Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பணத்தின் செயல்பாடுகள்
   Posted On :  11.09.2023 09:51 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்

பணத்தின் செயல்பாடுகள்

பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுத்தலாகவும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தின் செயல்பாடுகள்

பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுத்தலாகவும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செயல்பாடு

அந்நிய செலாவணி

ஆசிரியர், வகுப்பறைக்கு இந்திய ரூபாய் மற்றும் மற்ற நாடுகளின் பணத்தின் மாதிரிகள் நகல்களைகொண்டு வரவேண்டும். மாணவர்களை இணையாகவே குழுக்களாகவோ பிரித்து, அந்நிய பண மாதிரிகளைக் கொடுக்க வேண்டும். குழுக்கள் இப்பணத்தின் மதிப்பை ரூபாயில் கணக்கிட்டு ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இச்செயல்பாடு முடிந்தவுடன் அடுத்த சுற்றில் அந்நிய பணத்தை குழுக்களுக்குள் மாற்றித் தரவும்.

பரிமாற்ற ஊடகம்

ஒரு நாட்டில் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவை பரிவர்த்தனைக்கு பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.

கணக்கு அலகு

ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட்ட அலகாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு புத்தகத்தின் விலை 50 என்றால் அப்புத்தகத்தின் விலை 50 பண அலகுகளுக்கு இணையானது என்று பொருள். ஒரு நாட்டில் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.

மதிப்பீட்டினைச் சேமித்தல்

பணத்தினைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்துக்கான வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.

உயர்சிந்தனை வினா

ஒரு நாட்டிற்கு அந்நிய செலாவணி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

9th Social Science : Economics: Money and Credit : Functions of Money in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன் : பணத்தின் செயல்பாடுகள் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 3 : பணம் மற்றும் கடன்