Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | தன்மதிப்பீடு: வெப்ப இயக்கவியல்

கணக்குகளுக்கான தீர்வுகள் - தன்மதிப்பீடு: வெப்ப இயக்கவியல் | 11th Chemistry : UNIT 7 : Thermodynamics

   Posted On :  26.12.2023 10:59 pm

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்

தன்மதிப்பீடு: வெப்ப இயக்கவியல்

11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : தன்மதிப்பீடு

தன்மதிப்பீடு

1) CO2 (g) + H2 (g) CO (g) + H2O (g) 

என்ற வினைக்கு திட்ட வினை என்தால்பி மதிப்பினைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ளவை: CO2 (g), CO (g) மற்றும் H2O (g) ஆகியவற்றின் ΔHf0 மதிப்புகள் முறையே - 393.5, - 111.31 மற்றும் - 242 kJ mol-1,

தீர்வு

கொடுக்கப்பட்டவை

∆H0f CO2 = −393.5kJ mol−1

∆H0f CO = −111.31kJmol−1

∆H0r (H2O) = −242kJmol−1

CO2(g) + H2(g) → CO(g) + H2O(g) ∆H0r = ?

∆H0r = ∑ (∆Hf) வினைவிளைப்பொருள் − ∑ (∆Hf) வினைபடுபொருள்

∆H0r = [∆Hf (CO) + ∆Hf (H2O)] − [∆Hf (CO2) + ∆Hf (H2)]

∆H0r = [−111.31 +  (−242)] − [−393.5 + (0)]

∆H0r = [−353.31] + 393.5

∆H0r = 40.19

∆H0r = +40.19kJ mol−1


தன்மதிப்பீடு

2) 180 கிராம் நீரின் வெப்பநிலையை 25°C லிருந்து 100°C க்கு மாற்றத் தேவைப்படும் வெப்பத்தை கணக்கிடுக. நீரின் மோலார் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 75.3 J mol-1 K-1.

தீர்வு:

நீரின் மோல்களின் எண்ணிக்கை

n = 180g /18gmol−1 = 10 mol

நீரின் மோலார் வெப்ப ஏற்புத்திறன் Cp = 75.3JK−1mol−1

T2 =100°C = 373K

T1 = 25°C = 298K

∆H = ?

∆H = nCp(T2 −T1)

∆H = 10mol × 75.3Jmol−1 K−1 × (373 − 298)K

∆H = 56475J

∆H = 56.475kJ


தன்மதிப்பீடு

3) மாறாத கனஅளவில் பென்சீனின் எரிதல் வினைக்கான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாறாத அழுத்தத்தில் வினையின் எரிதல் வெப்பத்தை கணக்கிடுக்

C6H6 (l) + 7 (1/2) O2 (g) 6 CO2 (g) + 3 H2O (l)

25°C ல் ΔU = - 3268.12 kJ

தீர்வு

பென்சீன் எரிதல் வினை

C6H6(l) + 7½O2 (g) → 6CO2 (g) + 3H2 O (l)

நாம் அறிந்த படி,

∆H = ∆U + RT ∆ng

∆ng = (∑ np − ∑ nr)g

= 6 − 7 ½   

∆ng = − 3/2

∆H = −3268.12 = 8.314 × 10–3 × 298 × (− 3/2)

∆H = −3268.12 − 3.716

∆H = 3271.83kJ


தன்மதிப்பீடு

4) 1 மோல் மெக்னீசியம், 1 மோல் திரவ புரோமினிலிருந்து, 1 மோல் மெக்னீசியம் புரோமைடு தயாரிக்கும் போது 524kJ அளவு ஆற்றல் வெளிப்படுகிறது.

மெக்னீசியத்தின் பதங்கமாதல் வெப்பம் 148 kJ mol-1, திரவ புரோமினின் ஆவியாதல் வெப்பம் 31 kJ mol-1, புரோமின் வாயுவை, அணுக்களாக்க தேவைப்படும் பிரிகையடைதல் வெப்பம் 193 kJ mol-1, மெக்னீஷியத்தின் அயனியாக்கும் ஆற்றல்கள் முறையே IE1 = 737.5 kJ mol-1 மற்றும் IE2 = 1450.5 kJ mol-1, புரோமினின் எலக்ட்ரான் நாட்டம் - 324.5 kJ mol-1 எனில், மெக்னீஷியம் புரோமைடு படிகத்தின் படிகக்கூடு ஆற்றலைக் கணக்கிடு.

தீர்வு:


ΔΗf = ΔΗ1 + ΔΗ2 + ΔΗ3 + ΔΗ4 + 2AH5 + u

−524 = 148 + 2187 + 31 + 193 + (2 × −331) + u 

−524 = 1897 + u

u = −524 − 1897

u = −2421kJ mol−1


தன்மதிப்பீடு

5) 127°C மற்றும் 47°C ஆகிய வெப்பநிலைகளுக்கிடையே செயல்படும் ஒரு இயந்திரம் உயர்வெப்ப மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை உறிஞ்சுகிறது. உராய்வின் மூலம் எந்த ஆற்றல் இழப்பும் இல்லாத நிலையில் இயந்திரத்தின் அதிகபட்ச சதவீத இயக்கத்திறனைக் கணக்கிடுக.

தீர்வு:

Th =127°C =127 + 273 = 400K 

TC = 47 °C = 47 + 273 = 320K 

இயக்குத்திறன் சதவீதம், ղ = ?

ղ = [Th − TC / Th] ×100

ղ  = [400 – 320/400] ×100

ղ  = [80/400] ×100 

ղ = 20%



தன்மதிப்பீடு

6) யூரியா நீராற் பகுப்படைந்து அம்மோனியா மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடை தருகிறது. இவ்வினையின் திட்ட என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. யூரியா, H2O, CO2, NH3 ஆகியவற்றின் திட்ட என்ட்ரோபி மதிப்புகள் முறையே 173.8, 70, 213.5 மற்றும் 192.5 J mol-1 K-1

தீர்வு:

S0 (யூரியா) = 173.8 J mol−1K−1 

S0 (H2O) = 70 J mol−1K−1

S0 (CO2) = 213.5 J mol−1K−1

S0 (NH3) = 192.5 J mol−1K−1

NH2 – CO − NH2 + H2O → 2NH3 + CO2 

∆S0r = ∑ (S0) வினைவிளைப்பொருள் − ∑ (S0) வினைபடுப்பொருள்

S0r = [2S0(NH3) + S0(CO2)] − [S0(யூரியா) + S0 (H2O)]

∆S0r = [2 × 192.5 + 213.5] – [173.8 + 70]

∆S0r = [598.5] − [243.8]

∆S0r = 354.7Jmol−1K−1


தன்மதிப்பீடு

7) 351 K வெப்பநிலையில் 1 மோல் எத்தனாலை ஆவியாக்கும் போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக்கணக்கிடுக. எத்தனாலின் மோலார் ஆவியாதல் வெப்பமதிப்பு 39.84 kJ mol-1.

தீர்வு:

Tb = 351K 

ΔΗVap = 39840J mol−1

ΔSV = ΔΗVap / Tb

ΔSV = 39840 /351

ΔSV = 113.5JK−1mol−1



தன்மதிப்பீடு

8) 300K வெப்ப நிலையில் ஒரு வேதி வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே -10 kJ mole-1 மற்றும் -20 J deg-1 mole-1 எனில், வினையின் ΔG மதிப்புயாது? ΔH மற்றும் ΔS மதிப்புகள் மாறிலிகள் என கருதி 600 K வெப்ப நிலையில் வினையின் ΔG மதிப்பை கணக்கிடுக. வினையின் தன்மையை கண்டறிக.

தீர்வு:

∆H = −10kJ mol–1 = −10000 Jmol–1

∆S = 20JK–1mol–1

T = 300K

∆G =  ?

∆G = ∆H − T∆S

∆G = −10kJmol–1 − 300K × (−20 × 10) –3 kJ K–1mol–1 

∆G = − 4kJmol–1

At 600K

∆G = −10 – 600 × (–20 × 10−3).

∆G = − 10 + 12

∆G = +2KJmol−1

∆G எதிர்குறி மதிப்பு இருப்பதால் 300K−ல் வினை தன்னிச்சையானது.

∆G நேர்குறி மதிப்பு இருப்பதால், 600K−ல் வினை தன்னிச்சையற்றது.


Tags : Solved Example Problems with Answer கணக்குகளுக்கான தீர்வுகள்.
11th Chemistry : UNIT 7 : Thermodynamics : Evaluate Yourself: Thermodynamics(Chemistry) Solved Example Problems with Answer in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல் : தன்மதிப்பீடு: வெப்ப இயக்கவியல் - கணக்குகளுக்கான தீர்வுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 7 : வெப்ப இயக்கவியல்