Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ செயற்கூறுகள் : நினைவில் கொள்க
   Posted On :  25.09.2022 09:13 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

C++ செயற்கூறுகள் : நினைவில் கொள்க

ஒரு பெரிய நிரலை சிறு சிறு பகுதிகளாக பிரிப்பதையே செயற்கூறுகளாகும்.

நினைவில் கொள்க


• ஒரு பெரிய நிரலை சிறு சிறு பகுதிகளாக பிரிப்பதையே செயற்கூறுகளாகும்.


• செயற்கூறுகள் முன் வரையறுக்கப்பட்ட அல்லது உள்ளிணைந்த அல்லது நூலக செயற்கூறுகள் மற்றும் பயனர் வரையறுத்த செயற்கூறுகள் என வகைப்படுத்தலாம்.


• பயனர் வரையறுத்த செயற்கூறுகள் பயனரால் உருவாக்கப்படும்.


• void செயற்கூறு எந்த மதிப்பையும் செயற்கூறு திருப்பி அனுப்பாது என்று நிரல்பெயர்ப்பிக்கு தெரிவிக்கும்.


• return கூற்று அழைப்பு செயற்கூற்றுக்கு ஒரு மதிப்பை திருப்பி அனுப்பியும், மேலும் அழைக்கும் செயற்கூற்றிற்கு கட்டுப்பாட்டை திருப்பி அனுப்பும்.


• C++ மொழியில் தானமைவாக திருப்பி அனுப்பும் தரவு வகை int தரவினமாகும்.


• தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறுகளை தற்சுழற்சி செயற்கூறு என்றழைக்கப்படும். 


• வரையெல்லை என்பது ஒரு மாறியின் அணுகியல்பைக் குறிக்கும்.


• உள்ளமை வரையெல்லை, செயற்கூறு வரையெல்லை, கோப்பு வரையெல்லை மற்றும் இனக்குழு வரையெல்லை என நான்கு வகையான வரையெல்லைகள் உள்ளன.


வரையெல்லை செயற்குறி (::) ஒரு மாறியின் மறைக்கப்பட்ட வரையெல்லையை தெரிவிக்கும்.

11th Computer Science : Chapter 11 : Functions : C++ Functions: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : C++ செயற்கூறுகள் : நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்