நிலவரைபடத் திறன்கள் | புவியியல் - புவன் (Bhuvan) | 9th Social Science : Geography: Mapping Skills

   Posted On :  08.09.2023 03:06 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

புவன் (Bhuvan)

புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு புவி என்று பொருள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (RC) ஆகஸ்ட் 12ம் நாள், 2009 ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

புவன் (Bhuvan)

புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு புவி என்று பொருள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (RC) ஆகஸ்ட் 12ம் நாள், 2009 ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய தொலை நுண்ணுணர்வு செயற்கைக்கோளானது சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் பதிமங்களை ஆராய இயலும். இந்த செயற்கைக்கோள் படங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஏழு செயற்கை கோள்களின் மூலம் கார்ட்டோசாட் I மற்றும் கார்டோசாட் II எடுக்கப்பட்ட படங்களும் இதில் உள்ளடக்கியது. இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள புவன் மூலம் ஒருவர் விரும்பிய இடங்களையோ செய்திகளில் இடம்வறும் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களையோ, தாங்கள் செல்லவே இயலாத உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப்பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம். விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொதுமக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது.

 

மீள்பார்வை

புவிப்பகுதியின் ஒரு இடத்தின் அளவினை அளந்து பதிவு செய்யும் முறையே நிலளைவை என்று அறியப்படுகிறது.

அனாக்ஸிமேன்டர் என்ற கிரேக்க அறிவியலாளர் உலக  வரைபடத்தினை முதலில் வரைந்தார்.

 நிலவரைபடம் என்பது உலகை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ காட்ட வல்லது.

நிலவரைப்படத்தினை வரையும் கலையே நிலவரைபடவியல் (Cartograptry) எனப்படுகிறது.

 ஒரு நிலவரைபடம் என்பது தன்னுள் அதன் தலைப்பு, அவாவை, திகைள், புவிவலைப் பின்னால், கோட்டுச் சட்டங்கள், நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

 வலைப்பின்னல் (Grid) என்பது தலப்படத்தில் பல கோடுகள் இணைந்து ஒரு இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.

தொலைநுண்ணூர்வு என்பது தொலைவில் இருப்பதை உணர்தல் அல்லது அறிதல் என்பதாகும்.

உலக வழிகாட்டும் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS) என்பது பயனாளிகளுக்கு வழியையோ, அவர்களின் இருப்பிடத்தையோ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அறிந்து கொள்ள உதவும் ஒரு அமைப்பு.

புவி தகவல் அமைப்பு என்பது கணினி, வன்பொருள், மென்பொருள் புவி தகவல்கள் மற்றும் பணியாளர் தொகுதி இணைந்த அமைப்பாகும்.

Tags : Advantages, Google Earth நிலவரைபடத் திறன்கள் | புவியியல்.
9th Social Science : Geography: Mapping Skills : Bhuvan Advantages, Google Earth in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : புவன் (Bhuvan) - நிலவரைபடத் திறன்கள் | புவியியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்