பணம் மற்றும் கடன் | பொருளியல் - நாணயங்கள் | 9th Social Science : Economics: Money and Credit

   Posted On :  11.09.2023 09:38 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

நாணயங்கள்

நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் எனலாம்.

நாணயங்கள்

நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு வேறு நாகரிகங்களுக்கு இடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவே பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம் எனலாம்.

சிந்து வெளி நாகரிகக் காலகட்டத்தில் காணப்பட்ட பொருள்கள் எகிப்து, ஈராக் (மெசபடோமியா) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன.


இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதிலும் காலப்போக்கில் சிக்கல்கள் உருவாகின. எடுத்துக்காட்டாக, தமக்குத் தேவையான பொருளுக்குப் பண்டமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவரிடம் நெல் உள்ளது. அவருக்கு மண்பாண்டம் தேவை. ஆனால் மண்பாண்டம் வைத்திருந்திருந்தவருக்கு நெல் தேவையில்லை. இவ்வாறு பலருக்கும் தமது தேவைகள் நிறைவேறவில்லை. பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பை கணக்கிடுவதில் பிரச்சனைகள் இருந்தன.

இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக்கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது. ஆகவே இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம். உலோகம் அப்போது அரிய பொருளாகவும் நீண்ட காலம் பராமரிக்கக்கூடியதாகவும் மதிப்பு மாறாததாகவும் இருந்தது. இதற்குக் காரணமாக இருக்கலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

தனது அரசாட்சியில் வெர்ஷா சூரி (1540-1548) குடிமக்களுக்கும், இராணுவத்திற்குமான ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார். அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 178கிராம் எடை கொண்ட வெள்ளி நாணயம் ருபியா என்றழைக்கப்பட்டது. அந்நாணயம் முகலாயர், மராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் காலம் வரை புழக்கத்தில் இருந்தது

தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் இவ்வாறு பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன. இவை புராதன பணம் என்றும் அழைக்கப்படுகின்றன இது போல தோல் மணிகள், ஓடுகள், புகையிலை உப்பு சோளம், ஏன் அடிமைகள் கூட பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டதாகப் பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர்.

பிற்காலச் சோழர்காலத்தில் வணிகக்குழுக்கள் தமக்கெனப் படைகள் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பிற்காலச் சோழர்கள் ஆட்சியின்போது தமிழக வணிகர்களின் ஏற்றுமதித் தேவையை ஈடுசெய்ய சிறு வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் கடன் உதவி அளித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் காணப்படுகின்றன.



இயற்கையான பணம்

படிப்படியாகத் தங்கம்வெள்ளி ஆகிய இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் செய்வதிலும் காலப்போக்கில் சிக்கல்கள் உருவாகின உலோகங்களாக ஏற்கப்பட்டனஇதையாட்டிஎடுத்துக்காட்டாக,தமக்குத் தேவையான இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு பொருளுக்குப் பண்டமாற்றம் செய்வதில் சிக்கல் இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் ஏற்பட்டது ஒருவரிடம் நெல் உள்ளதுஅவருக்கு பயன்படுத்தப்பட்டனஇவையே இயற்கையான மண்பாண்டம் தேவைஆனால் மண்பாண்டம் பணம் என்றும் அழைக்கப்பட்டன.

Tags : Money and Credit | Economics பணம் மற்றும் கடன் | பொருளியல்.
9th Social Science : Economics: Money and Credit : Coins Money and Credit | Economics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன் : நாணயங்கள் - பணம் மற்றும் கடன் | பொருளியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்