Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Mapping Skills

   Posted On :  08.09.2023 03:49 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமான விடையளி.


1. நிலைவரைபடம் என்றால் என்ன?

விடை:

நிலவரைபடம்

நிலவரைபடம் ஒரு புவியிலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.

புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.

 

2. நிலவரைப்படத்தின் கூறுகள் யாவை?

விடை:

நிலவரைபடத்தின் கூறுகள்:

தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோடுச்சட்டம் நிலவரைபடக் குறிப்பு, முறைக் குறியீடுகள்


3. A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ. ஆகும். இது நிலவரைப்படத்தில் 5செ.மீ. இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.

விடை:

நிலவரைபடத்தூரம் = 5 செ.மீ.

புவிபரப்பின் தூரம் = 5 கி.மீ.

1cm = 1km 5cm = 5km

R.F = 5செ.மீ. / 5கி.மீ.

5 /  500000 =1 / 100000

எனவே பிரதி பின்ன முறை = RF = 1:100000

 

4. நில அளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக

விடை:

சங்கிலி, பட்டகக் காந்தவட்டை, சமதளமேசை, மட்டமானி, அப்ளே மட்டம், சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகலாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை.

 

5. தொலை நுண்ணுணர்வு - வரையறு?

விடை:

தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.

தொலை என்பது தூரத்தையும்நுண்ணுணர்தல்' என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.

 

6. தொலை நுண்ணுணர்வின் கூறுகள் யாவை?

விடை:

தொலை நுண்ணுணர்வின் கூறுகள்

ஆற்றல் மூலம்

இலக்கு

அனுப்பும் வழி

உணர்விகள்

Tags : Mapping Skills | Geography | Social Science நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Mapping Skills : Answer in brief Mapping Skills | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்