Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | நீர் - உயிரி மூலக்கூறுகள்

வேதியியல், நீரின் பண்புகள் - நீர் - உயிரி மூலக்கூறுகள் | 11th Botany : Chapter 8 : Biomolecules

11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்

நீர் - உயிரி மூலக்கூறுகள்

அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகப்படியாகக் காணப்படும் பகுதிக்கூறு நீர் ஆகும்.

நீர் 


அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து உயிரினங்களிலும் மிக அதிகப்படியாகக் காணப்படும் பகுதிக்கூறு நீர் ஆகும். புவியின் அனைத்து உயிரினங்களும் தவிர்க்க முடியாதபடி நீருடன் பிணையுற்றுள்ளன. மனிதச் செல்லில் 70 விழுக்காடும், தாவர உயிர்புல எடையில் 95 விழுக்காடும் நீரால் ஆனது (படம் 8.2). 




1. நீரின் வேதியியல்


நீர் என்பது சவ்வின் ஊடே எளிதில் கடந்து செல்லும் துருவத்தன்மை கொண்ட மூலக்கூறாகும். ஒரு நீர் மூலக்கூறின் இரட்டை எதிர்மின் சுமை பெற்ற ஆக்ஸிஜன் அணு அருகமைந்த இரு மூலக்கூறுகளின் ஹைட்ரஜன் அணுக்களுடன் எலக்ட்ரானை பகிர்வதன் மூலம் ஹைட்ரஜன் பிணைப்புகள் ஏற்படுகின்றன. இப்பிணைப்பால் நீர்மூலக்கூறுகள் கூட்டிணையமுடிகிறது. இக்கூட்டிணைவு மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அடுக்குற்ற அமைப்பாகின்றன (படம் 8.3).




2. நீரின் பண்புகள்


ஒட்டிணைவு மற்றும் கூட்டிணைவுத் தன்மை கொண்டது.

• ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தை அதிகமாகக் கொண்டது.

• அதிக உருகு நிலை மற்றும் கொதிநிலை கொண்டது.

• உலகளாவிய ஒரு கரைப்பானாகத் திகழ்கிறது.

• அதிகத் தன் வெப்ப ஏற்பு திறன் கொண்டது.

 

Tags : Chemistry, Properties of Water வேதியியல், நீரின் பண்புகள்.
11th Botany : Chapter 8 : Biomolecules : Water - Biomolecules Chemistry, Properties of Water in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள் : நீர் - உயிரி மூலக்கூறுகள் - வேதியியல், நீரின் பண்புகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 8 : உயிரி மூலக்கூறுகள்