Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 8.4: பலவுள் தெரிவு வினாக்கள்

அட்டவணை, எடுத்துக்காட்டு, தீர்வுகள் | அளவியல் | கணக்கு - பயிற்சி 8.4: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 8 : Statistics

   Posted On :  23.09.2023 09:45 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்

பயிற்சி 8.4: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 8.4: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 8.4

 

பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. மையப்புள்ளி m , தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை 'b' எனில், அதன் கீழ் எல்லை .

 (1) 2m  − b

(2) 2m+b

(3) mb

(4) m −2b.

விடை: (2) 2m+b

 

2. ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு

(1) 101

(2) 100

(3) 99

(4) 98.

விடை: (3) 99

 

3. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.

(1) நிகழ்வெண்

(2) வீச்சு

(3) முகடு

(4) இடைநிலை அளவு

விடை: (3) முகடு

 

4. பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?

(1) 2,2,2,4

(2) 1,3,3,3,5

(3) 1,1,2,5,6

(4) 1,1,2,1,5.

விடை: (2) 1,3,3,3,5

 

5. சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை

(1) 0

(2) n −1

(3) n

(4) n+1.

விடை: (1) 0

 

6. a,b,c,d மற்றும் e இன் சராசரி 28. a, c மற்றும் e இன் சராசரி 24, எனில் b மற்றும் d இன் சராசரி

(1) 24

(2) 36

(3) 26

(4) 34

விடை: (4) 34

 

7. x, x+2, x+4, x+6, x+8, என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி

(1) 9

(2)11

(3) 13

(4) 15

விடை: (1) 9

 

8. 5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு

(1) 9

(2) 13

(3) 17

(4) 21

விடை: (2) 13

 

9. முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி

(1) 26

(2) 46

(3) 48

(4) 52

விடை: (2) 46

 

10. ஓர் எண் தொகுப்பின் சராசரி  . எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் z என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி

(1) + z

(2)  − z

(3) z 

(4) 

விடை: (3)

 

செயல்திட்டம்

1. 20 வெவ்வேறு தரையில் வாழும் விலங்குகளின் அதிகபட்ச வேகத்தின் நிகழ்வெண் பட்டியலைத் தயாரிக்க. சராசரி, இடைநிலை அளவு மற்றும் முகடு காண்க. விடைகளை ஒப்பிடுக.

2. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் விவரம் பற்றிய பதிவேட்டிலிருந்து

(i) சராசரி வயதினைக் காண்க. (பிரிவு இடைவெளியைப் பயன்படுத்தி)

(ii) சராசரி உயரத்தினைக் காண்க. (பிரிவு இடைவெளியைப் பயன்படுத்தி)

Tags : Numerical Problems with Answers, Solution | Statistics | Maths அட்டவணை, எடுத்துக்காட்டு, தீர்வுகள் | அளவியல் | கணக்கு.
9th Maths : UNIT 8 : Statistics : Exercise 8.4: Multiple choice questions Numerical Problems with Answers, Solution | Statistics | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல் : பயிற்சி 8.4: பலவுள் தெரிவு வினாக்கள் - அட்டவணை, எடுத்துக்காட்டு, தீர்வுகள் | அளவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 8 : புள்ளியியல்