Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ செயற்கூறுகள் சீரற்ற (Random) எண்களை உருவாக்குதல்

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

C++ செயற்கூறுகள் சீரற்ற (Random) எண்களை உருவாக்குதல்

C++ -ல் srand() செயற்கூறு rand() செயற்கூற்றைப் பயன்படுத்தி போலி சீரற்ற எண்களை உருவாக்கலாம்.

சீரற்ற (Random) எண்களை உருவாக்குதல்


C++ -ல் srand() செயற்கூறு rand() செயற்கூற்றைப் பயன்படுத்தி போலி சீரற்ற எண்களை உருவாக்கலாம். rand() செயற்கூறுக்கு 1 என்ற மதிப்பு கொடாநிலை மதிப்பாகும், இதனால் rand() செயற்கூற்றை srand() என்ற செயற்கூற்றுக்கு முன் அழைத்தால், rand() செயற்கூறு srand(1) என்ற மதிப்புடன் அழைக்கப்பட்டதாக செயல்படும். srand() செயற்கூறு குறியில்லா முழு எண்ணை அதன் அளபுருவாக எடுத்துக்கொள்ளும், இதையே rand() செயற்கூறு அதன் தொடக்க எண்ணாக ஏற்கும். இந்த செயற்கூறு <cstdlib> அல்லது <stdlib.h> என்ற தலைப்பு கோப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது.


நிரல் 11.15

#include<iostream>

#include<cstdlib.h>

using namespace std;

int main()

{

      int random = rand(); /* No srand() calls before rand(), so seed = 1*/

      cout << "\nSeed = 1, Random number = " << random; srand(10);

      /* Seed = 10 */

      random = rand();

      cout << "\n\nSeed = 10, Random number = " << random;

      return 0;

}

வெளியீடு:

Seed = 1, Random number = 41

Seed = 10, Random number = 71



11th Computer Science : Chapter 11 : Functions : C++ Function: Generating Random Numbers in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : C++ செயற்கூறுகள் சீரற்ற (Random) எண்களை உருவாக்குதல் - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்