நிலவரைபடத் திறன்கள் | புவியியல் - நில அளவை (Survey) | 9th Social Science : Geography: Mapping Skills
நில அளவை (Survey)
புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரிடத்தின் கோணம், திசை, பரப்பு உயரம் மற்றும் தூரம் ஆகியவற்றைக் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்வது நில அளவை எனப்படும். நிலவரை படங்களைத் தயாரிப்பதற்கும், இடம் சார்ந்த தகவல்களைப் பெறுவதற்கும் ஆய்வு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நில அளவைமுறை நிலவரைப்படத் தயாரிப்பில் குறிப்பாக இயற்கை அமைப்பு நிலவரைபடங்களைத் தயாரிப்பதில் உதவுகிறது.
புவியியலாளர்கள் நிலவரைபடத்தை வரைவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன நிலஅளவை கருவிகள்
நில அளவையின் வரலாறு
எகிப்தில் சர்வேயர்கள் "கயிறு நீட்சியர்" என அழைக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் தூரங்களை அளவிடுவதற்குக் கயிறுகளைப் பயன்படுத்தினர்.
புவியியலாளர்களால் பயன்படுத்தும் நவீன நிலஅளவைக் கருவிகளான சங்கிலி (Chain), பட்டகக் காந்தவட்டை (Prismatic Compass), சமதளமேசை (PlaneTabe), மட்டமானி (Dumpy Level) அப்னே மட்டம் (Abney Level), சாய்வுமானி (Clinometer). தியோடலைட். (Theodalite) மொத்த ஆய்வு நிலையம் (Total Station) மற்றும் உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்கு முறை (GNSS) ஆகியவற்றைக்கொண்டு ஓரிடத்தின் தூரம், கோணம், உயரம் மற்றும் நிலப்பரப்பை அளவிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.