எடுத்துக்காட்டு நிரல் - C++: கட்டுப்பாட்டை செயற்கூறிலிருந்து திருப்பி அனுப்புதல் | 11th Computer Science : Chapter 11 : Functions
கட்டுப்பாட்டை செயற்கூறிலிருந்து திருப்பி அனுப்புதல்
return கூற்றை பயன்படுத்தி கட்டுப்பாட்டை செயற்கூறிலிருந்து திரும்பப் பெறலாம்.
return கூற்று செயற்கூறின் இயக்கத்தை நிறுத்தி கட்டுப்பாட்டை அழைத்த செயற்கூறுக்கு திருப்பி அனுப்பும். செயற்கூற்றின் பகுதியில் எங்கு return கூற்று இயக்கப்படுகிறதோ, உடனே அந்த இடத்தில் செயற்கூறின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, கட்டுப்பாடு அழைப்பு கூற்றுக்குத் திரும்பும்.
return கூற்று
செயற்கூறிலிருந்து கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற return கூற்று பயன்படுகிறது. இதை தாவும் கூற்றாக வகைப்படுத்தலாம். ஏனென்றால் இந்த கூற்றை இயக்கியவுடன் செயற்கூறின் இயக்கம் நிறுத்தப்பட்டு, கட்டுப்பாடு அழைக்கும் கூற்றுக்கு திரும்ப அனுப்பலாம். return கூற்று அதனோடு தொடர்புடைய மதிப்பு உடன் அல்லது மதிப்பு இல்லாமலோ இருக்கலாம். மதிப்பு உடன் உள்ள return கூற்று அழைப்பு கூற்றுக்கு அந்த மதிப்பைத் திருப்பி அனுப்பும். void செயற்கூறிற்கும் அளபுரு ஏற்காத return கூற்றைப் பயன்படுத்தி அந்த செயற்கூற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்.
தொடரியல்:
return expression/variable;
எடுத்துக்காட்டு :
return(a+b); return(a);
return; // to terminate the function
திருப்பி அனுப்பும் மதிப்புகள்:
மதிப்பினைத் திருப்பி அனுப்பாத செயற்கூற்றினை void என்று அறிவிக்கலாம். எந்த தரவினத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லையெனில் செயற்கூறின் திருப்பி அனுப்பும் தரவினம் int என்று கருதும்.
எடுத்துக்காட்டு :
int add (int, int);
add (int, int);
இவ்விரு முன்வடிவங்களும், int என்ற மதிப்பை திருப்பி அனுப்பும், ஏனெனில் C++ மொழியில் செயற்கூறு திருப்பி அனுப்பும் மதிப்பு தானமைவாகவே int ஆக இருக்கும். கீழ்காணும் எடுத்துக்காட்டுகளை காண்க.
முழு எண் அல்லாத மதிப்புகளை திருப்பி அனுப்புதல்
அழைப்பு கூற்றிற்கு சரத்தை கூட திருப்பி அனுப்ப முடியும்.
நிரல் 11.24
#include<iostream>
#include<string.h>
using namespace std;
char *display()
{
return (“chennai”);
}
int main()
{
char s[50];
strcpy(s,display());
cout<<”\nExample:Function with Non Integer Return”<<s;
return(0);
}
வெளியீடு :
Example: Function with Non Integer Return Chennai
நிரல் 11.25
#include<iostream>
using namespace std;
int main()
{
int n1=150;
int &n1ref=n1;
cout<<"\nThe Value of N1 = "<<n1<<" and n1Reference = "<<n1ref;
n1ref++;
cout<<"\nAfter n1 increased the Value of N1 = "<<n1;
cout<<" and n1Reference = "<<n1ref;
return(0);
}
வெளியீடு :
The Value of N1 = 150 and n1Reference = 150
After n1 increased the Value of N1 = 151 and n1Reference = 151