நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : Geography: Mapping Skills
VII. விரிவான விடையளிக்கவும்
1.
நிலவரைபடங்களில்
அளவை
என்பதன்
பொருள்
என்ன?
அதன்
வகைகளை
விளக்குக.
விடை:
அளவை:
• அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.
சொல்லளவை முறை:
• நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம். இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.
பிரதிபின்ன முறை:
• இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R.F என சுருக்கமாகக் கூறப்படுகிறது (R.F. = பிரதிபின்ன முறை).
பிரதிபின்ன முறை = நிலவரைபடத் தூரம் / புவிப்பரப்பின் துரம்
கோட்டளவை முறை:
• நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறையாகும். இந்த முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.
2.
திசைகள்
- தகுந்த
படம்
வரைந்து
விளக்குக.
விடை:
திசைகள்:
• பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
• ஒரு நிலவரைபடத்தில் வடக்குதிதிசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.
• நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது வலக்கை கிழக்கு திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் நமது பின்புறம் தெற்கு திசையையும் காட்டும்.
• இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
3.
உலக
அமைவிடத்
தொகுதியின்
(GPS) பயன்களை
விவரி.
விடை:
உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் நன்மைகள் (GPS):
• கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணப்பரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்) என அனைத்திலும் தொழில் நுட்பம் உதவுகிறது.
• உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம், வழி மற்றம் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த்தேடல்கள் மற்றம் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.
• விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடல் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
• வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவுயுடன் சிறப்பாக செயல்படுகின்றன.