அவகேட்ரோ கருதுகோள்
சமவெப்பஅழுத்த நிலைகளில், சமகன அளவுள்ள அனைத்து வாயுக்களும், சம எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகளை பெற்றிருக்கும் என அவகேட்ரோ கருதினார். அவகேட்ரோ கருதுகோளை கணிதவியல் சமன்பாடாக பின்வருமாறு குறிப்பிடலாம்.
V α n,
V1 / n1 = V2 / n2 = மாறிலி ---------- (6.10)
இங்கு V1, n1 என்பன வாயுவின் கனஅளவு மற்றும் மோல்களின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுகின்றன. மற்றும் V2, n2 என்பன அதே வெப்ப அழுத்த நிலைகளில் வாயுவின் பிறிதொரு கனஅளவு மற்றும் மோல்களின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுகின்றன.
தன்மதிப்பீடு
4) ஒரு விளையாட்டு வீரரின் ஆழமான உட்சுவாசித்தலின் போது அவருடைய நுரையீரல் கனஅளவு 7.05 dm3 என மனித உடலியக்க ஆய்வு மூலம் (Kinesiology) கண்டறியப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கனஅளவில் நுரையீரலானது 0.312 மோல்கள் காற்று மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. வெளிச்சுவாசத்தின் போது நுரையீரலின் கனஅளவு 2.35 dm3 ஆக குறைகிறது. அவ்விளையாட்டு வீரர் வெளிசுவாசத்தின் போது வெளியேற்றும் காற்று மூலக்கூறுகளின் மோல்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக. (அழுத்தம் மற்றும் வெப்பநிலை மாறிலியாக இருப்பதாகக் கருதவும்)
தீர்வு:
V1 = 7.05 dm3
V2 = 2.35dm3
ղ1 = 0.312mol
ղ2 = ?
n2 = 0.104mol
வெளியிடப்படும் மோல்களின் எண்ணிக்கை
= 0.312 − 0.104 = 0.208 மோல்கள்