Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | அணிக்கோவை: பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices)

வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் - அணிக்கோவை: பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices) | 11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants

   Posted On :  30.01.2024 10:34 am

11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)

அணிக்கோவை: பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices)

ஒருசதுர அணி A−ன் அணிக்கோவை |A|=0

பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices)

வரையறை 7.21

ஒருசதுர அணி Aன் அணிக்கோவை |A| = 0 எனில், அது பூஜ்ஜியக்கோவை அணி எனப்படும். ஒரு சதுர அணி Aன் அணிக்கோவை |A| ≠ 0 எனில், அது பூஜ்ஜியமற்ற கோவை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டாக, என்க.

| A |= 3(1−1) − 8(−4 + 4) +1(−4 + 4) = 0.

எனவே A என்பது ஒரு பூஜ்ஜியக் கோவை அணியாகும்.

என்க. |B| = 2(0 − 20) − (−3) (− 42 − 4) + 5(30 − 0) = −28 ≠ 0.

எனவே, Bஎன்பது ஒரு பூஜ்ஜியமற்ற கோவை அணியாகும்.

குறிப்பு 7.14

A, Bஎன்பன ஒரே வரிசை உள்ள பூஜ்ஜியமற்ற அணிகள் எனில், |AB| = |A| |B| = |BA| என்பதால் ABமற்றும் BA என்பனவும் பூஜ்ஜியமற்ற அணிகளாகும்.




பாடத் தொகுப்பு

இப்பாடப்பகுதியில் நாம் கற்றுத் தெளிந்தவை

மெய்யெண்கள் அல்லது ன் மீதான மெய்மதிப்புச் சார்பு அல்லது கலப்பெண்களை செவ்வக வடிவில் வரிசைப்படுத்துதல் அணியாகும்.

ஓர் அணி m நிரைகள் மற்றும் n நிரல்கள் பெற்றிருந்தால், அதன் வரிசை m × n ஆகும்.

A = [aij]m×n என்ற அணியில்

m = n எனில், அவ்வணி சதுர அணியாகும்.

m = 1 எனில், அவ்வணி நிரை அணியாகும்.

n = 1 எனில், அவ்வணி நிரல் அணியாகும்.

aij = 0 i,j எனில் அவ்வணி பூஜ்ஜிய அணியாகும்.

m = n மற்றும் aij = 0 ij எனில் அவ்வணி மூலைவிட்ட அணியாகும்.

m = n, aij = 0 ij மற்றும் aii = λ, i அவ்வணி திசையிலி அணியாகும்

m = n, aij = 0 ij மற்றும் aii = 1, i எனில் அவ்வணி அலகு அணி அல்லது சமனி அணியாகும்.

m = n மற்றும் aij = 0 i > j எனில் மேல் முக்கோண வடிவ அணியாகும்

m = n மற்றும் aij = 0 i < j எனில் கீழ்முக்கோண வடிவ அணியாகும்.

A=[aij] m×n மற்றும் B= [bij] m×n என்ற அணிகளுக்கு aij = bij ,   i மற்றும் j எனில் அவை சம அணிகள் எனப்படும்.

A = [aij] m×n மற்றும் B= [bij] m×n எனில் A + B= [cij] m×n , இங்கு cij = aij + bij .

A = [aij] m×n மற்றும் λ ஒரு திசையிலி எனில் λ A=[ λ aij] m×n

• − A = (− 1)A

A + B= B+ A

AB= A + (− 1)B

•  (A + B) + C = A + (B+ C), இங்கு A, B, C என்பன ஒரே வரிசை உடையவை.

(i) A(BC) = (AB)C (ii) A(B+ C) = AB+ AC (iii) (A + B)C = AC + BC

ஓர் அணி Aயின் நிரை மற்றும் நிரல்களை இடமாற்றம் செய்வதன் மூலம் பெறப்படும் அணி Aன் நிரை நிரல் மாற்று அணி AT எனப்படும்.

(i) (AT) T = A, (ii) (kA)T = kAT , (iii) (A + B)T = AT + BT , (iv) (AB)T = BT AT

A என்ற ஒரு சதுர அணி

(i) AT = A எனில், அது சமச்சீர் அணி எனப்படும்

(ii) AT = −A எனில், அது எதிர் சமச்சீர் அணி எனப்படும்.

ஒரு சதுர அணியை சமச்சீர் மற்றும் எதிர் சமச்சீர் அணிகளின் கூடுதலாக எழுதலாம்.

ஓர் எதிர் சமச்சீர் அணியின் மூலைவிட்ட உறுப்புகள் பூஜ்ஜியமாகும்.

A என்பது மெய்யெண் உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணி எனில் A + AT என்பது சமச்சீர் அணியாகும் மற்றும் AAT என்பது எதிர் சமச்சீர் அணியாகும். மேலும் A = ½ ( A + AT ) + ( AAT).

சதுர அணிகளுக்கு மட்டுமே அணிக்கோவைகளை வரையறுக்க முடியும்.

• | AT | = | A| .

A, Bஎன்பன சம வரிசை உடைய இரு சதுர அணிகள் எனில், |AB| = |A| |B

ஒரு சதுர அணி A = [aij]m×n எனில் | kA| = kn | A| இங்கு k என்பது ஒரு திசையிலி

ஒரு சதுர அணி Aன் அணிக்கோவையின் மதிப்பானது அதன் ஒரு நிரையின் (அல்லது நிரலின்) உறுப்புகள் மற்றும் அவற்றின் ஒத்த இணைக்காரணிகள் ஆகியவற்றின் பெருக்கலின் கூடுதலுக்குச் சமம். எடுத்துக்காட்டாக, |A| = a11A11 + a12A12  + a13A13

ஒரு சதுர அணி Aன் அணி அணிக்கோவையின் ஏதேனும் ஒரு நிரை அல்லது நிரலின் உறுப்புகள் மற்றும் மற்றொரு நிரை அல்லது நிரலின் உறுப்புகளின் ஒத்த இணைக்காரணிகள் ஆகியவற்றின் பெருக்கற் பலனின் கூடுதலானது பூஜ்ஜியமாகும். எடுத்துக்காட்டாக, = a11A13 + a12A23  + a13A33 = 0

ஓர் அணிக்கோவையின் அனைத்து நிரைகளையும் நிரல்களாக இடமாற்றம் செய்தால், அணிக்கோவையின் மதிப்பு மாறாது.

ஓர் அணிக்கோவையின் இரு நிரைகள் அல்லது நிரல்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், அணிக்கோவையின் குறி மாறும்.

ஓர் அணிக்கோவையின் ஒரு நிரை அல்லது நிரலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பூஜ்ஜியம் எனில், அதன் மதிப்பு பூஜ்ஜியமாகும்.

ஓர் அணிக்கோவையின் இரு நிரைகள் அல்லது நிரல்கள் சர்வசமம் எனில், அதன் மதிப்பு பூஜ்ஜியமாகும்.

ஓர் அணிக்கோவையில் ஏதேனும் ஒரு நிரை அல்லது நிரலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு திசையிலி kஆல் பெருக்கப்பட்டிருப்பின் அந்த அணிக்கோவையின் மதிப்பு kஆல் பெருக்கப்பட்டதாக அமையும்.

ஓர் அணிக்கோவையில் உள்ள ஒரு நிரை அல்லது நிரலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் r உறுப்புகளின் கூடுதலாக இருக்குமெனில், அவ்வணிக்கோவையை r அணிக்கோவைகளின் கூட்டல் பலனாக எழுதலாம்.

ஓர் அணிக்கோவை Ri + αRj + βRk (j, k ≠ i) என்ற நிரை (Ri) உருமாற்றத்திற்கு அல்லது Ci + αCj + βCk (j,k ≠ i) என்ற நிரல் (Ci) உருமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டால், அணிக்கோவையின் மதிப்பு மாறாது. இங்கு α, β என்பன ஏதேனும் இரு மாறிலிகள்.

காரணித் தேற்றம்: ஓர் அணி Aன் ஒவ்வொரு உறுப்பும் xல் அமைந்த பல்லுறுப்புக் கோவையாக இருந்து, x = a எனப் பிரதியிட | A |−ன் மதிப்பு பூஜ்ஜியம் எனில், x = a என்பது | A |−ன் ஒரு காரணியாகும்.

• (x1, y1), (x2, y2) மற்றும் (x3, y3) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு ன் எண்ணளவாகும்.

முக்கோணத்தின் பரப்பு பூஜ்ஜியம் எனில், இம்மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டில் அமையும்.

ஒரு சதுர அணி Aக்கு |A| = 0 எனில், அது பூஜ்ஜியக்கோவை அணி எனப்படும். | A | ≠ 0 எனில், அது பூஜ்ஜியமற்ற கோவை அணி எனப்படும்.




இணையச் செயல்பாடு 7 (a)

அணிகளும் அணிக்கோவைகளும்


படி − 1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebraவின் "Matrices and Determinants" பக்கத்திற்குச் செல்க. உங்கள் பாடம் சார்ந்த பல பணித்தாள்கள் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி −2

"Matrices−Algebraic operations" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள கணக்குகளைச் செய்து, அதெற்கென கொடுத்திருக்கும் கட்டங்களில் விடைகளைச் சரி பார்க்கவும். மேலும் புது வினாக்களுக்கு "New Problem" என்பதைத் தேர்வு செய்யவும்.


உரலி :

https://ggbm.at/cpknpvvh

*படங்கள் அடையாளத்திற்கு மட்டும்.



இணையச் செயல்பாடு 7 (b)

அணிகளும் அணிக்கோவைகளும்


படி − 1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebraவின் "Matrices and Determinants" பக்கத்திற்குச் செல்க. உங்கள் பாடம் சார்ந்த பல பணித்தாள்கள் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி −2

"Determinants" என்பதைத் தேர்வு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அணிக்கோவைகளின் மதிப்பினை நிர்ணயிக்கவும், மேலும் கொடுத்திருக்கும் கட்டங்களைத் தேர்வு செய்து அதன் படிகளைச்சரி பார்க்கவும்.

புது வினாக்களைப் பெறுவதற்கு “New Problem” என்பதைத் தேர்வு செய்யவும்.


உரலி :

https://ggbm.at/cpknpvvh

*படங்கள் அடையாளத்திற்கு மட்டும்.

Tags : Definition, Solved Example Problems வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள்.
11th Mathematics : UNIT 7 : Matrices and Determinants : Determinants: Singular and non-singular Matrices Definition, Solved Example Problems in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants) : அணிக்கோவை: பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள் (Singular and non−singular matrices) - வரையறை, எடுத்துக்காட்டு கணக்குகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 7 : அணிகளும் அணிக்கோவைகளும் (Matrices and Determinants)