Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:14 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வரலாறு

அலகு எட்டு

நவீன யுகத்தின் தொடக்கம்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையை எழுதுக கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

) லியானார்டோ டாவின்சி

) பெட்ரார்க்

ஏராஸ்மஸ்

) தாமஸ் மூர்

விடை:

) பெட்ரார்க்


2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்

) ரஃபேல்

) மைக்கேல் ஆஞ்சலோ

) அல்புருட் டியுரர்

) லியானார்டோ டாவின்சி

விடை:

) ரஃபேல்


3. வில்லியம் ஹார்வி ………………. கண்டுபிடித்தார்.

) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

) பூமியே பிரபஞ்சத்தின் மையம்

புவியீர்ப்பு விசை

) இரத்தத்தின் சுழற்சி

விடை:

) இரத்தத்தின் சுழற்சி


4. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்களை எழுதியவர் யார்?

) மார்ட்டின் லூதர்

) ஸ்விங்லி

) ஐான் கால்வின்

) தாமஸ்மூர்

விடை:

) மார்ட்டின் லூதர்


5. 'கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்' என்ற நூலை எழுதியவர் ……………..

) மார்ட்டின் லூதர்

) ஸ்விங்லி

ஜான் கால்வின்

) செர்வாண்டிஸ்

விடை:

) ஜான் கால்வின்


6. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

) மாலுமி ஹென்றி

) லோபோ கோன்ஸால்வ்ஸ்

பார்த்தலோமியோ டயஸ்

) கொலம்பஸ்

விடை:

) லோபோ கோன்ஸால்வ்ஸ்


7. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர் ………………….

) கொலம்பஸ்

) அமெரிகோ வெஸ்புகி

) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

) வாஸ்கோடகாமா

விடை:

) ஃபெர்டினான்ட் மெகெல்லன்


8. அமெரிக்க கண்டம் ………………… என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

) அமெரிகோ வெஸ்புகி

) கொலம்பஸ்

) வாஸ்கோடகாமா

) ஹெர்நாண்டோ கார்டஸ்

விடை:

) அமெரிகோ வெஸ்புகி


9. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ……………….. இருந்தது.

) மணிலா

) பம்பாய்

பாண்டிச்சேரி

) கோவா

விடை:

) கோவா


10. கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

) கரும்பு

) சர்க்கரைவள்ளிக்கிழங்கு

அரிசி

) கோதுமை

விடை:

) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை ……………… கைப்பற்றினர்.

விடை:

உதுமானியத் துருக்கியர்

2.  ………………….. என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

விடை:

எராஸ்மஸ்

3. ………………… சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.

விடை:

மைக்கேல் ஆஞ்சலோ

4. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் ……………… ஆகும்.

விடை:

எதிர்மத சீர்திருத்தம்

5. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் ………………….. , ……………………..

மற்றும் ………………………  ஆகும்.

விடை:

வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

 

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

1. ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார் ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.

) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.

) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

விடை:

() தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

 

2. ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.

நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை .

) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விடை:

() புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

 

IV. பொருத்துக.

1 |நிலப்பிரபுத்துவம் - ஏகபோக வர்த்தகம்

2 மனிதாபிமானம் - மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை

3 நீதி விசாரணை - (ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும்

இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்)

4 |மெர்க்கண்டலிசம்சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

5 கொலம்பிய பரிமாற்றம் - மனித கௌரவம்

விடை:

1 |நிலப்பிரபுத்துவம் - -சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

2 மனிதாபிமானம் - மனித கௌரவம்

3 நீதி விசாரணை - மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை

4 |மெர்க்கண்டலிசம் - ஏகபோக வர்த்தகம்

5 கொலம்பிய பரிமாற்றம் - (ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும்

இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்)


Tags : The Beginning of the Modern Age | History | Social Science நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Beginning of the Modern Age : One Mark Questions Answers The Beginning of the Modern Age | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்