Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள்

முன்னுரை, எடுத்துக்காட்டு C++ நிரல் - மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள் | 11th Computer Science : Chapter 11 : Functions

   Posted On :  25.09.2022 09:12 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள்

வரையெல்லை என்பது ஒரு மாறியின் அணுகியல்பைக் குறிக்கிறது. C++ மொழியில் நான்கு வகையான வரையெல்லைகள் உள்ளன.

மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள் (Scope rules of Variables) 


வரையெல்லை என்பது ஒரு மாறியின் அணுகியல்பைக் குறிக்கிறது. C++ மொழியில் நான்கு வகையான வரையெல்லைகள் உள்ளன. அவை உள்ளமை வரையெல்லை (Local scope), செயற்கூறு வரையெல்லை (Function scope), கோப்பு வரையெல்லை (File scope) மற்றும் இனக்குழு வரையெல்லை (Class scope). 


முன்னுரை 


வரையெல்லை என்பது ஒரு மாறி செயல்படும் வரம்பெல்லை அல்லது அதன் வாழ்நாள் வரையாகும். மேலும் இதை விவரிக்கும் போது மாறிகளை நான்கு இடங்களில் அறிவிக்கலாம்.

ஒரு தொகுதிக்குள் அறிவிக்கும் போது அவற்றை உள்ளமை மாறிகள் என்றழைக்கப்படும். 

செயல்கூறின் உள்ளே அறிவித்தால் அவற்றை செயல்கூறு மாறிகள் என்றழைக்கப்படும்.

எல்லா செயற்கூறுக்கும் வெளியே அறிவித்தால், அவற்றை பொதுமையான / முழுதாளவிய (Global) மாறிகள் என்றழைக்கப்படும். 

இனக்குழுவில் உள்ளே அறிவித்தால் அவற்றை இனக்குழு மாறிகள் அல்லது தரவு உறுப்புகள் (data members) என்று அழைக்கப்படும். 


உள்ளமை வரையெல்லை :


• உள்ளமை மாறி, ஒரு தொகுதிக்குள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும். 

• ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும். 

• ஒர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது. 

• நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது, அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன. வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.


கோப்பு வரையெல்லை: 


• செயற்கூறினுள் அறிவிக்கப்பட்ட மாறியின் வரையெல்லை அந்த செயற்கூறின் தொகுதி மற்றும் துணை தொகுதி வரை உள்ளது.

• மாறியின் வாழ்நாள் செயற்கூறு தொகுதியின் வாழ்நாள்வரைக்கும் இருக்கும் முறையான அளபுருக்களின் வரையெல்லை செயற்கூறின் வரையெல்லை ஆகும். 

• கோப்பு வரையெல்லை மாறியை பொதுமை மாறிகள் என்றழைக்கப்படும்.


கோப்பு வரையெல்லை: 


• அனைத்துக் கட்டளைத் தொகுதிகளுக்கும் செயற்கூறுகளுக்கும் மேலாக (குறிப்பாக main ( ) செயற்கூறினுக்கு மேலே ) அறிவிக்கப்படும் மாறி, கோப்பு வரையெல்லை கொண்டதாகும். கோப்பு வரையெல்லை அந்த நிரலின் முழுமையும் விரிகிறது. அதன் வாழ்நாள் அந்த நிரல் செயல்பட்டு முடியும் வரை நீடிக்கும். 

• கோப்பு வரையெல்லை மாறியை முழுதாளவி மாறிகள் என்றழைக்கப்படும்.


இனக்குழு வரையெல்லை: 


• பயனர்கள் புதிய தரவினங்களை உருவாக்கவும், நடைமுறைப் படுத்தவும் ஒரு புதிய வழியை இனக்குழு திறக்கிறது. வேறுபட்ட இனத்தரவுகளை ஒன்றாகச் சேர்த்து வைக்க இனக்குழுக்கள் ஒரு புதிய வழிமுறையை வழங்குகின்றன. 

• தரவு உறுப்புகள் தரவு மாறிகள் என்று அழைக்கப்படும், இவை இனக்குழுவின் பண்புக்கூறுகளை உணர்த்தும்.

குறிப்பு: “Classes and Object” என்ற அதிகாரத்தில் இனக்குழு வரையெல்லை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி (Scope resolution operator) 


வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி ஒரு மாறியின் மறைந்து கிடக்கும் வரையெல்லையை வெளிக்கொணரும். வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி :: இதற்கு பயன்படுகிறது. 

• பொதுமையான மாறியும் உள்ளமை மாறியும் ஒரே பெயரை கொண்டிருப்பதால், பொதுமையான மாறியை இயக்க வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறி பயன்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு.

ஆய்வு அறிக்கை :

1. வர்க்க மூலம் (square root) , அடுக்கின் மதிப்பு (power values), tan, கன மூலம் (cube root) போன்றவற்றைக் கண்டறிய செயற்கூறுகளைப் பயன்படுத்தி நிரலை எழுதுக.

2. ஐந்து மாணவர்களின் பெயர்களை அவர்களின் தலைப்பு எழுத்தை இறுதியில் அமையுமாறு உள்ளீடாக செய்க, பெயரை ஆங்கில சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களாக வெளியீடாக செய்யவும். மேலும் ஒவ்வொரு பெயருக்கும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை வெளியீடாக பெற உரிய நிரலை எழுதுக.

3. காரணிப்படுத்துதல் (factorial), பகா எண் (prime number), ஆம்ஸ்டார்ங் எண்கள் (Armstrong numbers) போன்றவை கண்டறிய செயற்கூறுகளை பயன்படுத்தி நிரலை எழுதுக.

4. ஒருவரின் பெயர் மற்றும் பாலினம் உள்ளீடாக பெற்று திரு திருமதி என்ற சொல்லை பெயருடன் இணைத்து வெளியிடுவதற்கு உரிய நிரலை எழுதுக.


Tags : Introduction, Example C++ Program முன்னுரை, எடுத்துக்காட்டு C++ நிரல்.
11th Computer Science : Chapter 11 : Functions : Scope Rules of Variables Introduction, Example C++ Program in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : மாறிகளின் வரையெல்லை விதிமுறைகள் - முன்னுரை, எடுத்துக்காட்டு C++ நிரல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்