எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | கணக்கு - பயிற்சி 8.2: இடைநிலை அளவு − வகைப்படுத்தப்படாத நிகழ்வெண் பரவல் (Median −Ungrouped Frequency Distribution) | 9th Maths : UNIT 8 : Statistics
பயிற்சி 8.2
1. கீழ்க்காணும்
தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க 47, 53, 62, 71, 83,
21, 43, 47, 41.
2. கீழ்க்காணும்
தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க 36, 44, 86, 31, 37,
44, 86, 35, 60, 51
3. ஏறு
வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18,
x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் x
இன் மதிப்பைக் காண்க.
4. ஓர்
ஆராய்ச்சியாளர் 13 எலிகளின் உணவு தேடும் பழக்கத்தை மைதா மாவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவை உணவு தேட எடுத்துக்கொள்ளும் நேரத்தை
31,33,63,33,28,29,33,27,27,34,35,28,32 எனப் பட்டியலிட்டுள்ளார். எலிகள் உணவு தேட எடுத்துக்கொள்ளும் நேரத்தின் இடைநிலை அளவு காண்க.
5. ஒரு
வகுப்பில் தொகுத்தறி மதிப்பீட்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு இடைநிலை அளவு காண்க.
6. ஐந்து மிகைமுழுக்களின் சராசரியானது அதன் இடைநிலை அளவைப்போல் இருமடங்கு. அதில் நான்கு முழுக்கள் 3, 4, 6, 9 மற்றும் அதன் இடைநிலை அளவு 6 எனில் ஐந்தாவது முழுவைக் காண்க.