Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்
   Posted On :  04.04.2022 12:52 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்

காலனியக்காலத்தில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே தீவிர தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது.

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்


செயல்பாடு

இந்திய-ஐரோப்பிய ஒன்றியம்

இந்தியாவிற்கு வளங்களும், நிபுணத்துவமும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து தேவைப்படுவது ஏன்? என்று விவாதிக்க.

காலனியக்காலத்தில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே தீவிர தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. காலனியாதிக்க நாடுகள் அல்லாத ஐரோப்பிய நாடுகள் கூட இந்திய "மக்களிடையே பணி செய்ய வந்தன" அல்லது இந்திய பண்பாடு மற்றும் கல்வி, சுகாதார சேவை, சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் மேம்பாட்டை ஆய்வு செய்ய வந்தன. ஒருபுறம் காலனியாதிக்கவாதிகளால் (நாடுகளால்) காலனியாக்கப்பட்டு பொருளாதார சுரண்டல் செய்யப்பட்ட காலகட்டமாக இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கிடையே கருத்துகளும் தொழில்நுட்பங்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை, மாறாக பண்பாடு மற்றும் சமூகத்தின் அனைத்து அடிப்படைப் பண்புகளும் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் அடிப்படையான சமூக இயல்புகளுடன் ஊடுருவியது "தேசியம்" எனும் உணர்வு, இது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரிய அளவிலான சுதந்திரத்திற்கான இயக்கம் தோன்றுவதற்கு வழிகோலியது.

வாஸ்கோடகாமா எனும் போர்ச்சுகீசிய மாலுமி 1498ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் – ஐரோப்பாவிற்கும் இடையேயான கடல் வழியை கண்டறிந்தார். அது இந்தியாவில் ஐரோப்பாவுக்கிடையே நேரடி வர்த்தகத்தை தொடங்கி வைத்தது. 



சுதந்திரத்திற்கு பின்பு உள்ள உறவுகள் (1947 முதல் இன்று வரை)

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஆங்கிலேய அரசால் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது தனது பிடியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தியாவை மத அடிப்படையிலான இரு நாடுகளாக பிரித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.

1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்தது குறிப்பாக விடுதலையடைந்த நாடுகளின் அங்கம் என்ற வகையில் (Commmon wealth) இங்கிலாந்துடன் முதன்மையான உறவுகளைக் கொண்டிருந்தது. இதர ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவானது பனிப்போரின் விளைவால் ஏற்பட்டவையே ஆகும். 1962ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்கு முன்பே, அணிசேரா நிலையை இந்தியா தழுவிக் கொண்டதால், சோவியத் ஒன்றியமானது அதன் நெருக்கத்தை அவநம்பிக்கையுடன் பார்த்தது. 1991ஆம் ஆண்டு இந்தியா தாராளமயத்தை துவக்கி வைக்கும் வரை வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இந்தியா குறைந்த அளவிலே ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளில் ஈடுபட்டிருந்தது.

1994ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. இது இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முதலில் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடு என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்தியஐரோப்பிய ஒன்றியத்தின் இறுக்கமற்ற பொருளாதார உறவு முடிவுக்கு வந்தது. எனினும், 2007ஆம் ஆண்டு முதல் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு 2013இல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமானது 201819 ஆம் ஆண்டு 104.3 பில்லியன் வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டணியாக இருந்தது, ஆனால் இப்போது முன்னேற்றம் கொண்டுள்ள உறவில் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றமானது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ப்ரெக்சிட் (பிரிட்டன் வெளியேற்றம்)

ஒரு மாதக்கால அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பிறகு, இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரசல்ஸ் உச்சிமாநாட்டில் பிரிட்டனின் வெளியேறும் முடிவினை ஏற்றுக் கொண்டன. 

ப்ரெக்சிட் என்றால் என்ன? 

• ப்ரெக்சிட் என்ற பதமானது "பிரிட்டன்" வெளியேறுவதைக் குறிப்பதற்கான வார்த்தையாகும். 

• ப்ரெக்சிட் என்பது இங்கிலாந்து (UK) ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதாகும். இது 2016ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 51.9% வாக்குப்பதிவு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சாதகமாக பதிவானது 

• லிஸ்பன் உடன்படிக்கையின் 50-வது சட்ட உறுப்பானது, முன்வைத்த இரண்டு ஆண்டு காலக்கெடு நிகழ்வு முறை மார்ச் 29, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து வெளியேறுவதுடன் முடிவடைகிறது. 

• மார்ச் 21, 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை, இங்கிலாந்தின் கோரிக்கையை ஏற்று, வெளியேறும் கெடுவை ஏப்ரல் 12, 2019 வரை நீட்டிக்க ஒத்துக்கொண்டது.

இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மற்றுமொரு சிக்கலானது, குடியேற்றம் மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றின் மீதான பொதுத் திட்டமாகும். சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் மற்றும் குடிமக்கள் இடம் பெயர்வதை ஒழுங்குப்படுத்துவது பற்றிக் கோருவதாகும்.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகத்தைக் கடந்து சில பொதுவான நலன்களைக் கொண்டிருக்கின்றன, அவை பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல், ஈரான் அணுக்கரு ஒப்பந்தத்தைப் பராமரித்தல், அணு ஆற்றல், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை உயர்த்துவது போன்றவை ஆகும். கூட்டாட்சி அமைப்பு முறையை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட்டாட்சி மக்களாட்சி அரசாங்க மாதிரி இந்தியா போன்ற பன்முக காலச்சாரம் உடைய நாடுகளுக்கு ஒரு முன் மாதிரி ஆகும்.

12th Political Science : Chapter 9 : India and the World : India-European Union Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்