நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography: Mapping Skills
VI. வேறுபடுத்துக
1.
புவிமாதிரி
மற்றும்
நிலவரைபடம்
விடை:
புவிமாதிரி
1. புவிமாதிரி முப்பரிமாண முறையில் மொத்த உலகையும் எடுத்துக்காட்டுகிறது.
2 புவியின் கோளவடிவமான மாதிரியில் புவியின் அமைப்பை வெளிக்காட்டுகிறது
நிலவரைபடம்
1. இருபரிமாண முறையில் புவியின் மேல்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெளிக்காட்டுகிறது.
2. புவியின் இயற்கை அமைப்புகளை சமதளப் பரப்பில் பிரதிபலிக்கின்றது.
2.
வான்
வழி
புகைப்படங்கள்
மற்றும்
செயற்கைக்கோள்
பதிமங்கள்
விடை:
செயற்கைக்கோள் பதிமங்கள்
1. செயற்கைக்கோள் அமைப்புகள் விலை உயர்ந்த திட்டமிட்டு, கட்டமைக்க பரிசோதித்து மற்றம் செயல்படத் துவங்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகின்றன.
2. மிக குறுகிய காலத்தில் முழுப் பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் செயற்கைக் கோள்கள் சேகரிக்கின்றன
3. உலகளாவிய தகவல் சேகரிப்பிற்கு அனுமதி பெறத் தேவையில்லை.
4. செயற்கைக்கோள்கள் புவியைச் சுற்றி வருவதால், எளிதாக மீண்டும் அதே பகுதியினைத் திரும்பப் பார்க்கலாம்.
5. வானிலை அதிகம் பாதிக்காது
வான்வழி புகைப்படம்
1. நில அளவையினை ஒரு குறுகிய காலத்தில் திட்மிடப்பட்டுக் குறைந்த செலவில் செயல்படுத்தலாம்
2. விமானம் முன்னும், பின்னுமாக பறந்து ஒரு பகுதியைப் படம் பிடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
3. ஒரு சிறிய பகுதியைப் படம் பிடிக்கக் கூட, உரிய அதிகாரிகளின் அனுமதி தேவை.
4. மீண்டும் படம் பிடிக்க அல்லது மறு ஆய்வுக்குக் கூடுதல் செலவு ஆகும்.
5. மோசமான வானிலை ஆய்வினைப் பாதிக்கும்.
3.
புவியியல்
தகவல்
அமைப்பு
மற்றும்
உலக
அமைவிடம்
கண்டறியும்
தொகுதி
விடை:
புவியியல் தகவல் அமைப்பு
1. புவியியல் தகவல் அமைப்பு ஒரு கணினி சார்ந்த கருவி.
2. புவியியல் நிலப்பரப்பைப் பற்றி அதிக புள்ளி விவரங்களைச் சேகரிக்க தொலை நுண்ணுணர்வு, உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி மற்றும் பிற ஆதார மூலங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
3. பிரச்சனைக்குரிய இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
அமைவிடம் கண்டறியும் தொகுதி
1. கருவிகள் எல்லா அளவிலும் வடிவிலும் காணப்படுகின்றன.
2. பெரும்பாலானவை கைபேசி அளவிலேயே கிடைக்கின்றன.
3. பயணத்தகவல்களைத் துல்லியமாக அறிய உதவுகிறது. இராணுவத் தேடல், போர்க் கலா மீட்பு நடவடிக்கையில் உதவுகிறது.