்ப்பு அமைப்பு | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

   Posted On :  11.09.2023 09:22 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு அமைப்பு

சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அமைப்பில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதோடு இது பணியமர்த்துவோர், அவர்களின் ஊழியர்களிடையே அதிக நெகிழ்ச்சியோடு பணிபுரியும் முறையை வளர்த்தெடுக்க உதவியது.

வேலைவாய்ப்பு அமைப்பு

சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அமைப்பில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதோடு இது பணியமர்த்துவோர், அவர்களின் ஊழியர்களிடையே அதிக நெகிழ்ச்சியோடு பணிபுரியும் முறையை வளர்த்தெடுக்க உதவியது. தற்கால வேலைவாய்ப்பு போக்குகளாவன. () அதிகரித்துவரும் சுய வேலைவாய்ப்பு (.) நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும். (.) பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

தமிழகத்தில் வேலைவாய்ப்புப் போக்குகள்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலையளித்துக் கொண்டிருக்கிறது இதற்குக் காரணம், விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றி கொள்வதற்குப் போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தமிழ் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி, குறைந்த வருமானங்களை அளிக்கின்ற அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத முறைசாரா துறைகளின் பங்களிப்பாகவே உள்ளது

இருவேல்பட்டுவில் வேலைவாய்ப்பு: ஒரு கள ஆய்வு

வேலைவாய்ப்பு நிலவரங்களில் ஏற்படும் மாற்றத்தைத் தேசிய அல்லது மாநில அளவில் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும் என்றில்லை; கிராமத்தை ஆய்வு செய்வதிலிருந்தும் புரிந்துகொள்ளலாம். இருவேல்பட்டு என்பது தமிழ்நாட்டில் விழுப்பும் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இந்தக் கிராமம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறிஞர்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த கிராமம் ஸ்லேட்டர் கிராமம் என்றும் கூறப்படும்; ஏனெனில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர் முதன்முதலில் தனது மாணவர்களுடன் கள ஆய்வு செய்வதற்காக இந்த கிராமத்திற்கு 1916 ஆம் ஆண்டு சென்றார். காலப் போக்கில் பல ஆய்வாளர்கள் கிராமத்தவர்களின் வேலை குறித்து கணக்காய்வு செய்து கிராமத்திலுள்ள ஒவ்வொருவர் குறித்தும் மேலும் பல விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

இந்தக் கிராம வளர்ச்சியின் காரணம் கிராம மக்களிடையே ஆரம்ப சுகாதார நலம், பள்ளிகள் அமைத்தது பொது விநியோக அமைப்பு ஆகியவற்றின் மீது சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்தியது காரணமாகும். இந்தக் கிராமம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ள போதிலும் இன்னமும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியமாக விவசாயத்தையே சார்ந்துள்ளது. பின்வரும் அட்டவணையைப் பாருங்கள். 1981 ஆம் ஆண்டில் 100 குடும்பங்களில் 24 குடும்பங்கள் விவசாயமல்லாத வேலைகளில் ஈடுபட்டிருந்ததைக் காணலாம். 2008ஆம் ஆண்டில் விவசாயமல்லாத வேலைகளில் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது 1981-2008 காலத்தில் விவசாயத்தில் 34% லிருந்து 26% ஆக விவசாயக் கூலிகளாகவும், பயிரிடுவோராகவும் ஈடுபட்டிருந்த குடும்பங்களின் விகிதம் குறைந்துள்ளது.

இருவேல்பட்டுவில் இருந்த குடும்பங்களின் வேலை விவரங்கள் (சதவீதத்தில்)


செயல்பாடு

1. விவசாயத்திலிருந்து விவசாயமல்லாத வேலைகளுக்கு இருவேல்பட்டு மக்கள் மாறியது ஏன்? என்ன காரணமாக இருக்கமுடியும்?

 2. விவசாயத்திலிருந்து விவசாயமல்லாத வேலைகளுக்கு மாறுவது எளிதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 உங்கள் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் கலந்துரையாடி, வகுப்பில் விவாதிக்கவும்.

3. உங்கள் பகுதியிலுள்ள 20 குடும்பங்களின் முதன்மைத் தொழில் விவரங்களைச் சேகரியுங்கள். மேலே இருப்பதைப் போன்று ஓர் அட்டவணை தயார் செய்து வகுப்பில் விவாதியுங்கள்

 

 

மீள்பார்வை

உழைப்பாளர் குழு என்பது நாட்டிலுள்ள வேலை செய்கின்ற மற்றும் வேலை செய்வதற்கான திறன்பெற்றுள்ள குழுவிலுள்ள மக்களின் எண்ணிக்கையாகும்.

வேலைவாய்ப்பு அமைப்பு பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

● 1972-73 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் சராசரியாக 2% பெருகி உள்ளது.

அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறை அவற்றின் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பும், காப்பீடு போன்ற இதர ஆதாயங்களும் அளிக்கிறது.

பொதுத்துறை என்பவை அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்களாகும்.

மக்களது வாழ்க்கைமுறையின் காரணமாக வேலைவாய்ப்புப் முறை மாற்றமடைகிறது.

Tags : Employment in India and Tamil Nadu | Economics இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல்.
9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu : Employment Pattern Employment in India and Tamil Nadu | Economics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : வேலைவாய்ப்பு அமைப்பு - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு