Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | தன்மதிப்பீடு: வாயு நிலைமை

கேள்விகளுக்கான பதில்கள் - தன்மதிப்பீடு: வாயு நிலைமை | 11th Chemistry : UNIT 6 : Gaseous State

   Posted On :  25.12.2023 10:40 am

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை

தன்மதிப்பீடு: வாயு நிலைமை

11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : தன்மதிப்பீடு

தங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்

1. குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் ஃபிரியான்-12 சேர்மமானது, ஓசோன்படலம் சிதைவடைய காரணமாக அமைகிறது. தற்போது அதற்கு மாற்றாக சூழலுக்கு ஏற்ற சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 0.3 atm அழுத்தம் மற்றும் 1.5 dm3 கனஅளவு உடைய ஃபிரியான் வாயு மாதிரியினைக் கருதுக. மாறாத வெப்பநிலையில், அழுத்தமானது 1.2 atmக்கு மாற்றப்படும் போது, அதிகரிக்கும் அல்லது குறையும் கனஅளவைக் கணக்கிடுக.

தீர்வு:

ப்ரீயானின் கனஅளவு (V1) = 1.5dm3

அழுத்தம் (P1) = 0.3 atm

T ஆனது மாறிலி P2 = 1.2 atm

V2 = ?


கனஅளவு 1.5dm3 லிருந்து 0.375 dm3 ஆகக் குறைகிறது.


2. ஒரு மோட்டார் வாகன இயந்திரத்தினுள் உள்ள உருளையில் (Cylinder) நிரம்பியுள்ள காற்றின் அழுத்தம் 1.05 atm ஆக உள்ள போது கனஅளவு 0.375 dm3, அதே வெப்பநிலையில் 0.125 dm3 க்கு அழுத்தப்படும்போது, அழுத்தப்பட்ட காற்றின் அழுத்தம் என்ன?

தீர்வு:

V1 = 0.375dm3

V2 = 0.125 dm3

P1 =1.05atm

P2 = ?

“T”மாறிலி

P1V1 = P2V


P2 = 3.15atm


தன்மதிப்பீடு

3. ஒரு வாயு மாதிரியானது, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் 3.8 dm3 கனஅளவினை பெற்றுள்ளது. இம்மாதிரியானது 0°Cல் உள்ள பனிகட்டி நீரில் அழுத்தப்படும்போது, அதன் கனஅளவு 2.27 dm3 ஆக குறைகிறது. அதன் ஆரம்ப வெப்பநிலை எவ்வளவு?

தீர்வு:


தன்மதிப்பீடு

4) ஒரு விளையாட்டு வீரரின் ஆழமான உட்சுவாசித்தலின் போது அவருடைய நுரையீரல் கனஅளவு 7.05 dm3 என மனித உடலியக்க ஆய்வு மூலம் (Kinesiology) கண்டறியப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கனஅளவில் நுரையீரலானது 0.312 மோல்கள் காற்று மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. வெளிச்சுவாசத்தின் போது நுரையீரலின் கனஅளவு 2.35 dm3 ஆக குறைகிறது. அவ்விளையாட்டு வீரர் வெளிசுவாசத்தின் போது வெளியேற்றும் காற்று மூலக்கூறுகளின் மோல்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக. (அழுத்தம் மற்றும் வெப்பநிலை மாறிலியாக இருப்பதாகக் கருதவும்)

தீர்வு:

V1 = 7.05 dm3 

V2 = 2.35dm3

ղ1 = 0.312mol

ղ2 = ?


n2 = 0.104mol

வெளியிடப்படும் மோல்களின் எண்ணிக்கை

= 0.312  −  0.104 = 0.208 மோல்கள்


தன்மதிப்பீடு

5) 8°C மற்றும் 6.4 atm வெப்ப அழுத்த நிலை காணப்படும் ஒரு ஏரியின் அடிப்பரப்பிலிருந்து ஒரு சிறிய நீர்க்குமிழி மேலெழும்பி நீரின் மேற்பரப்பிற்கு செல்கிறது, நீரின் மேற்பரப்பில் வெப்பநிலை 25°C மற்றும் அழுத்தம் 1 atm. நீர்க்குமிழியின் ஆரம்ப கனஅளவு 2.1 mL எனில் அதன் இறுதி கனஅளவை (mL ல்) கணக்கிடுக,

தீர்வு:

T1 = 8°C = 8 + 273 = 281K

T2 = 25°C = 25 + 273 = 298K.

P1 = 6.4 atm

P2 =1atm

V1 = 2.1mol 

V2 = ?


தன்மதிப்பீடு

6() நீர் மூழ்குபவர்கள், நீரில் மூழ்குவதற்கு பயன்படுத்தும் வாயுகலன்களில் He மற்றும் O2 வாயுக்கள் அடங்கிய கலவை பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நீர் மூழ்கும் நிகழ்வில், 1 atm அழுத்த நிலையில் 12 dm3 O2 மற்றும் 1 atm அழுத்த நிலையில் 46 dm3 கனஅளவுள்ள He அடங்கிய வாயுக்கலவை 5dm3 கலனினுள் உள்ளே அழுத்தப்படுகிறது. 298K வெப்பநிலையில், ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தத்தினைக் கணக்கிடுக.

தீர்வு:


() ஒரு குறிப்பிட்ட அளவு KClO3 (பொட்டாசியம் குளோரேட்) ஆய்வுக் குழாயில் வெப்பப்படுத்தப்பட்டு பின்வரும் வினையின் மூலம் O2 பெறப்படுகிறது.

2 KClO3 2 KCl + 3O2

295 K வெப்ப நிலையில் நீரினை கீழ்முக இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் வாயுவானது சேகரிக்கப்படுகிறது. வாயுக் கலவையின் மொத்த அழுத்தம் 772 mm Hg 300K ல் நீரின் ஆவி அழுத்தம் 26.7 mm Hg. ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் என்ன?

தீர்வு:


தன்மதிப்பீடு

எளிதில் தீப்பற்றும், ஒரு குறிப்பிட்ட கனஅளவுடைய வாயு நிலையில் உள்ள ஹைட்ரோகார்பன், ஒரு சிறு துளையின் வழியே 1.5 நிமிடங்களில் (minutes) விரவுகின்றது. இதே வெப்ப அழுத்த நிலைகளில், சம கனஅளவு உடைய புரோமின் ஆவியானது அதே துளையின் வழியே விரவுவதற்கு 4.73 நிமிடங்கள் (minutes) எடுத்துக் கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறையினை கண்டறிக மேலும் அந்த ஹைட்ரோ கார்பன் என்னவாக இருக்கலாம் எனக் கூறு. (புரோமினின் மோலார் நிறை 159.8 gmol-1 என கொடுக்கப்பட்டுள்ளது]

t1 = 1.5 minutes (வாயு) ஹைட்ரோகார்பன்

t2 = 4.73 minutes (வாயு) புரோமின்


n(12) + (2n + 2) = 116

12n + 2n + 2 = 16

14n = 16 − 2

14n = 14

n = 1

ஹைட்ரோகார்பனின் பொது வாய்ப்பாடு CnH2n+2

ஃஹைட்ரோகார்பனானது, C1H2(1)+2 = CH4



தன்மதிப்பீடு

8. H2O, NH3, மற்றும் CO2ன் நிலைமாறு வெப்பநிலைகள் முறையே 647.4K, 405.5K மற்றும் 304.2K ஆகும். நாம், 700K வெப்ப நிலையிலிருந்து குளிர்வித்தலை நிகழ்த்தும் போது, முதலில் திரவமாக மாறுவது மற்றும் இறுதியாக திரவமாக மாறுவது எது என கண்டறிக.

தீர்வு

எந்த ஒரு வெப்பநிலைக்கு மேலே அதிக அழுத்தம் அளிக்கப்படினும் ஒரு வாயுவினை திரவமாக்க இயலாதோ அவ்வெப்பநிலை நிலைமாறு வெப்பநிலை எனப்படும்.

• 700K வெப்ப நிலையிலிருந்து குளிர்விக்கும் போது நீர் முதலில் திரவமாகிறது. அதனைத் தொடர்ந்து அம்மோனியாவும் இறுதியாக கார்பன் டை ஆக்ஸைடும் திரவமாகின்றன.



Tags : Solved Example Problems with Answer கேள்விகளுக்கான பதில்கள்.
11th Chemistry : UNIT 6 : Gaseous State : Evaluate Yourself: Gaseous State (Chemistry) Solved Example Problems with Answer in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை : தன்மதிப்பீடு: வாயு நிலைமை - கேள்விகளுக்கான பதில்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 6 : வாயு நிலைமை