நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக | 9th Social Science : Geography: Mapping Skills

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

காரணம் கூறுக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : காரணம் கூறுக

V. காரணம் கூறுக.


1. நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.

விடை:

ஏனெனில்,

• செயற்கைக் கோள் பதிமங்கள் செயற்கைக் கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை (digitally transmitted images) குறிப்பிடுகிறது. புவியின் தன்மைகள், விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள்.

• மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். எளிதாக பட மேம்பாட்டிற்கான மென்பொருள்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம். செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.

 

2. புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைப்படம்.

விடை:

ஏனெனில்,

• நிலவரைப்படம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது. புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைப்படங்கள் அமைகின்றன.

 

3. நிலவரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.

விடை:

ஏனெனில்,

• நிலபரைப்படத்தில் ஓர் இடத்தின் அமைவிடம் அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் அமைப்பாகும்.

• படத்தில் இடவலமான கிடைமட்டக் கோடுகள் வடக்கைக் கோடுகள் (Northing) என்றும், மேல்கீழ் செங்குத்துக் கோடுகள் கிழக்கைக் கோடுகள் (Easting) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் வெட்டும் புள்ளிகள் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.

• வலைப்பின்னல் (Grid) என்பது தல வரைபடத்தில் பல கோடுகள் இணைந்து ஓர் இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.

Tags : Mapping Skills | Geography | Social Science நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Mapping Skills : Give Reasons Mapping Skills | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : காரணம் கூறுக - நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்