Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி

இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி | 9th Social Science : History: State and Society in Medieval India

   Posted On :  05.09.2023 02:01 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

1. கி.பி.(பொ.) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.

விடை:

மொகலாயர்கள் - கி.பி.(பொ.) 1526 - 1707:

கி.பி.(பொ.) 1526ல் முதலாம் பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்டு மொகலாயப் பேரரசை பாபர் நிறுவினார். 'மாபெரும் மொகலாயர்கள்' எனக் குறிப்பிடப்படும் அறுவரில் அக்பரும், ஔரங்கசீப்பும் அடங்குவர்.

அக்பர் நாடுகளைக் கைப்பற்றுதல், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணுதல் மூலம் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.

மாபெரும் கடைசி மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தது. இந்தியத்துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. அவருக்குப்பின் பேரரசு பலவாறாகப் பிரிந்தாலும் ஐரோப்பியர் வருகையால் முடிவு பெற்றது.

• 17ஆம் நூற்றாண்டில் சிவாஜி தலைமையில் எழுச்சி பெற்ற மராத்திய அரசராக மையம் மொகலாயர் அதிகாரத்தை மேற்கு இந்தியப் பகுதிகளில் மதிப்பிழக்கச் செய்தது.

மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக கேரளத்தின் தென்மேற்குப் பகுதி, தென் தமிழகப் பகுதிகள் மட்டுமே இருந்தன.

 

2. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சிகளை விளக்குக.

விடை:   

இடைக்கால இந்தியாவின் வணிக வளர்ச்சி :

இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை பிழைப்புக்கான பொருளாதார நிலையில் செலவாணி என்பது பண்டமாற்று, உற்பத்தியாளர் உபரியை உற்பத்தி செய்து அவரே வாழ்விடப் பகுதி வாரச் சந்தையில் விற்பனை செய்தல், உற்பத்தியாளரிடமிருந்து விற்பனை செய்வதை இடைத்தரகர்கள் மேற்கொள்ளுதல்.

கடைகளோடும், கடைவீதிகளோடும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்ட நகரங்கள், நாட்டின் பிறபகுதிகளோடு சாலைகளால் இணைக்கப்பட்டதால் பிராந்திய வணிகத்தின் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறுகப்பல்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டன. முக்கிய துறைமுகங்கள் (சூரத், மசூலிப் பட்டினம், கோழிக்கோடு

இந்தியப் பெருங்கடலின் குறுக்கே கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்காவரை கடல் வணிகம் செழித்தோங்கியது. நிலவியல் ரீதியாக இந்தியப் பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பது இப்பிராந்திய வணிகத்தில் ஒரு சிறப்பு.

ஏற்றுமதிப் பொருட்கள்: துணி, மிளகு, நவரத்தினக்கற்கள், இந்திய வைரம், இரும்பு, எஃகு.

இறக்குமதிப் பொருட்கள்: பட்டு, செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம்.

 

3. "தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்விளக்கவும்.

விடை:

"தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம் ஏனெனில்,

தமிழ்க வரலாற்றின் செழிப்புமிக்க இக்காலத்தில் வணிகமும், பொருளாதாரமும் விரிவடைந்தன.

நிர்வாக இயந்திரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் கிராமம் (ஊர்) ஆகும், நாடு, கோட்டம் (மாவட்டம்) என அமைந்தது. மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள்பிரம்மதேயம்'. சந்தை கூடுமிடங்கள், சிறுநகரங்கள்நகரம்'. இவை தனக்கென ஒரு மன்றத்தையும் (சபை) கொண்டிருந்தன.

மன்றங்களின் பொறுப்புகள் :

 நிலங்கள், நீர்நிலைகள், கோவில்கள் பராமரிப்பு, மேலாண்மை செய்தல்.

 உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்.

 அரசுக்கு சேரவேண்டிய வரிகளை வசூல் செய்தல்

சோழர்கள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

முதல் பரிமாணம்: புதிய கோவில்கள் கட்டப்படுதல்.

இரண்டாவது பரிமாணம்: பழைய கோவில்கள் பன்முனைச் சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறுதல்.


வரலாற்றுடன் வலம் வருக

மாணவர் செயல்பாடுகள்

1. கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் இடைக்கால இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிக்கவும்.

2. சோழர்கள் காலத்து முக்கியக் கட்டடங்கள் பற்றிய படங்களைச் சேகரிக்கவும்.

 ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

 1. கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவில் படங்களைச் சேகரிக்கவும்.

2. நகரமயமாதலின் சாதகங்களையும் பாதகங்களையும் குறித்து -வகுப்பில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவும்.

 

மேற்கோள் நூல்கள்

1. கே.. நீலகண்ட சாஸ்திரி தென்னிந்திய வரலாறு (வரலாற்றுக்கு  முற்பட்ட காலம் முதல் விஜயநகர பேரரசின் வீழ்ச்சி வரை ) .பா.... கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு ஆகஸ்ட் 2017).

2. டாக்டர் . கிருஷ்ண சாமி விஜயநகர பேரரசின் வரலாறு, .பா.... கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

3. கே.கே. பிள்ளை - சோழர் வரலாறு, .பா.... கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு ஆகஸ்ட் 2017)

4. S.M. எட்வர்ட்ஸ் , H.LO. காரெட் இந்தியாவில் முகலாயரின் ஆட்சி-1, .பா.... கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

5. K.A. Nilakanta Sastri, A History of South India, 1966.

6. Appadorai, Economic Conditions in Southern India 1000-1500.2 vols., 1990.

7. Tapan Raychaudhuri and Irfan Habib (ed). The Cambridge Economic History of India, vol.1, 1984.

8. Kanakalatha Mukund, The Trading World of the Tamil Merchant, 1999.

9. Burton Stein, A History of India., 2012.

 

Tags : State and Society in Medieval India from the Cholas to the Mughals | History | Social Science இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: State and Society in Medieval India : Answer the following in detail State and Society in Medieval India from the Cholas to the Mughals | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்