Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | செயற்கூறுகளின் தேவை

கணினி அறிவியல் - செயற்கூறுகளின் தேவை | 11th Computer Science : Chapter 11 : Functions

   Posted On :  20.09.2022 06:45 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

செயற்கூறுகளின் தேவை

நிரலின் நீளத்தை மற்றும் சிக்கற்பாட்டை குறைப்பதற்கு செயற்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றது.

செயற்கூறுகளின் தேவை


நிரலின் நீளத்தை மற்றும் சிக்கற்பாட்டை குறைப்பதற்கு செயற்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றது. நிரலர்கள் அவர்களுடைய சொந்த செயற்கூறுகளை எழுதியோ அல்லது நிலையான நூலகத்திலுள்ள செயற்கூறுகளைப் பயன்படுத்தியோ துணை நிரல்களை (Sub Programs) உருவாக்கலாம்.


1. பிரித்தலும் மற்றும் சேர்த்தலும் (Divide and Conquer)

 

• சிக்கலான நிரல்களை மேலாண்மை செய்ய அவற்றை துணை நிரல்களாகப் பிரிக்கலாம்.

• தனிப்பட்ட செயற்கூறுகளை உருவாக்குதல், பிழை கண்டறிதல் மற்றும் சோதனை செய்தல் போன்றவற்றில் நிரலர்கள் கவனம் செலுத்தலாம்.

• பல நிரலர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு செயற்கூறுகளில் பணியாற்றலாம். 



2. மறுபயனாக்கம் (Reusability):


• நிரலில் உள்ள சில வரிகளை மீண்டும் மீண்டும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம். ஒரு நிரலின் பல்வேறு நகல்களை நீக்க செயற்கூறுகள் பயன்படுகின்றன. மேலும் செயல்கூறுகள் நிரலை பராமரிக்கவும் அவற்றின் அளவை குறைக்கவும் பயன்படுகின்றது. 

• சில செயற்கூறுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பல்வேறு உள்ளீடுகளை கொண்டு அழைக்கலாம். 


Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 11 : Functions : Need for Functions in Programming Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : செயற்கூறுகளின் தேவை - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்