Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | தரவுகளைத் திரட்டுதல் (Collection of Data)

புள்ளியியல் | கணக்கு - தரவுகளைத் திரட்டுதல் (Collection of Data) | 9th Maths : UNIT 8 : Statistics

   Posted On :  23.09.2023 02:25 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்

தரவுகளைத் திரட்டுதல் (Collection of Data)

நாம் நேரடியாகத் திரட்டிய தரவுகள் முதல்நிலைத் தரவுகள் ஆகும். ஒருவரிடம் நேரடியாகக் கேட்டு (தொலைபேசி, மின்னஞ்சல், தனிப்பட்ட முறையில்) ஆய்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி முதல்நிலைத் தரவுகளைத் திரட்டுகிறோம்.

தரவுகளைத் திரட்டுதல் (Collection of Data)

நாம் நேரடியாகத் திரட்டிய தரவுகள் முதல்நிலைத் தரவுகள் ஆகும். ஒருவரிடம் நேரடியாகக் கேட்டு (தொலைபேசி, மின்னஞ்சல், தனிப்பட்ட முறையில்) ஆய்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி முதல்நிலைத் தரவுகளைத் திரட்டுகிறோம்.

மற்றவர்கள் திரட்டிய தரவுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் இரண்டாம் நிலைத் தரவுகள் ஆகும். எடுத்துக்காட்டாக, அரசு வெளியிட்ட தரவுகள், ஆய்வு முடிவுகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் போன்றவை ஆகும்.

 

முன்னேற்றத்தைச் சோதித்தல்:

முதல்நிலைத் தரவுகளை கண்டுபிடி

(i) நுகர்வோர் கருத்துக் கேட்பு

(ii) மருத்துவ ஆராய்ச்சி அறிக்கைகள்

(iii) பொருளாதார முன்னெச்செரிக்கைகள்

(iv) பள்ளித் தேர்வு முடிவுகள்

(v) தேர்தல் முடிவுகள்

(vi) சந்தை விவரங்கள்

(vii) விற்பனை முன்கணிப்பு

(viii) விலை நிர்ணய பட்டியல்

 

 

1. உண்மைகளை வரிசைப்படுத்துதல் (Getting the Facts Sorted Out)

தொடக்க நிலையில் நாம் திரட்டும் தரவுகள் செம்மையானதாக இருக்காது. அதனால் அவை செப்பனிடப்படாத தரவுகள் எனப்படும். நம்மால் பகுப்பாய்வு செய்ய இயலாத நிலையில் இந்த விவரங்கள் இருப்பதால் இவை அதிகம் பயன்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, ஒரு தேர்வில் 50 மாணவர்கள் பெற்ற கணித மதிப்பெண்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன:

61 60 44 49 31 60 79 62 39 51 67 65 43 54 51 42   

52 43 46 40 60 63 72 46 34 55 76 55 30 67 44 57

62 50 65 58 25 35 54 59 43 46 58 58 56 59 59 45

42 44

 

செயல்பாடு  − 1

தரவுகளைக் கொண்ட படங்கள், அட்டவணைகள், எண்கள் போன்றவற்றை உள்ளடக்கிய செருகேடு (Album) ஒன்றினை உருவாக்குக. இவை அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதனை விவரிக்கவும்.

 

இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து, ஐந்து அதிகமான மதிப்பெண்களை நீங்கள் கண்டுபிடிப்பது எளிமையான பணியா? அதை இந்தத் தகவலில் தேட வேண்டும். மேலும் மூன்றாவது அதிகமான மதிப்பெண் எது எனக் காண்பது இன்னும் கடினமானது. ஒருவேளை 56 −க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர் என நீங்கள் அறிய விரும்பினால், இன்னும் சற்றுக் கூடுதலாக நேரம் எடுக்கும்.

கொடுக்கப்பட்ட மதிப்பெண்களை முறைப்படுத்தி எழுதினால் நம் வேலை எளிமையாக இருக்கும்.

சிறுசிறு கடினங்களுக்குப் பிறகு அதிகமான மதிப்பெண் 79 எனவும், குறைந்த மதிப்பெண் 25 எனவும், நாம் அறிய முடிகிறது. இந்த மதிப்பெண்களை நமக்கு ஏற்றவாறு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு மதிப்பெண்ணையும் குறிப்பிட்ட அந்தப் பிரிவில் எழுதலாம். அவற்றை எப்படி எழுதலாம் என்பதற்கான மாதிரியை உற்று நோக்குக.


மேற்கூறிய வினாக்களுக்கு அட்டவணையிலிருந்து எளிதாக விடையளிக்க இயலுமா?

"56- விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் எத்தனை பேர்?” என்ற வினாவிற்கு விடை காண, அனைத்து மதிப்பெண்களையும் ஆராயத் தேவையில்லை. உங்களுக்குத் தேவை எத்தனை?" என்பதற்கான பதில் மட்டுமே. இவ்வாறான, வினாக்களுக்குப் பதிலளிக்க, இந்த அட்டவணையில், ஒவ்வொரு பிரிவிலும் இருப்போர் எத்தனை பேர் எனச் சுருக்கமாகக் குறிப்பிட்டாலே போதுமானது. மேற்கண்ட அட்டவணையை மேலும் பயனுள்ளதாக்க அடுத்துள்ளவாறு எளிமையாக வரிசைப்படுத்தலாம்.


இந்த அட்டவணையானது ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை உறுப்புகள் உள்ளன என்பதை நமக்குத் தருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரே உள்ள எண், அந்தப் பிரிவுக்கு உட்பட்ட உறுப்புகள் எத்தனை இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிக்கிறது. இந்த எண் அந்தப் பிரிவின் நிகழ்வெண் எனப்படுகிறது. இந்த அட்டவணை நிகழ்வெண் அட்டவணை என அழைக்கப்படுகிறது.

நிகழ்வெண்ணைக் கணக்கிட நாம் நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்துகிறோம். (இந்தக் கலத்தில், குறிப்பிட்ட பிரிவுக்கு எதிராக நேரடியாக மதிப்பெண்ணை எழுதாமல், அதற்குப் பதிலாக ஒரு நேர்க்கோட்டுக் குறி இடுகிறோம்.) எடுத்துக்காட்டாக 31-35 என்ற பிரிவுக்கு எதிரில் நேரடியாக மதிப்பெண்களான 31,34,35 என எழுதாமல் |||| எனக் குறியிடுகிறோம். அப்படியானால் 56-60 என்ற பிரிவுக்கு ||||||||||| என்று எழுத வேண்டுமே! இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வோர் ஐந்தாவது நேர்க்கோட்டுக் குறியையும், அதற்கு முன்னர் குறிப்பிட்ட நான்கு நேர்க்கோட்டுக் குறிகளுக்குக் குறுக்காக  என்றவாறு குறிப்பிடுகிறோம். எடுத்துக்காட்டாக, 11 என்பதைக் காட்ட நாம்  என எழுதுகிறோம். இவ்வாறு எழுதினால் மேலே கண்ட விளக்கப்படத்திற்கான நிகழ்வெண் அட்டவணை கீழ்க்கண்டவாறு அமையும்.


குறிப்பு

ஏதாவது ஒரு பிரிவினை எடுத்துக்கொள்க. 56 −60 என எடுத்துக்கொண்டால், 56 என்பது பிரிவின் கீழ் எல்லை எனவும், 60 என்பது பிரிவின் மேல் எல்லை எனவும் கூறப்படும்.

முன்னேற்றத்தைச் சோதித்தல்  

நிகழ்வெண் பட்டியல் தயாரிக்க.

23 44 12 11 45 55 79 20

52 37 77 97 82 56 28 71

62 58 69 24 12 99 55 78

21 39 80 65 54 44 59 65

17 28 65 35 55 68 84 97

80 46 30 49 50 61 59 33

11 57

Tags : Statistics | Maths புள்ளியியல் | கணக்கு.
9th Maths : UNIT 8 : Statistics : Collection of Data Statistics | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : தரவுகளைத் திரட்டுதல் (Collection of Data) - புள்ளியியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்